களம் கிடைத்தால்

  • 14

என் பேனாமுனையில் இருந்து
உதிர்ந்த சில எழுத்துக்கள்
எனக்குரியவை தான்
என்றாலும்
அவை சிலபோது – பிறர்
எண்ணங்களையே சுமந்து நிற்கும்

மாறாக அவை எனக்கான
வரிகளும் அல்ல
அதற்கான வலிகளும் அல்ல

அவ் எண்ணங்கள்
கவி வரிகளில்
நிற வண்ணம் தீட்டியவை

அவ் வண்ணங்கள்
பல வர்ணங்களை கொண்டவை
அவை கலராகவும் இருக்கலாம்
கறுப்பாகவும் இருக்கலாம்

பிறரது வர்ணங்களை
ரசிக்க மட்டுமே
என்னால் முடிகிறது
மாறாக ஓவியமாக்கிட முடியாது

ஓவியம் வரைய
முதலில் நாம் தேடுவது
நிறத்தை அல்ல – இடத்தை
அது போல் கவி எழுத
முதலில் நாம் தேடுவது
வரிகளை அல்ல – களத்தை

களம் கிடைத்தால் மட்டுமே
வரி அமைக்க முடியும்

Noor Shahidha
SEUSL
Badulla

என் பேனாமுனையில் இருந்து உதிர்ந்த சில எழுத்துக்கள் எனக்குரியவை தான் என்றாலும் அவை சிலபோது – பிறர் எண்ணங்களையே சுமந்து நிற்கும் மாறாக அவை எனக்கான வரிகளும் அல்ல அதற்கான வலிகளும் அல்ல அவ்…

என் பேனாமுனையில் இருந்து உதிர்ந்த சில எழுத்துக்கள் எனக்குரியவை தான் என்றாலும் அவை சிலபோது – பிறர் எண்ணங்களையே சுமந்து நிற்கும் மாறாக அவை எனக்கான வரிகளும் அல்ல அதற்கான வலிகளும் அல்ல அவ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *