ஒனய படிக்க உடுவ தானே ஓன்ட மாப்புள?

திருப்பு முனை
பாகம் 18

லீனா வீட்டு வேலைகளை முடித்து விட்டு வந்து கைத்தொலைபேசியை கையில் எடுத்தாள். எடுத்த எடுப்பிலேயே மீதியை பார்த்தாள். 6 ரூபாய் தான் மீதமிருந்தது.

இது போதாதே, சரி ஷெரீனுக்கு card ஒன்டு போட சொல்வோம் என நினைத்து அவளுக்கு அழைப்பை எடுத்தாள்.

“ஹலோ!”

“மறுமுனையில் ஒரு ஆணின் குரல். அது ஷெரீனின் கணவன்.”

“ஹலோ! ஷெரீன் இரிக்கிறாவா”

“அவ ஊட்ல நா இங்க townல இரிக்கிறேன். யாரு நீங்க?”

“ஆ, லீனா கோல் எடுத்தன்டு சொல்லுங்க.”

“சரி நா ஊட்டுக்கு பெய்த்து அவக்கு ஒங்களுக்கு ஒரு கோல் எடுக்க சொல்றேன்.”

“சரி நானா”

அழைப்பு துண்டிக்கப்பட்டது. பிறகு சித்திக்கு கோல் எடுத்தாள். பதிலில்லை. மீண்டும் ஷாகிரின் ஞாபகம் வந்தது. ஆனாலும் மறுமுறை அவனிடம் உதவி கேட்க அவளுக்கு தயக்கமாக இருந்தது. அவளுக்கு தெரிந்த ஒரு நானாவின் நினைவு வரவே உடனே அவருக்கு கோல் எடுத்தாள்.

மறுமுனையில்.

“ஹலோ!”

“ஹலோ! நா லீனா பேசுறேன்.”

“ஓ! நீங்களா. புது நம்பர் அது தான் திட்டம் இல்ல. நீங்க சொகமா.”

“ஓ! நானா. அல்ஹம்துலில்லாஹ் நல்ல சொகம். நீங்க.”

“அல்ஹம்துலில்லாஹ். நாங்களும் சொகமா இரிக்கிறோம்.”

“ஆ! நல்லம்.”

“இனி ஒஙட புது life எல்லாம் எப்படி போகுது. husband சொகமா?”

“ஓ! நல்ல சொகம். எப்படியோ போகுது நானா.

“இனி என்னா கத?”

இரிக்கிறேன் நானா. நானா எனக்கு ஒரு help வேணும். செய்ய ஏலுமா?”

“ஓ! என்ன help சொல்லுங்க.”

“எனக்கு card ஒன்டு போட்டுட ஏலுமா please.”

“ஆ. ok இந்த number கா போடனும்?”

“ஓ. நானா.”

“Ok நா இப்பயே போட்டு உடுறேன். அப்ப நா பொறகு பேசுறேன்.”

“சரி நானா. பெரிய help ஒன்டு. jazakallaah hair.”

“Barakallaah help தேவன்டா சொல்லுங்க.”

“சரி நானா inshallaah சொல்றேன்.”

ஓர் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த லீனாவுக்கு இந்த உதவி அன்று வானத்தை விடவும் விசாலமாக தெரிந்தது. மனிதம் இன்னும் சாகவில்லை உயிரோடு தான் இருக்கிறது என்பதை அவள் உணர்ந்தாள். அல்ஹம்துலில்லாஹ்.

200 ரூபாய்க்கு ரீலோட் வந்திருந்தது. அது அவளுக்கு தாரளமாக இருந்தது. உடனே நண்பி அம்னாவுக்கு கோல் எடுத்தாள். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவளோடு பேசினாள்.

“அம்னா கெம்பஸ் கு நீங்க apply பண்ணிட்டீங்களா?”

“ஓ! பண்ணியாச்சு. ஒனக்கும் apply பண்ணிட்டாங்க”

“உண்மயாவா எப்படி?”

ஓன்ட documents file எனக்கிட்ட தானே இருந்திச்சி. அத வெச்சி ஒனக்கு எல்லாம் அனுப்பிட்டாங்க. ஓன்ட number யாருக்கிட்டயும் இல்லயே. அதான் இத சொல்ல கெடக்கல்ல”

“அல்ஹம்துலில்லாஹ். நா பயந்து பெய்த்து இருந்தேன். எனக்கு apply பண்ண கெடக்காம மிஸ் ஆகிடுமோன்டு. நல்ல நேரம் அல்லாஹ் காப்பாத்தினான்.”

“ம்ம. ஒனய படிக்க உடுவ தானே ஓன்ட மாப்புள?”

“தெரியா என்ன நடக்கும்டு. ஆனா எப்படி சரி படிக்க வருவேன் inshallaah. துஆ செய்ங்க.”

“ஏன்டி ஏதாவது விஷேசமா?”

அல்லாஹ் ஏன்ட நெலம தெரியாம கேள்வி கேக்குறாளே. லீனா மனதுக்குள் கூறிக் கொண்டே,

“அப்படி ஒன்டும் இல்ல. இருந்தா சொல்லாம இருப்பேனா.”

“அது தானே பார்த்தேன். சரி இனி ஓன்ட life எல்லாம் எப்ப போகுது.”

“அம்னா எனக்கு life என்ட வார்த்தயே வெறுத்து பெய்த்து இரிக்கி.”

“ஏன்டி இப்படி சொல்றாய். நீ சந்தோசமா இல்லயா?”

“இல்ல. எனய வந்து கூட்டிட்டு போங்களே.” லீனா அழுதாள்.

“ஏன்டி என்னாச்சு. நீ நல்லா இரிக்கிறாய் என்டு தானே ஊட்ல எல்லாரும் சொன்னாங்க.”

“உம்மாக்கு இன்னம் ஒரு கதயும் ஒழுங்கா தெரியா அம்னா. உம்மாக்கிட்ட ஒன்டும் சொல்ல ஏலா. அவங்க இத பத்தியே யோசிச்சிட்டு இருப்பாங்க. மாமா அவங்களுக்கு தெரியும். எனய கூட்டி போக ஏலாதாம் அம்னா. நீங்களாவது வந்து எனய கூட்டி போங்க. எனக்கு ஏலா. மனசே மரத்து போன மாதிரி. ஏதோ வலிக்குது என்னமோ செய்து ஏன்ட நெலம யாருக்கும் வெளங்குதில்ல அம்னா. மண்டயில இது மட்டும் தான் யோசன. வேற ஒன்டும் இல்ல. இப்படி யோசிச்சி கடசில எனக்கு என்னா ஆகுமோ தெரியா.”

நடந்ததை எடுத்து கூறி சிறு குழந்தை போல லீனா விம்மி விம்மி அழுதாள். அம்னாவுக்கு ஆத்திரமாக இருந்தது.

“லீனா நீங்க அழ வானா. ஒனக்கு நா இரிக்கிறேன். கவல படாதடி. எனக்கு நீ இப்படி அழுறத பாக்க ஏலா. நீ கொஞ்ச நாள் பொறு. நா ஒனய பாக்க வாறேன். சரியா. அழாதடி ஒனக்கு ஒன்டும் ஆகாது. எதயும் யோசிக்காத. யாரு ஒனய கையுட்டாலும் அல்லாஹ் ஒனய கையுட மாட்டான். ஒனக்கு எப்பவும் தொணயா அல்லாஹ் இரிக்கிறான். துஆ கேளு. அல்லாஹ் ஒனக்கு நல்ல வழிய காட்டுவான்.”

அம்னாவின் வார்த்தைகள் அவளது புண்பட்ட இதயத்துக்கு மருந்தாய் அமைந்தது.

Noor Shahidha.
SEUSL.
Badulla
Author: admin