நீயும் மாற வேண்டும்.

  • 13

நான் சிறியவனாக இருந்தபோது என் தந்தை மீது கோபப்பட்டேன். நான் தந்தையானபோது என் தந்தை சரியாகத்தான் நடந்து கொண்டார் என்பதைப் புரிந்து கொண்டேன்.

நான் சிறியவனாக இருந்தபோது பெற்றோரை மீறி நடந்தேன். நான் பெற்றவனாக மாறிய போது என் பிள்ளை மூலம் அந்த வலியை அனுபவிக்கின்றேன். என் பெற்றோரின் வலியையும் புரிந்து கொண்டேன். நான் மாணவனாக இருந்தபோது என் ஆசிரியரை விமர்சித்தேன். நான் ஆசிரியரான போது அவர் சரியாகத்தான் இருந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

காலங்கள் சுழல்வதற்கு முன் நீ தவறாகக் கருதும் பிறர் செயலை நியாயப்படுத்தும் காரணங்களைத் தேடிக்கொள். பிறரும் உண்மையானவர்கள் என்பதைத் தெரிந்துகொள்வாய். விமர்சனங்கள் இலகுவாவை. அதனால் ஏற்படும் வலிகளும் இழப்புக்களும் ஆபத்தானவை. பிறகு நீ கைசேதப்படலாம், மன்னிப்பும் கோரலாம். ஆனால் உடைந்த மனதையும் ஏற்பட்ட இழப்பையும் ஈடுசெய்வது கடினமாகலாம்.

நீ மட்டும் சரியானவன்; ஏனையோர் பிழையானவர்கள் என்ற உன் அகங்காரத்தைக் களைந்து விடு. உன் வயதுக்கேற்ப நடந்துகொள். உன் வயது சிலரின் அனுபவமாக இருக்கக் கூடும்.

எனவே பிறருக்கு மரியாதை செய். கண்ணியம் கொடு. அவர்களுடன் அன்பாகப் பேசு. பண்பாடுடன் நடந்து கொள். காலம் வேகமானது. கறைபடிந்த உன் உள்ளத்துக்கு எதிர்காலம் கசப்பானவற்றைக் கூட  கற்றுத் தரலாம்.

பாஹிர் சுபைர்

நான் சிறியவனாக இருந்தபோது என் தந்தை மீது கோபப்பட்டேன். நான் தந்தையானபோது என் தந்தை சரியாகத்தான் நடந்து கொண்டார் என்பதைப் புரிந்து கொண்டேன். நான் சிறியவனாக இருந்தபோது பெற்றோரை மீறி நடந்தேன். நான் பெற்றவனாக…

நான் சிறியவனாக இருந்தபோது என் தந்தை மீது கோபப்பட்டேன். நான் தந்தையானபோது என் தந்தை சரியாகத்தான் நடந்து கொண்டார் என்பதைப் புரிந்து கொண்டேன். நான் சிறியவனாக இருந்தபோது பெற்றோரை மீறி நடந்தேன். நான் பெற்றவனாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *