சகோதரா! உன் ஆடை பற்றி ஓரிரு நிமிடங்கள்

  • 85

இன்று பொதுவாகவும் வளர்ந்து வரும் இளைஞர்களிடம் குறிப்பாகவும் அண்மைக் காலமாக ஆடைகள் விடயத்தில் மார்க்க வரையறைகள் பாரியளவு மீறப்பட்டு வருகின்றன. இஸ்லாம் ஆடை தொடர்பாக பெண்களுக்கு வழங்கியிருக்கும் பிரத்யேகமான வரையறைகள் போன்று ஆண்களுக்கும் சில வரையறைகளை போதித்திருக்கின்றது.

அதன் அடிப்படையில் ஆண்களின் ஆடைகளுக்கான நிபந்தனைகளை ஒவ்வொன்றாக நோக்குவோம்.

அவ்ரத்தை மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

ஆண்களுக்கான அவ்ரத்தாக இஸ்லாம் தொப்புளில் இருந்து முழங்கால் வரையான பகுதியை அடையாளம் காட்டியுள்ளது. இந்த நிபந்தனையின் அடிப்படையில் நாம் தேர்வு செய்யும் ஆடைகள் :

மறைக்கப்பட வேண்டிய அவையங்களை வெளிக்காட்டுமளவு:

  •  இறுக்கமானதாக இருக்கக் கூடாது.
  • மெலிதாக இருக்கக் கூடாது.
  • அவ்ரத்தை முழுமையாக மறைக்காததாக இருக்கக்கூடாது.

தற்காலத்தில் அணியப்படும் மிக இறுக்கமான டெனிம் ட்ரௌஸர், உடம்பின் நிறத்தை வெளிக்காட்டும் மெல்லிய சாரம் போன்றவை தவிர்க்கப்படல் வேண்டும். அதிலும் குறிப்பாக முழங்காலுக்கு மேலால் இருக்கும் ஜம்பர்களின் பாவனை இன்று கனிசமாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இது தடுக்கப்பட்டதாகும்.

அதனால் பெரும் தாக்கமும் சீரழிவும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இது மேலும் மோசமாகி நாம் நமது கலாச்சாரத்தையும் மார்க்க ரீதியான ஒழுக்கங்களையும் இழக்கவும் நேரிடலாம். இறைவன் பாதுகாப்பானாக. இது விடயமாக பெற்றோர் பாதுகாவலர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது காலத்தின் தேவை; சன்மார்க்கக் கடமை. எமது பிள்ளைகள் ஓரளவு வயதை அடைந்தது முதல் இஸ்லாமிய வரையறைகளுடன் ஆடைகளை வாங்கிக் கொடுத்துப் பழக்கவேண்டும்.

அல்லாஹ் எம்மை அழைக்கின்றான்:

“நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ளுங்கள்” (அல் குர்ஆன் 66-06)

அடுத்து தொழுகைக்காக நாம் வரும்போது ஆடைகள் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக ஸுஜுதில் இருக்கும்போது சிலரது ஆடையமைப்பின் காரணமாக அவர்களது உள்ளாடையும் மறைக்கப்பட வேண்டிய பின் அவ்ரத் பகுதியும் தொடர்ந்தும் வெளிப்படுவது அவதானிக்கப்படுகிறது. இது கூடாத தடுக்கப்பட்ட விடயமாகும். அத்துடன் அவ்ரத்தை வெளிக்காட்டும் இவ்வாறான ஆடைகளை தொடர்ந்தும் தொழுகைக்காக அணிவது தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட விதிக்கப்பட்டிருக்கும் “அவ்ரத்தை மறைத்தல்” என்ற நிபந்தனைக்கு மாற்றமானதாகும்.

இங்கு மற்றுமொரு விடயமும் சுட்டிக்காட்டப்பட வேண்டும். அவ்ரத்தை மறைக்கும் ஆடையை அணிந்தால் மட்டும் போதுமானதாக இருந்தாலும் இஸ்லாமிய ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றைக் கவனத்தில் கொண்டு வீதிகளில் சட்டையின்றி வெறும் மேனியுடன் நடமாடுவதையும் த்ரீ குவாட்டர்கள், கைகளற்ற டீ ஷேட்கள் (ஆம் கட்) போன்ற ஆடைகளை பொது இடங்களில் அணிவதையும் தவிர்த்துக் கொள்வது பொருத்தமானதாகும்.

ஏனெனில் ஆடைகளை நேர்த்தியாக, அழகாக, அலங்காரமாக அமைத்துக் கொள்வது மார்க்க வழிகாட்டலாகும்.

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் (ஆடைகள் எனும்) உங்கள் அலங்காரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 7: 31)

அது மட்டுமல்லாது இவ்வாறான ஒழுக்கத்துக்கு முரணான ஆடைகள் எதிர்காலத்தில் மேலும் கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்தவும் கூடும். அல்லாஹ் போதுமானவன். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

பாஹிர் சுபைர்

இன்று பொதுவாகவும் வளர்ந்து வரும் இளைஞர்களிடம் குறிப்பாகவும் அண்மைக் காலமாக ஆடைகள் விடயத்தில் மார்க்க வரையறைகள் பாரியளவு மீறப்பட்டு வருகின்றன. இஸ்லாம் ஆடை தொடர்பாக பெண்களுக்கு வழங்கியிருக்கும் பிரத்யேகமான வரையறைகள் போன்று ஆண்களுக்கும் சில…

இன்று பொதுவாகவும் வளர்ந்து வரும் இளைஞர்களிடம் குறிப்பாகவும் அண்மைக் காலமாக ஆடைகள் விடயத்தில் மார்க்க வரையறைகள் பாரியளவு மீறப்பட்டு வருகின்றன. இஸ்லாம் ஆடை தொடர்பாக பெண்களுக்கு வழங்கியிருக்கும் பிரத்யேகமான வரையறைகள் போன்று ஆண்களுக்கும் சில…

7 thoughts on “சகோதரா! உன் ஆடை பற்றி ஓரிரு நிமிடங்கள்

  1. I would like to thank you for the efforts you have put in writing this blog. I am hoping the same high-grade website post from you in the upcoming also. In fact your creative writing skills has inspired me to get my own blog now. Actually the blogging is spreading its wings fast. Your write up is a good example of it.

  2. Hello! Quick question that’s totally off topic. Do you know how to make your site mobile friendly? My site looks weird when viewing from my iphone4. I’m trying to find a theme or plugin that might be able to fix this issue. If you have any recommendations, please share. Thank you!

  3. I wish to show thanks to the writer for bailing me out of this circumstance. Just after checking throughout the world wide web and seeing recommendations that were not productive, I was thinking my entire life was done. Living without the presence of strategies to the difficulties you have resolved by way of your good write-up is a crucial case, as well as the kind that might have in a wrong way affected my career if I had not come across the blog. The expertise and kindness in dealing with every aspect was excellent. I am not sure what I would have done if I hadn’t discovered such a stuff like this. I can also at this time look forward to my future. Thanks a lot so much for the impressive and result oriented guide. I will not hesitate to suggest the sites to anybody who needs direction about this subject matter.

  4. Aw, this was a very nice post. In idea I would like to put in writing like this additionally – taking time and precise effort to make an excellent article… but what can I say… I procrastinate alot and not at all seem to get one thing done.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *