மனக் கீறல்களின் வலி

  • 11

நான்கு சுவற்றுக்கு நடுவில்
சுடர் விட்டு ஒளிரும்
மெழுகின் ஓலக்குரல் இது!

யாரும் அற்ற அறையில்
கண்ணீருடன் கரைந்து கொண்டிருக்கும்
என் கவலைகளை கேட்போர்
எவரும் இல்லையே அருகில்!

நொடிக்கொரு முறை
அண்ணாந்து வானத்தை பார்க்கிறேன்
நீண்ட பெருமூச்சுடன்!

எனது பேச்சுக்கு செவிசாய்க்காது
என்னை தூர தள்ளி விட்டு
கதறி அழும் உள்ளத்தை
இறைவனிடம் குற்றம் சாட்டுகிறேன்.

எப்படி அரவணைக்க?
எதைச் சொல்லி ஆறுதல் படுத்த?
எதுவுமே விளங்கவில்லை!

பாசம் என்ற பெயரால்
மோசம் செய்த உறவின்
துரோகத்தின் வலி மீண்டும்
வதைக்கிறது – தனிமையில்!

இது வெறும் துரோகத்தின்
வலி மட்டும் அல்ல.
சிதைக்கப்பட்ட ஒரு வாழ்வின் வலி!

திடீரென வீசிய காற்றால்
எங்கும் இருள் சூழ்ந்தது
எதையும் என்னால்
காணவும் முடியவில்லை.

நிசப்தமான பொழுதுகளை
மௌனமான காயங்களுடன்
கழித்துக் கொண்டிருக்கிறேன்.

காலங்கள் பறந்து போனாலும்
சில காயங்கள் மறைந்து போவதில்லை.
காரணம் இது வெறும் காயம் அல்ல!
தாறுமாறாக வெட்டப்பட்ட
மனக் கீறல்களின் வலி

Noor Shahidha
SEUSL
Badulla

நான்கு சுவற்றுக்கு நடுவில் சுடர் விட்டு ஒளிரும் மெழுகின் ஓலக்குரல் இது! யாரும் அற்ற அறையில் கண்ணீருடன் கரைந்து கொண்டிருக்கும் என் கவலைகளை கேட்போர் எவரும் இல்லையே அருகில்! நொடிக்கொரு முறை அண்ணாந்து வானத்தை…

நான்கு சுவற்றுக்கு நடுவில் சுடர் விட்டு ஒளிரும் மெழுகின் ஓலக்குரல் இது! யாரும் அற்ற அறையில் கண்ணீருடன் கரைந்து கொண்டிருக்கும் என் கவலைகளை கேட்போர் எவரும் இல்லையே அருகில்! நொடிக்கொரு முறை அண்ணாந்து வானத்தை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *