புறம் பேசும் மனங்களே!

  • 12

அல்லாஹ்வை ரப்பாக ஏற்று, இஸ்லாத்தை தன் மார்க்கமாக கொண்டு வாழும் எம் உள்ளங்கள் அலட்சியமாக கொண்டு அறியாமல் செய்யும் மிக ஆபத்தான பாவம்தான் புறம்.

இன்று சதாவும் அல்லாஹ்வை தொழுகின்ற ஈமானிய உறவுகள் தொடக்கம் சந்திகளில் ஷைத்தானின் சந்ததிகள் நாம்தான் என்று சான்று பகருபவர்களைப் போல் காட்சியளிக்கும் மனிதர்கள் வரை இது அழகாக தாண்டவமாடுகிறது. அல்லாஹ்வை உண்மையாக நேசித்த உள்ளம் அல்லாஹ் தடுத்த இழிவான செயல்களை செய்யவே மாட்டான்.

அல்லாஹ் தடுத்த ஒன்றை ரஸுலுல்லாஹ் விரும்பாத ஒன்றை ஒருவன் சற்றும் சிந்திக்காமல் செய்கின்றால் என்றால் அவன் ஷைத்தானுக்கு அல்லாஹ்வை விட முன்னுரிமை அளிக்கின்றான் என்பதுதான் உண்மை.

புறம் என்பது ஷைத்தானின் தூண்டுதலால் வருபவையாகும்.தன்னுடைய சகோதரனின் வாழ்வில் அழுக்கை பூசுவது போன்றாகும்.

“உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேச வேண்டாம். உங்களில் எவனும் இறந்த சகோதரனின் இறைச்சியை புசிக்க விரும்புவானா? அதை நீங்கள் வெறுப்பீர்களே! ” (49:12)

இப்புறம் எம்மைப் படைத்த ரப்பு வெறுக்கின்றான் என்று தெரிந்து இருந்தும், எமது எந்த சகோதரனைப் பற்றி பேசுகிறோமா அவர் வெறுப்பார் என்று தெரிந்தும் இப்பெரும் பாவத்தை செய்வதில் எத்தனை உள்ளங்கள் அலட்சியமாக கருதி அவரை அழகாக அசிங்கப்படுத்துகிறோம்.

“வட்டி என்பது 72 வாயில்களைக் கொண்டது அதில் மிகக் குறைந்தது தாயுடன் விபச்சாரம் செய்வதாகும். வட்டிகளிலெல்லாம் மிக மோசமான வட்டி ஒருவன் தன் சகோதரனின் கௌரவத்தில் களங்கமேற்படுத்துவதாகும்.”

இது ஒரு மனிதனிடத்தில் தொடருமானால் அவன் தன் வாழ்வை யோசிப்பதை விட்டு மற்றவர்களின் குறைகளையே பார்த்து மற்றும் சொல்லித் திரிந்து பாரிய உளநோயாளியாக அவனே அறியாத வண்ணம் மாறி இருப்பான். அது மட்டுமன்றி அவனுடைய எண்ணம் நான் உள ஆரோக்கியத்துடன் இருக்கின்றேன் என்று போலி எண்ணம் கொண்டிருப்பான்.

பைத்தியக்காரர்களும் இப்படித்தான் தான் நன்றாக உள்ளேன். மற்றவர்கள்தான் பைத்தியக்காரர்கள் என்று எண்ணம் கொள்வார்கள்

அன்புள்ள உறவுகளே! எவரேனும் ஓர் சபையில் இன்னொரு சகோதரனைப்பற்றி புறம் பேசினால். அதனை தடுக்க முயற்சி செய்வோம். இது ஓர் முஸ்லிமின் கடமையாகும்.

“ஒருவர் தன் சகோதரனின் கௌரவத்தை பாதுகாப்பானேயானால் மறுமை நாளில் அல்லாஹ் அவர் முகத்தை நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பான் “

அல்லாஹ்விற்கு அஞ்சி அடுத்த சகோதரனின் குறைகளை மறைத்து அல்லாஹ் விரும்பும் ஆரோக்கிய உள்ளத்தை வலுப்படுத்திக் கொள்வோம்.

R.A.J. Mafaz mohammed (Naleemi)
B.A (R)
Dip in Psychological counseling
Manager, Khaira learning home.
SKILLS TRAINER & MOTIVATIONAL SPEAKER
(Waththegedara)

அல்லாஹ்வை ரப்பாக ஏற்று, இஸ்லாத்தை தன் மார்க்கமாக கொண்டு வாழும் எம் உள்ளங்கள் அலட்சியமாக கொண்டு அறியாமல் செய்யும் மிக ஆபத்தான பாவம்தான் புறம். இன்று சதாவும் அல்லாஹ்வை தொழுகின்ற ஈமானிய உறவுகள் தொடக்கம்…

அல்லாஹ்வை ரப்பாக ஏற்று, இஸ்லாத்தை தன் மார்க்கமாக கொண்டு வாழும் எம் உள்ளங்கள் அலட்சியமாக கொண்டு அறியாமல் செய்யும் மிக ஆபத்தான பாவம்தான் புறம். இன்று சதாவும் அல்லாஹ்வை தொழுகின்ற ஈமானிய உறவுகள் தொடக்கம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *