என் கேள்விகளுக்கு பதில் நீ

  • 6

எழுத்துக்களின் கோர்வையில்
அர்த்தம் தெரியாதவளாய்
கோர்க்கப்பட்ட வினாக்களுக்கு
விடை தேடிக் கொண்டிருந்தேன்
சமுத்திரத்தைக் கணிக்க.

தேடல்கள் செறிந்து போய்
என்னுள் அதிகம் புதையுண்டு போனது
ஏனோ வளங்களோ கரிசனையோ
வெறுங்கையாய் இருந்தது பதில் பெற.

கருத்தியல் மட்டுமின்றி யதார்த்த வாழ்வின்
சுவாரஸ்யமான பக்கங்களை
தூசு தட்டிப் பார்க்கும் வினாக்களே அவை

வினாக்களுக்கும் விடிவு கிட்டும் என
விடை எதிர்பார்த்து
என் தாகம் தணிக்க வழி தேடினேன்
அவற்றிற்க்கு ஒற்றை பதில் நூலகம் தான்

ஏனோ காலம் செய்த
கிறுக்கலில் அவதிப்பட்டேன்
கண்ணுக்குத் தெரியா
அங்கியின் ஆட்டத்தால்
வீட்டோடு கைதியானேன்
மக்களோடு மக்களாய்.

தொழில்நுட்பத்தால் தொடுதிரை தொட்டு
தேட்டம் தீர்ந்து விடுமா என்ன?
நூல்களின் மேனி தடவி கருத்துக்களையும்
எழுத்துக்களையும் நுகர்வதுதான் பூரிப்பு.

ஆயிரம் சொற்களால் ஆழ்மனதில்
கருத்துக்களை விசுக்குவாய்
அற்புதமாக அறியாத மானிடரையும்
ஆட்டங்காண வைப்பாய் அவற்றால்.

காலத்துக் கொன்றும்
இங்கே விலங்கிடப் படவில்லை
காலதாமதம்தான்
உன்னிடம் வந்து சேருவேன்
என் கேள்விகளுக்கு பதில் நீ தான்

N.SOHRA JABEEN
AKKARAIPATTU
SOUTH EASTERN UNIVERSITY OF SRILANKA

எழுத்துக்களின் கோர்வையில் அர்த்தம் தெரியாதவளாய் கோர்க்கப்பட்ட வினாக்களுக்கு விடை தேடிக் கொண்டிருந்தேன் சமுத்திரத்தைக் கணிக்க. தேடல்கள் செறிந்து போய் என்னுள் அதிகம் புதையுண்டு போனது ஏனோ வளங்களோ கரிசனையோ வெறுங்கையாய் இருந்தது பதில் பெற.…

எழுத்துக்களின் கோர்வையில் அர்த்தம் தெரியாதவளாய் கோர்க்கப்பட்ட வினாக்களுக்கு விடை தேடிக் கொண்டிருந்தேன் சமுத்திரத்தைக் கணிக்க. தேடல்கள் செறிந்து போய் என்னுள் அதிகம் புதையுண்டு போனது ஏனோ வளங்களோ கரிசனையோ வெறுங்கையாய் இருந்தது பதில் பெற.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *