காதல் தந்த காயங்களோடு

உன் காதல் தந்த காயங்களோடு
என்னுள் உருமாறுகிறது என் இதயம்

புவியீர்ப்பு விசை போல்
என்னுள் என் காதல் இருப்பதால்
உன் திசை நோக்கி
உன் நினைவுகளை எறிந்தும்
நீ தந்த காயங்களையும் சேர்த்தே
என் விசை என்னோக்கி ஈர்க்கிறது

என்னை சிறையிட்டு கொழுத்திய
சில வினாடிகளுக்கும்
எனக்கு சிறகிட்டு உயர்த்திய
சில கனவுகளுக்கும்
விலங்கிட்டு வாழ நினைக்கிறேன்
விலகிச் சென்ற உன்னால்
நீ விரும்பித் தந்த வினாடிகளும்
சில நிமிடம் விசமாகிச் செல்வதால்

உன் காதல் தந்த காயங்களோடு
என் காலம் தாண்டிச் சென்று
கனவிலேனும் கண்ணீரின்றி
வாழ நினைக்கிறேன்
நிறைவேறா ஆசையும்
நிவர்த்தியாகும் என்ற
நிலையான மனதோடு!

ஐ.எம்.அஸ்கி
கவியிதழ் காதலன்
அட்டாளைச்சேனை -08

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Need Help