உனது நேரம் சரியானதுதான்!

  • 10

ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால், 10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது. இன்னொருவன் 30 வயதில் திருமணம் செய்கிறான், ஒரு வருடத்தில் குழந்தை கிடைக்கிறது.

ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழகப் பட்டதாரி ஆகிறான், ஆனால், 5 வருடங்களுக்குப் பின்பே தொழில் கிடைக்கிறது. இன்னொருவன் 27 வயதில் பட்டதாரி ஆகிறான், அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது.

ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார், 45 வயதில் அவர் மரணித்து விடுகிறார். இன்னொருவர் 50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார், 90 வயது வரை வாழ்ந்து விட்டு செல்கிறார்.

உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய். உனக்கு முன்னால் உள்ளவர்கள் முந்தியவர்களும் அல்ல, உனக்குப் பின்னால் உள்ளவர்கள் பிந்தியவர்களும் அல்ல. நீயும் யாரையும் முந்தவும் இல்லை, யாரையும் பிந்தவும் இல்லை.

அந்த இறைவன் உனக்கென குறித்த நேரத்தில் நீ உனது பணியை செய்து கொண்டிருக்கின்றாய் அவ்வளவே. ஆதலால், உனக்கு குறிக்கப்பட்ட நேரகாலத்தை செவ்வனே பயன்படுத்திக் கொள். மன நிறைவுடன் வாழ வாழ்த்துக்கள்.

Imran Farook

ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால், 10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது. இன்னொருவன் 30 வயதில் திருமணம் செய்கிறான், ஒரு வருடத்தில் குழந்தை கிடைக்கிறது. ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழகப் பட்டதாரி…

ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால், 10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது. இன்னொருவன் 30 வயதில் திருமணம் செய்கிறான், ஒரு வருடத்தில் குழந்தை கிடைக்கிறது. ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழகப் பட்டதாரி…

One thought on “உனது நேரம் சரியானதுதான்!

  1. I’ve been browsing on-line greater than three hours nowadays, yet I never found any interesting article like yours. It is lovely value sufficient for me. Personally, if all web owners and bloggers made good content material as you probably did, the net can be a lot more useful than ever before.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *