விவாகரத்துகள் ஏன் துரிதமாக நிகழ்கின்றன?

  • 6

விவாக வாழ்வு தம்பதியர்கள் இருதரப்புக்கும் அல்லது ஒரு தரப்புக்கு பொருந்தி வராத போது நிகழும் மோசமான ஒரு விடயமாக விவாகரத்து அமைந்துள்ளது. பலபோது அது பாதிக்கப்பட்ட ஒரு தரப்புக்கு மகிழ்வையும் அடுத்த தரப்புக்கு விடுதலையையும் பெற்றுக்கொடுப்பதாக அமைகிறது. எப்போதும் நெருக்கடியுடன் வாழ்வில் புதையுண்டு கிடைக்காமல் புதிய வாழ்வு ஒன்றின் பால் மனித உள்ளங்களை நகர்த்த இறைவன் வைத்துள்ள நியாயமான சுதந்திரமான ஒழுங்கு முறை தான் விவாகரத்தும் அதற்கான ஒழுங்குகளும். ஆனால் அதற்கான இறுக்கமான ஒழுங்கு முறைகள் விதிகள் இஸ்லாமிய சட்ட மரபில் உள்ள போதும் அது பல மனிதர்கள் மூலம் விளையாட்டாக ஆக்கப்பட்டுள்ளதால்த்தான் இன்று கணிசமான விவாகரத்துகள் நிகழ்கின்றன என்பது கண்கூடு. திருமண வாழ்வின் யதார்த்தம் புரியாததன் விளைவு தான் இன்று எமது சமூகத்தில் அன்றாடம் நிகழும் துரிதமாக நிகழும் அதிகமான விவாகரத்துக்கள்.

வாட்ஸப்பில் சந்தித்து அதிலே இருவருமாக பேசி தீர்வாகி அதிலேயே குடும்பம் நடத்தி அதனாலேயே விவாகமும் நிகழ்ந்து காலப்போக்கில் விவாகரத்தும் நிகழ்ந்து விடும் அதிசய உலகில் வாழ்கின்றோம். பல விவாகரத்துக்களின் பின்னால் இத்தகைய கள்ளத்தொடர்புகள் அநேகமான அமைந்துள்ளன.

இறைவன் வெறுத்த ஒரு விடயமாக விவாகரத்து உள்ளது. ஆனாலும் அதற்கான முறையான இறுக்கமான ஒழுங்குகள் உள்ளன. காழி நீதிபதிகள் போன்ற பொறுப்பானவர்களின் அசமந்தம், சார்புப்போக்கு மற்றும் அசிரத்தை காரணமாகவும் விவாகரத்துக்கள் நிகழ்கின்றன. சேர்த்து வைப்பதில் காட்டப்படும் அசௌகரியத்தை கண்டுகொள்ளாமல் தேடாமல் நொண்டிக் காரணம் அல்லது சாத்தியமின்மையை விட இணைத்து வைக்க முடியுமான இடங்களை இனங்காணாமை உளவியல் சார்ந்தும் வழிகாட்டல் ஆலோசனை சார்ந்தும் வழிநடாத்தும் ஆண்/பெண் உளவியல் நிபுணர்கள் நீதிமன்றங்களில் இல்லாமையும் முக்கிய அம்சமாகும்.

ஆனாலும் ஆங்காங்கே உள்ள நெகிழ்வும் தளர்வும் ஓட்டைகளும் சில தரப்புக்களுக்கு வாய்ப்பாக உள்ளதாலும் சட்டத்தின் நேரடி தலையீடு உரிய அளவு அழுத்தம் சகிதம் பிரயோகிக்கப்படாமை காரணமாகவும் அதிகாரமும் செல்வாக்கும் பொருந்திய தரப்பு அதனை துஷ்பிரயோகம் செய்து வருவதையும் கண்டுகொள்ளலாம்.

இஸ்லாமிய விவாகரத்து வழக்குகள் தேசிய நீதிமன்றங்களிடம் விடப்பட்டால் அதன் இறுக்கமான போக்கு சட்டங்கள் காரணமாக தண்டப்பணம் செலவு தாபரிப்புகள் காரணமாக இலகுவான விவாகரத்துக்கள் குறையும் வாய்ப்பும் உள்ளன.

விவாகம் என்பது இறைவன் உலகில் வகுத்த முதலாவது சமூக ஒழுங்கு. அதுவே முதல் வணக்கம்.உலகில் இறைவன் கட்டளையாக்கிய முதலாவது சமூக அலகு. அதே நேரம் இறைவன் வெறுப்புடன் அனுமதித்த வெறுத்த ஒரு விடயம் விவாகரத்து ஆகும். தலாக் அல்லது மணமுறிவு அல்லது விவாகரத்து எனப்படுவது அத்தகைய இறை அருள் பொருந்திய இரு மனித மனங்களின் உறவில் ஏற்படும் முறிவாகும்.

விவாகரத்து ஏன் நிகழ்கின்றன? என்பதற்கான மிகவும் எளிய மேலோட்டமான சில விடயங்களை மட்டும் இங்கு எளிமையாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவை தவிர்ந்த மிகவும் பயங்கரமான காரணிகளும் உள்ளன என்பதை வாசகர்கள் மனங்கொள்ளவும்.

திருமண வாழ்வில் எந்த வகையிலும் பொருத்தப்பாடு பார்க்கப்படாமை.

மணமகன் மணமகள் பொருத்தப்பாடு குறித்து (வயது, கல்விப்புலம், பொருளாதாரம், இயல்பு) சிந்திக்காமல் காதல் திருமணங்கள் நிகழ்வதாலும் அல்லது பெற்றோரின் விருப்பத்துடன் நிகழ்வதாலும் அல்லது ஒரு பக்க சார்புடன் நிகழ்வதாலும் காலப்போக்கில் இத்தகைய விடயங்கள் பூதாகரமாகி தமக்குள்ள பொருத்தப்பாடின்மை அல்லது ஒவ்வாமை படிப்படியாக வெளித்தோன்றி வளர்ந்து முற்றி விடுவதால் இருவருக்குள்ளும் இரு குடும்பத்துள்ளும் மோதலும் முரண்பாடும் வெறுப்பும் தோன்றுகின்றன. இவை மணமுறிவுக்கும் விவாகரத்துக்கும் வழிவகுக்கும்.

பொருளாதாரம் சார்ந்த விடயங்கள்.

தொழிலின்மை, போதிய வருமானமின்மை, வீண் செலவு, வருமானத்தை விஞ்சிய செலவு அளவு கடந்த உழைப்பின் காரணமாக விவாக வாழ்வில் முறையாக ஈடுபட முடியாத வாழ்வு. பணம் பொருள் வசதி என அனைத்தும் இருந்தும் மகிழ்வான வாழ்வு இன்மை, வறுமை காரணமாக வாழ்வை முறையாக கொண்டு செல்ல முடியாமை. வெளிநாட்டு வேலை காரணமாக ஏற்படும் குடும்ப, சமூக விவகாரங்கள் இடைவெளிகள் வேறுதொடர்புகள் போன்றன.

உளவியல் சார்ந்த அம்சங்கள்.

கணவனை மனைவி மனைவியை கணவன் புரிந்து கொள்ளாமை. விட்டுக்கொடுக்காமை. கணவன் மனைவி குடும்பங்கள் பரஸ்பரம் புரிந்து கொள்ளாமை விட்டுக்கொடுக்காமை, கணவன் மனைவி எனும் உறவுக்கு அப்பாற்பட்டு மூன்றாம் நான்காம் நபார்களின் பிரச்சினைகள் அவற்றில் தலையிடுதல் தலையீடு செய்தல் தீர்ப்பு சொல்ல முனைதல் மூக்கை நுழைத்தல் போன்றன. பாராட்டாமை, புகழாமை, புரிந்துகொள்ளாமை, விட்டுக்கொடுக்காமை, அவமதித்தல், அவதூறு கூறுதல். அடித்தல், ஏசுதல், ஏளனம் செய்தல், மூன்றாம் நபாரின் குடும்ப வாழ்வு குறித்து நோக்குதல் சிந்தித்தல் ஒப்பிடுதல் பரஸ்பரம் சுட்டிக்காட்டல், குத்திக்காட்டல், போன்றன.

முறைகேடான தொடர்புகள்.

சமூக வலைதளங்கள் வாயிலாக தொழில் சார்ந்த ரீதியில் ஏற்படும் சந்தேகத்துக்கிடமான மற்றும் தெளிவான முறை சாராத உறவுகள் உரையாடல்கள் தொடர்புகள் காரணமாக நிகழ்கின்றன.

விவாக வாழ்வின் நோக்கத்திற்கு தடையாக உள்ள பயங்கரமான நோய்கள்.

குடும்ப வாழ்வில் இன்பமோ திருப்தியோ அற்ற உளவியல் தேவைகள் அற்ற நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும். பாலியல் சார்ந்த நோய்கள். தாம்பத்திய வாழ்வில் குழந்தை பேரின்மை சார்ந்த நோய்கள். இதர நாட்பட்ட நோய்கள் காரணமாக

போதைப்பொருள் பாவனை.

M.M.A.BISTHAMY

விவாக வாழ்வு தம்பதியர்கள் இருதரப்புக்கும் அல்லது ஒரு தரப்புக்கு பொருந்தி வராத போது நிகழும் மோசமான ஒரு விடயமாக விவாகரத்து அமைந்துள்ளது. பலபோது அது பாதிக்கப்பட்ட ஒரு தரப்புக்கு மகிழ்வையும் அடுத்த தரப்புக்கு விடுதலையையும்…

விவாக வாழ்வு தம்பதியர்கள் இருதரப்புக்கும் அல்லது ஒரு தரப்புக்கு பொருந்தி வராத போது நிகழும் மோசமான ஒரு விடயமாக விவாகரத்து அமைந்துள்ளது. பலபோது அது பாதிக்கப்பட்ட ஒரு தரப்புக்கு மகிழ்வையும் அடுத்த தரப்புக்கு விடுதலையையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *