வாழ்க்கையின் இலக்கு என்ன?

  • 14

மாணவர்களுக்கான வழிகாட்டல் ஊக்குவிப்பு நிகழ்வொன்றில் சில ஆழமான கேள்விகளை எழுப்பினேன். முதலாவது ஆண் மாணவர்களிடம் கேட்டேன்.

வாழ்க்கையில் காணப்படும் பெரிய இலக்கு எது?

அதற்கான பதில்கள் கவலைக்கிடமாக காணப்பட்டது.

பாடசாலையில் படித்துக்கொண்டிருக்கின்ற மாணவர்களின் சிந்தனை புதிய வாகனங்களின் பெயர் கூறல், இந்த மொடல் தொலைபேசிகள் என்று சடப்பொருட்களை பெற்றுக்கொள்வேதே இலட்சியமாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பெண் மாணவிகளிடம் கேட்டேன் அதற்கான எந்த பதிலும் இல்லை ஏதோ கடமைக்கு படிக்கவந்தது போல காணப்படுகிறார்கள். O/L, A/L படித்தால் போதும் என்ற மனோநிலையே பலரிடம் ஏன்? இதற்கான காரணம் தான் என்ன? சமூகம் பதில் சொல்ல வேண்டிய கடமை.

இதுதான் இலட்சியமா? எந்தவொரு இலட்சியம் கூட இல்லாமல் பயணிப்பதேன்? பணம் சம்பாதிப்பது தான் இலட்சியமா? உயர்தர வாகனங்களில் செல்வது தான் இலட்சியமா?

இன்று எது எதற்கோ அடிமையாகி ஆசைகள் இலக்குகளுக்கு பூட்டுப் போட்டுள்ளதை அறிகிறோம். எதையும் சாதிக்கத் தூண்டும் பருவம், ரத்தம் சூடாகி இருக்கும் பருவம். சிந்தனைகளைச் சிதறடிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வாழ்க்கையை ஒரு இலக்கு இல்லாமல் ஏனோதானோ என்று கழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தாய் தந்தையரின் ஏக்கம், கவலை, பணம் இது ஒன்றையும் பொருட்படுத்தாமல் படிப்பதுபோல் நடிப்பு.

இதனால் யாருக்கு ஏமாற்றம்? அவர்களுக்கா? இல்லை எங்களுக்கே என்பதை மறந்து விட வேண்டாம்.

இதற்கெல்லாம் காரணம் பெற்றோர்கள் முறையான வளர்ப்பு, வழிக்காட்டல் கொடுக்காமையே கல்வியின் தேவையை உணர்த்தாமையே இன்று குருகிய சிந்தனையுடன் காலத்தை வீணடிக்கிறார்கள்.

ஒரே ஒரு விடயத்தை குறிப்பிட விரும்புகிறேன் ஆசிரியர்களே! புத்திஜீவிகளே! மாணவர்களுக்கு ஆசை, ஆர்வம் மற்றும் இலட்சிய வேட்கை இல்லாமல் எந்த திறமையான ஆசிரியர்கள் மூலம் கற்பித்தாலும் “செவிடன் காதில் சங்கூதுவது போல தான் இருக்கும்” எனவே முதலில் கற்றல் கற்பித்தலின் தேவையை உணர்த்தவேண்டும். அதே போல் முறையான இலக்கின்பால் வழிநடாத்த வேண்டும் இவ்வாறான விடயங்களின் தேவை இன்றைய covid -19 ன் பின்னரான இக்காலப்பகுதியில் மிக முக்கியமாக உணரப்பட்டவிடயமாகும்.

எனவே மாணவர்களே! நீங்கள் ஆசைப்படும் விடயம் தவறு என்று கூறவரவில்லை அது தான் இலட்சியம் என்று பயணிப்பதையே தவறு என்று கூறுகிறேன்.

பெற்றோர்களே! பிள்ளைகளை பெற்று விட்டோம் என்பதோடு கடமை முடிந்து விடாது முறையான வழிகாட்டல் வழங்கப்பட வேண்டும். இல்லை என்றால் அதுவே ஈருல வாழ்க்கையிலும் சோதனையாக அமையும்.

ஆசிரியர்களே! கல்வி கற்றுக்கொடுப்பதில் மாத்திரம் கவனம் செலுத்தாமல் அதற்கான ஆர்வத்தை, ஆசையை ஏற்படுத்தும் வழிகாட்டல் ஊக்குவிப்புகளை முதலில் கொடுக்கவேண்டும்.

இறைவன் 12 மாதங்களில் 11 மாதங்கள் எம்மை பலப்படுத்தி சீரான மனிதனாக பயணிப்பதற்கு 01 மாதத்தை வழிகாட்டல் மாதமாக ரமழான் மாதத்தில் பயிற்றுவிக்கிறான்.

எனவே எமது வாழ்க்கைக்கே இறைவன் இப்படி ஒரு ஏற்பாட்டை வைத்திருக்கிறான் எனின் எமது கல்வித்திட்டத்திலும் வழிகாட்டல் ஊக்குவிப்பு என்ற கருப்பொருள்
தேவை என்பதை உணர்த்தப்படுகிறது.

இந்த செயற்பாடுகள் சரியாக அமையும் போதே எதிர்ப்பார்க்கும் அறுவடையை பெற்றுக்கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ்.

Faslan Hashim
Islahiyya Arabic collage ®
South Eastern University of Sri Lanka.
BA ®

மாணவர்களுக்கான வழிகாட்டல் ஊக்குவிப்பு நிகழ்வொன்றில் சில ஆழமான கேள்விகளை எழுப்பினேன். முதலாவது ஆண் மாணவர்களிடம் கேட்டேன். வாழ்க்கையில் காணப்படும் பெரிய இலக்கு எது? அதற்கான பதில்கள் கவலைக்கிடமாக காணப்பட்டது. பாடசாலையில் படித்துக்கொண்டிருக்கின்ற மாணவர்களின் சிந்தனை…

மாணவர்களுக்கான வழிகாட்டல் ஊக்குவிப்பு நிகழ்வொன்றில் சில ஆழமான கேள்விகளை எழுப்பினேன். முதலாவது ஆண் மாணவர்களிடம் கேட்டேன். வாழ்க்கையில் காணப்படும் பெரிய இலக்கு எது? அதற்கான பதில்கள் கவலைக்கிடமாக காணப்பட்டது. பாடசாலையில் படித்துக்கொண்டிருக்கின்ற மாணவர்களின் சிந்தனை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *