அந்த ரோஸி அவ எங்க இரிக்கிறா?

திருப்பு முனை 
பாகம் 19

அம்னாவுடன் மனம் விட்டு பேசியவளுக்கு ஆறுதலாக இருந்தது. பிறகு அவள் அன்று குறித்து வைத்த இலக்கத்திற்கு கோல் எடுக்க நினைத்தாள்.

‘சாச்சி கிட்ட இருந்தும் ஒரு பதிலும் இல்ல. எதுக்கும் நானே அந்த number கு எடுத்து பாத்தா நல்லம்.’

என எண்ணியவள் அந்த இலக்கத்திற்கு அழைப்பை எடுத்தாள். உள்ளுக்குள் பதற்றமாகவும் இருந்தது.

ஸலாத்துடன் தன்னை அறிமுகம் செய்தாள். மறுமுனையில்,

“வஅலைக்கும் ஸலாம். சொல்லுங்க. நா சாரா தான் பேசுறேன்.”

சாரா வேறு யாரும் இல்லை ஷரீப்பின் முன்னாள் மனைவி.

“தாத்தா நீங்க இப்ப பிஸி யா? எனக்கு கொஞ்சம் ஒஙலோட கதக்கனும் அதான் கேக்குறேன்.”

“இல்ல நா free யா தான் இரிக்கிறேன் சொல்லுங்க தங்கச்சி.”

“தாத்தா நா ஒஙலோட பேசனும்டு தான் ஆவலா இருந்தேன்.”

“ஓ. அப்படியா ஒஙட மாமா ஒன்டும் இங்க வந்து பேசிட்டு தான் போனாறு.”

“ஓவா தாத்தா. எப்ப வந்தாரு?”

“இப்ப ஒரு மாசத்துக்கும் மேல இரிக்கும்.”

“அப்படியா?”

“சொல்லி வேலல்ல தங்கச்சி. எனக்கு நடந்ததே தான் ஒஙலுக்கும் நடந்து இரிக்கி.”

இருவரும் தனக்கு நடந்தவற்றை பரிமாறிக் கொண்டனர். இருவருக்கும் நடந்த நிலைப்பாடுகளும் ஒன்றாகவே அமைந்தது. இது சிந்திக்க வேண்டிய ஒன்று.

“நம்பினா நம்புங்க தங்கச்சி. ஏன்ட பிரச்சின time அவன சுத்தவாளி ஆக்கிட்டு எனக்கு தான் அவ்வளவு கத கட்டினாங்க. சொல்லவும் வெட்கம் தங்கச்சி ஒரு பொம்புளக்கி சொல்ல கூடாதளவு கத கட்டினாங்க எனக்கு. அதோட எனக்கு சைகோ என்டாங்க. இப்ப வெளங்கதில்ல எவனுக்கு சைகோன்டு. ஆனாலும் நா எல்லாதயும் அல்லாஹ் கிட்டயே பாரம் சாட்டிட்டு பொறுமயாவே இருந்தேன். அந்த பொறுமக்கி தான் தங்கச்சி நா நெனச்சத விடயும் ஒரு நல்ல life அ அல்லாஹ் தந்திருக்கிறான்.”

“என்ன தாத்தா இது. மொத life ல தான் அப்படி என்டா? இதுல சரி திருந்தி வாழ ஏலுமே. இதுலயும் அதே தான் ச்சீ”

“இப்படி பட்டவங்கள திருத்த கஷ்டம் தங்கச்சி. பக்கத்துல வைரமே இருந்தாலும் மனசு அங்க தான் போகும்.”

“ம்ம். அதும் உண்ம தான் தாத்தா.”

“இப்ப அவன் உம்மா அவங்களோட பேசுறதா?”

“இல்லயே தாத்தா. இன்னம் கோவம் போல. இவர் பெருசா பேசுறல்ல.”

“ஆனா தங்கச்சி அவங்க தங்கமான மனுசி. நா என்டா அவங்க யாரயுமே கொற சொல்லவே மாட்டேன்.”

“ஓ தாத்தா ஒரு நாள் வாப்பம்மாக்கு நல்லா வருத்தமாகிட்டு அப்ப அவங்க எல்லாரும் வந்திருந்தாங்க. நா பெய்த்து பேசினேன். நல்ல மனுசர் தாத்தா.”

“ம்ம்.”

“சரி அந்த ரோஸி அவ எங்க இரிக்கிறா?”

“ரோஸிய நீங்க இதுவரக்கும் கண்டதே இல்லயா”

“இல்லயே தாத்தா.”

“நீங்க கண்டிருக்க வேணும் அவவ. அவ யாருன்டு நெனக்கிறீங்க.”

“எனக்கு அவவ பத்தி அந்தளவுக்கு ஒன்டும் தெரியா தாத்தா.”

“நீங்க இன்னமும் கெணத்து தவளயாவே இரிக்கிறீங்க போல.”

“ஏன் தாத்தா அப்படி சொல்றீங்க?”

“உண்ம தானே. ரோஸிய தெரியாதுன்னு சொல்றீங்க.”

“சத்தியமா எனக்கு அவவ தெரியா தாத்தா.”

“ம்ம். வாப்பம்மா ஊட்டுக்கு அடுத்த ஊட்ல யாரு இரிக்கிற.”

“ம்ம். ரோஸி ஆன்டி. ஏன் தாத்தா?”

“அவ தான் அந்த ரோஸி.”

“என்னாது அவவா!”

லீனாவுக்கோ பேரதிர்ச்சி. அவளால் அதை ஊகித்து கூட பார்க்க முடியவில்லை. எப்படி தாத்தா சத்தியமா எனக்கு நம்பவே ஏலா உண்மயாவா சொல்றீங்க?”

“சத்தியமா உண்மய தான் சொல்றேன் தங்கச்சி.”

“நா இவ்வளவு நாள் நெனச்சேன் அவ பொறத்தி ஆள் என்டு. ஆனா நா நெனச்சும் பாக்கல்ல இப்படி ச்சே.”

“ஆனா நீங்க நெனக்கிற மாதிரி ரோஸி இல்ல. எதுக்கும் அவ கிட்ட கவனமாவே இரிங்க.”

“சரி தாத்தா. ஆனா இது வாப்பம்மா அவங்களுக்கு தெரியுமா?”

“ஏன் தெரியாம நல்லா தெரியும்.”

“ஏன் அப்ப இதுக்கு ஒன்டும் சொல்லாம இருக்கிறாங்க.”

“எல்லாம் சல்லிக்கி தான் தங்கச்சி. அவ பெரிய சல்லிகாரி தானே. அவள பகைச்சா வாரதும் வராம தானே போகும். அதான் இதுவல பெருசு படுத்தாம இரிக்கிறாங்க.”

“ச்சீ. என்ன குடும்பம் டா இது சல்லிக்கி என்டு இப்படியுமா.”

அல்லாஹ்வ மறந்து தான் இவ்வளவு ஆட்டம் போடுதுவள். பாருங்களேன் இதுவள்ட ஆட்டம் எங்க பெய்த்து முடிய போகுதுன்னு. அதுவும் ரெண்டு பேர்ட வாழ்கயில விளாடின பாவம் இதுகள சும்மா உடாது.”

“ம்ம். அது சரி தாத்தா.”

“நா நெனச்சேன் நீங்க ஒன்டும் தெரியாம தான் வந்து மாட்டிருக்கிறீங்க. அதுவும் அவங்க நெனச்ச மாதிரி நீங்க எல்லாத்துக்கும் தல ஆட்டிட்டே இருக்கிறீங்க. அது தான் ஒஙல இப்படி அவங்க மேய்க்க காரணம். நீங்க படிச்ச புள்ள யோசிச்சி நடங்க.

“ம்ம். இப்ப இப்ப தான் எனக்கு படுது நா எவ்வளவு மடத்தனமா இருந்துட்டேனு. என்ன செய்ய நம்பினவங்களே இப்படி ஆப்பு வெப்பாங்கன்டு நெனக்கவே இல்லயே.”

“துஆ தான் இரிக்கி. தொழுது துஆ கேளுங்க. அல்லாஹ் ஏதாவது ஒரு வழிய காட்டுவான்.”

“சரி தாத்தா நீங்களும் துஆ செய்ங்க.”

“கட்டாயம் தங்கச்சி. ஒஙட நெலம எனக்கும் நல்லா வெளங்குது யோசிக்க வானா. எல்லாம் சரி வரும்.”

Noor Shahidha.
SEUSL.
Badulla
Author: admin