கோள் மூட்டுதல் பெரும் பாவங்களில் அடங்கும்

  • 359

கோள் சொல்லுவதையும் புறம் பேசுவதையும் அல்-குர்ஆனும் சுன்னாவும் மிக வன்மையாகக் கண்டித்துள்ளது.

இரு தரப்பினருக்கிடையில் பிரச்சனைகளை, பிணக்குகளை ஏற்படுத்தும் நோக்கில் கதைகளைப் பரிமாறுவது கோள் சொல்லுதல் என்பதன் அர்த்தமாகும்.

கோள் சொல்லுதல் ஹராம் என்ற கருத்தில் அனைத்து அறிஞர்களும் உடன்பட்டுள்ளனர்.

கோள் சொல்லுவதால் வரும் ஆபத்துக்கள் :

  • பிரிவும் பூசல்களும்
  • மனக் கவலை
  • துருவித் துருவி குறைகளை தேடும் அவலம்
  • மக்களின் வருமான வழிகளை முடக்கத் தூண்டும்
  • கொலை செய்யத் தூண்டும்

மக்கள் மத்தியில் கோள் பேசும் நபர்களுக்கு செவி சாய்க்காமல் தூரமாகி விடுவதே நமது முதற்கட்ட கடமையாகும்.

கோள் மூட்டுபவன் சுவனம் நுழைய மாட்டான் என்று நபகளார் கூறிய ஹதீஸ் புகாரியில் பதிவாகியுள்ளது. புதை குழியில் வேதனை தரும் ஒரு பாவச் செயலாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

கோள் சொல்லுவது இழிவான ஒரு குணமாகும். கோள் மூட்டுபவன் மற்றவர்களை இழிவாக பேசுவான். கஞ்சத்தனம் கொண்டவனாக இருப்பான். மக்களின் குறைகளை பேசுவதிலேயே குறியாக இருப்பான்.

இந்த கொடிய பாவத்தில் இருந்து தூரமாகுவோம். நாவை பேணுவோம். பாவமன்னிப்பு கேட்போம். அதிகமாக திக்ர் செய்வோம்.

முஹம்மத் பகீஹுத்தீன்

கோள் சொல்லுவதையும் புறம் பேசுவதையும் அல்-குர்ஆனும் சுன்னாவும் மிக வன்மையாகக் கண்டித்துள்ளது. இரு தரப்பினருக்கிடையில் பிரச்சனைகளை, பிணக்குகளை ஏற்படுத்தும் நோக்கில் கதைகளைப் பரிமாறுவது கோள் சொல்லுதல் என்பதன் அர்த்தமாகும். கோள் சொல்லுதல் ஹராம் என்ற…

கோள் சொல்லுவதையும் புறம் பேசுவதையும் அல்-குர்ஆனும் சுன்னாவும் மிக வன்மையாகக் கண்டித்துள்ளது. இரு தரப்பினருக்கிடையில் பிரச்சனைகளை, பிணக்குகளை ஏற்படுத்தும் நோக்கில் கதைகளைப் பரிமாறுவது கோள் சொல்லுதல் என்பதன் அர்த்தமாகும். கோள் சொல்லுதல் ஹராம் என்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *