மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம்

திருப்பு முனை
பாகம் 14

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதை போல ஷரீப்பின் நடவடிக்கைகளும் முன்பு போல மாறி இருந்தன.

சில சமயங்களில் அவன் லீனாவுடன் காரணம் ஏதுமின்றி சண்டை போட்டான். காரணம் கேட்டாள் வார்த்தைகளால் அவளை திட்டி தீர்த்தான்.

இதனால் அவள் அவனுக்கு பயந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தாள். அவனது எல்லை தாண்டிய அடக்குமுறைகள் அவளுக்குள் ஓர் அமைதிப் புரட்சிக்கு வித்திட்டது.

ஒரு நாள் சலீமா தாத்தா வெகு கால இடைவெளிக்கு பிறகு வந்திருந்தாள். அவளிடம் லீனா சுகம் விசாரித்து கதைத்து கொண்டிருந்தாள்.

“தாத்தா கேக்குறேன்டு ஒன்டும் நெனக்க வானா. எனக்கு ஒரு ரெண்டு நாளக்கி ஒஙட 4nஅ கொஞ்சம் தாரிங்களா. please”

“அல்லாஹ் அதுக்கு என்னா தங்கச்சி இந்தாங்க” என்று சலீமா 4nஐ நீட்டினாள்.

லீனாவுக்கு உள்ளம் குளிர்ந்தது. சலீமாவுக்கு மனதார நன்றி கூறினாள்.

சிறிது நேரத்தில் சலீமா தாத்தாவும் சென்று விட லீனா கதவை மூடி விட்டு அறைக்குள் வந்தாள். அவள் அவளது சித்திக்கி கோல் செய்து தனது வாழ்வின் உண்மை நிலையை எடுத்து கூறினாள். சித்திக்கோ இடி விழுந்தது போன்றிருந்தது.

“என்ன லீனா சொல்றீங்க? இவ்வளவு நடந்தும் ஏன் ஒரு வார்த்த சரி சொல்லல்ல.”

“இல்ல சாச்சி நானும் நெனச்சேன் போக போக எல்லாம் சரி வரும்டு. ஆனா ஒன்டும் சரி வார மாதிரி படுதில்ல. எனய ஊட்டுக்கு கூட்டி போங்களேன். எனக்கு பயம் நா என்னா சரி தப்பான முடிவு எடுத்துடுவேனோ என்டு. எனக்கு பைத்தியம் புடிக்கிற மாதிரி இரிக்கி சாச்சி.” லீனா கதறினாள்.

“இங்க பாருங்க லீனா. எனக்கு வெளங்குது ஒஙட நெலம. நீங்க அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வானா. பொறுமயா இரிங்க. நா எல்லாரோடயும் இத பத்தி பேசிட்டு சொல்றேன்.”

“சாச்சி நா சொன்னேன் number எடுத்தேன்டு. அத இப்ப தரவா. கொஞ்சம் தேடி பாருங்களேன். என்னா நடந்திரிக்கி என்டு.”

“ஓ நீங்க number அ தாங்க பாப்பம் என்ன நடந்தன்டு.” திடீரென்று அழைப்பு துண்டிக்கப்பட்டது.

‘ச்சே அல்லாஹ்வே சல்லி முடிஞ்சிட்டே. என்னா செய்ற’ ஷெரீனுக்கு கோல் எடுத்தாள் No Answer.

‘மத்த யாருக்கும் கோல் எடுக்க ஏலா. அவங்கட numbers dialog இல்லயே. என்ன செய்ற மிஸ் கோல் பண்ண மட்டும் தான் சல்லி இரிக்கி யாருக்கு சொல்ற.


அப்போது அவளுக்கு ஷாகிரின் ஞாபகம் வந்தது. அது வேறு யாருமில்லை அவளின் சிறு வயது நண்பன். அவனுக்கு மிஸ் கோல் அடித்தாள். சிறிது நேரத்தில் அவனிடம் இருந்து அழைப்பு வந்தது.

‘பேசுவோமா வானமா’ என்று சிந்தித்தவளுக்கு பேச தயக்கமாக இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லை என்று அறிந்து பேசினாள்.

“ஹலோ”

“அஸ்ஸலாமு அலைக்கும்”

“வஅலைக்கும் ஸலாம். யாரு இது?”

“நீங்க ஷாகிரா?”

“ஓ நீங்க யாரு?”

“நா லீனா”

“ஓ நீங்களா புதுனம் நீங்க பேசுறீங்க. சொகமா இரிக்கிறீங்களா?”

“அல்ஹம்துலில்லாஹ். நீங்க?”

“ஓ. நல்லா இரிக்கிறேன்.”

“எங்க ஒஙட மாப்பு”

“அவர் இப்ப வெளிய பெய்த்து.”

“அப்பிடியா? எப்படி life போகுது”

“ம்ஹூம். நல்லா போகுது.”

“ஒஙட உம்மாக்கு சொகமில்ல தானே. பாக்க வரல்லயா நீங்க.”

“ஓ நா பார்த்துட்டு தான் வந்தேன். சரி நீங்க இப்ப எங்க இருக்குறீங்க.”

“நா இப்ப ஒரு பயணம் ஒன்டு போறேன். ஏன்?”

“ஆ எனக்கு ஒரு help பண்ணுவீங்களா.”

“என்னது சொல்லுங்க?”

“கோவிக்காம எனக்கு ஒரு dialog card ஒன்டு போட்டு உட ஏலுமா. please”

“ஆ Ok போடுறேன். ஏன் லீனா என்ன சரி பிரச்சினயா?”

“இல்ல சின்ன பிரச்சின ஒன்டு. நா ஒங்களுக்கு பொறகு சொல்றேன். இந்த number கு மறுகா கோல் எடுக்காதீங்க. இது ஏன்ட 4n இல்ல.”

“சரி அப்ப. என்னா சரி help தேவன்டா கேளுங்க. செய்றேன்.”

“இந்த வார்த்தயே பெருசு. jazakallaah lots. நா பொறகு பேசுறேன். ஒன்டும் நெனக்க வானா. ஏன்ட நெலம அப்படி.” என்று விட்டு அழைப்பை துண்டித்தாள்.

அவன் 200 ரூபாய்க்கு card போட்டிருந்தான். அவள் அந்த உதவிக்காக அவனுக்காக இறைவனிடம் மனதார பிராத்தித்தாள்.


மீண்டும் சித்திக்கு அழைப்பு எடுத்து நடந்ததை கூறினாள் லீனா.

“நா நெனச்சேன் ஷரீப் வந்து என்டு. அது தான் நா மறுகா கோல் எடுக்கல்ல. நீங்க வைங்க. நா கோல் எடுக்குறேன்.”

சித்தி கோல் எடுத்தாள்.

“சொல்லுங்க லீனா. எங்க அந்த number?”

அவள் அன்று குறித்து வைத்த number ஐ சித்திக்கு சொன்னாள்.

“சரி லீனா. நீங்க ஒன்டும் யோசிக்க வானா. நா விசாரிச்சி சொல்றேன் சரியா.”

“சரி சாச்சி.”

சிறிது நேரம் பேசி விட்டு அழைப்பை துண்டித்தாள் லீனா.

தொடரும்.
Noor Shahidha.
SEUSL.
Badulla
Author: admin