ஏழைக்குமரியின் குமுறல்

  • 9

ஏழை அவள் – எஜமானவனின்
எல்லை இல்லா
ஏச்சுக்கும் பேச்சுக்கும்
இரையானவள்

வாயில்லா ஜுவனவள்
வயிற்றுப்பசிக்கு – வேறு
வழியில்லாமல் தான்
சென்றாள் அங்கே கூலி வேலைக்கு
அவ்வழியும் வலியாய்ப்
போகுமென்பதை அறியாமல்

அனாதை இவளுக்கு
ஆதரவு அவள் – தம்பி மட்டுமே
தன் கல்விக்கு
முற்றுப்புள்ளி வைத்தாள் – தம்பி அவன்
கல்வி முற்றுப்பெறாதிருக்க

தம்பியை என்றுமே
சுமையாய் நினைக்கவில்லை
குடும்பப் பாரம் அவளுக்கு
சுமையாய் தெரியவுமில்லை

ஏழையாய் பிறப்பதை
அவள் அறியவுமில்லை
என்றுமே ஏழையாயிருக்க- அவள்
விரும்பவுமில்லை

விடியல்கள் ஒரு போதும்
விரும்பியதாய் இருக்கவில்லை
இரவுகள் ஒரு போதும்
இனிமையாய் இருக்கவுமில்லை

வருடங்கள் கழிந்தோட
வயதும் அது சரியானதே – திருமணத்திற்கு
இருந்தும் அவள் எண்ணம்
ஒன்றே – தம்பி அவன் எல்லாமாயிருக்க
வேறு துணை எதற்கென்று

சிதறிய எண்ணங்கள் பல அவளுக்குள்
சிறகிறுந்தும் பறக்க முடியா பறவையாய் –
ஏழைக்குமரியாய்
குமுறல்கள் பல இவளுக்குள்
கேட்கத்தான் யாருமில்லை

சதீகா சம்சுதீன்
தொழிநுட்ப பீடம்
கொழும்பு பல்கலைக்கழகம்

ஏழை அவள் – எஜமானவனின் எல்லை இல்லா ஏச்சுக்கும் பேச்சுக்கும் இரையானவள் வாயில்லா ஜுவனவள் வயிற்றுப்பசிக்கு – வேறு வழியில்லாமல் தான் சென்றாள் அங்கே கூலி வேலைக்கு அவ்வழியும் வலியாய்ப் போகுமென்பதை அறியாமல் அனாதை…

ஏழை அவள் – எஜமானவனின் எல்லை இல்லா ஏச்சுக்கும் பேச்சுக்கும் இரையானவள் வாயில்லா ஜுவனவள் வயிற்றுப்பசிக்கு – வேறு வழியில்லாமல் தான் சென்றாள் அங்கே கூலி வேலைக்கு அவ்வழியும் வலியாய்ப் போகுமென்பதை அறியாமல் அனாதை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *