என் கணவன் தற்போது பஜ்ர் தொழுகைக்காக பள்ளிவாசலை திறக்கிறார்

  • 10
கணவனுக்காக உருகிய மனைவியும். அருளாளன் அல்லாஹ்வின் கருணையும். சிறுசிறு விடயங்களுக்காக விவாகரத்தை நாடும் கணவன் மனைவிக்கான உண்மைச் சம்பவம்.

டீவியில் மார்க்க நிகழ்ச்சியொன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பெரும் அறிஞர்களில் ஒருவரான எமிரேட்ஸ் நாட்டின் மார்க்க அறிஞர்கள் சபைத் தலைவர் அஷ் ஷேக் அப்துல்லா அவர்கள் மார்க்க விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு விடயத்தில் மார்க்கத் தீர்ப்பைப் பெற்றுக்கொள்ள அல்ஜீரிய பெண்ணொருத்தி அவருடன் தொடர்பை ஏற்படுத்துகின்றார்.

நான் அல்ஜீரியாவைச் சேர்ந்த அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் முஸ்லிம் பெண். ஆனால் என் கணவரோ மது அருந்துகின்றார். இரவின் கடைசிப் பகுதியிலேயே வீட்டுக்கு வருவார். ஒரு நாள் இரவு நான் அல் குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும்போது வீட்டுக்குள் நுழைந்தவர் என் கையிலிருந்த அல் குர்ஆனை பறித்தெடுத்து கிழித்து பாத்ரூமுக்குள் எறிந்து விட்டார். இவரோடு என்னால் வாழ முடியுமா? அல்லது விவாகரத்துக் கோரவா? என்ன சட்டம்”. என்று கேட்டாள்.

இருவருக்குமிடையில் கீழ்வரும் உறையாடல் தொடர்கிறது.

அறிஞர்: உமக்கு பிள்ளைகள் இருக்கின்றனரா?

பெண்: ஆம். ஐந்து பிள்ளைகள்.

அறிஞர்: உனக்கு குடும்பம் இருக்கின்றதா.

பெண்: ஆம். ஆனால் அவர்கள் வெகு தூரத்தில் கிராமத்தில் வசிக்கின்றனர். நான் தலைநகரில் வசிக்கின்றேன்.

அறிஞர்: தற்போது உன்னை ஆதரிக்க யாராவது இருக்கின்றனரா?

பெண்: இல்லை. எனது பிள்ளைகள் இன்னும் சிறார்கள்.

அறிஞர்: அவ்வாறெனில் உன் இடத்தில் அப்படியே பொறுமையாக இரு. விவாரத்தும் கோரவேண்டாம். எந்தப் பிரச்சினைக்கு நீ போகவும் வேண்டாம்.

பெண்: எவ்வாறு ஷேக் நான் பொறுமை காப்பது. இதற்கு என்ன கூறப்போகின்றீர்கள்.

அறிஞர்: மகளே! நீர் உன் கனவரை விட்டுப் பிரிந்து சென்றால் நிலைமை இன்னும் மோசமாகலாம். அல் குர்ஆனை கிழித்து வீசும் ஒருவருக்குப் பகரமாக ஆறு பேர் தோன்றுவர். ஏனெனில் உன் கணவர் பிள்ளைகளை கொண்டு செல்வார். அவரது இயல்பிலும் குணத்திலுமே அவர்கள் வளர்வார்கள். மது அருந்துவார்கள்; அல் குர்ஆனை கிழிப்பார்கள். நீ பிரிந்து வீட்டை விட்டுச் செல்வதில் எந்தத் தீர்வுமில்லை. எனவே பொறுத்திரு. உன் பிள்ளைகளைக் காக்கும் பாலமாக இரு. என்றாலும் உன் கணவரின் நேர் வழிக்காக இரவு வணக்கங்களில் ஈடுபட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்.

பெண்: இன்ஷா அல்லாஹ்.

**********************************

நாட்களும் மாதங்களும் கடந்து சென்றன. ஒரு வருடத்தின் பின்னர் குறித்த அறிஞர் மற்றுமொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். பலர் தம் சந்தேகங்களைக் கூறி தெளிவுபெற்றனர். அந்த அல்ஜீரிய பெண்ணும் தொடர்பை ஏற்படுத்தியிருந்தார்.

பெண்: அஸ்ஸலாமு அலைகும் ஷேக்.

அறிஞர்: வஅலைகுமுஸ் ஸலாம்.

பெண்: என்னை ஞாபகமில்லையா ஷேக்.

அறிஞர்: இல்லை.சற்று அறிமுகம் செய்யலாமா?

பெண்: நான்தான். ஒரு வருடத்திற்கு முன் தொடர்பை ஏற்படுத்தி மது அருந்தும் என் கணவர் பற்றிக் கூறிய அல்ஜீரிய பெண்.

அறிஞர்: ஆஹா. இப்போது அறிந்து கொண்டேன். உன் நிலைமை எப்படி மகளே.

பெண்: ஷேக். தற்போது என் கணவர் பஜ்ர் தொழுகைக்காக பள்ளியின் கதவைத் திறக்கின்றார். பாங்கு சொல்கின்றார். இரவு வணக்கங்களில் ஈடுபடுகின்றார். அல் குர்ஆன் ஓதுகின்றார். அனைத்து கடமையான, சுன்னத்தான தொழைகைகளையும் தொழுகின்றார். அல்லாஹ் என் கணவருக்கு உண்மையான நேர்வழியை வழங்கிவிட்டான். என்று கூறி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

அவள்தான் உண்மையுடன் அல்லாஹ்வை நெருங்கி பொறுமையுடன் முயற்சி செய்த பெண். அல்லாஹ் அவளது முயற்சியையும் பொறுமையையும் அவளது தூய்மையான உள்ளத்தையும் அறிந்து அவளது பிரார்த்தனையை அங்கீகரித்து விட்டான்.

முதலாவதாக இது அல்லாஹ்வின் பேரருள். பின் அந்த மனைவியின் பொறுமையும் அவளது அர்ப்பணிப்பும் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையின் அறுவடை. அத்துடன் அந்த அறிஞரின் மார்க்கத் தீர்ப்பின் சிறப்பு.

சிறுசிறு விடயங்களுக்காக விவாகரத்தை நாடும் கணவன்மார்களே! மனைவியரே! சிந்தித்து செயற்படுங்கள்.

அமானிதமான உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை வீணாக்கி விடாதீர்கள். அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள். பண்பாடுள்ள சமூக உருவாக்கத்துக்காக சற்று பொறுமையுடன் பயணியுங்கள். அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழியை வழங்கி அருள் பாலிப்பானாக.

பாஹிர் சுபைர்

கணவனுக்காக உருகிய மனைவியும். அருளாளன் அல்லாஹ்வின் கருணையும். சிறுசிறு விடயங்களுக்காக விவாகரத்தை நாடும் கணவன் மனைவிக்கான உண்மைச் சம்பவம். டீவியில் மார்க்க நிகழ்ச்சியொன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பெரும் அறிஞர்களில் ஒருவரான எமிரேட்ஸ் நாட்டின் மார்க்க…

கணவனுக்காக உருகிய மனைவியும். அருளாளன் அல்லாஹ்வின் கருணையும். சிறுசிறு விடயங்களுக்காக விவாகரத்தை நாடும் கணவன் மனைவிக்கான உண்மைச் சம்பவம். டீவியில் மார்க்க நிகழ்ச்சியொன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பெரும் அறிஞர்களில் ஒருவரான எமிரேட்ஸ் நாட்டின் மார்க்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *