பசும் தளிராய் முளைத்திட

  • 13

உன் வளர்ச்சியை தடுக்கும்
கிளைகளை வெட்டி வீழ்த்திடு
அவை உன்னிலிருந்து பசும்
தளிர்களை முளைத்திடச் செய்யும்

உன்னை வழிகேட்டில் ஈர்க்கும்
கிளைகளை இசையாதிரு
இல்லையேல் அவ் ஈர்ப்பு உனை
பாதள உலகம் வரை ஈர்த்திடும்

உன்னை உதாசீனமாய் பார்க்கும்
கிளைகளை புன்னகையால் கைது செய்
அப் புன்னகையே அவைகளை
வளரவிடாது அழித்திடும்

உன்னை காயப்படுத்த காத்திருக்கும்
கிளைகளை காணாதிரு
அவை உன் பழைய காயங்களை
ஆற்றும் மருந்தாகிடும்

நீ கண்ணீர் சிந்தக் காரணமான
கிளைகளை மறவாதிரு
அவை இன்னோர் முறை உனை
கண்ணீர் சிந்தாது காப்பாற்றும்

உனக்கு துன்பம் தரக் காத்திருக்கும்
கிளைகளை தூரமாய் நிறுத்திடு
அவை உனை தடம் மாறாது காத்திடும்

உன்னை அவமானப்படுத்திய
கிளைகள் முன் அசராதிரு
அதுவே அவைகளை
அனல் புழுவாக்கிடும்

நீ சிகரம் தொடும் வரை தனித்திரு
அன்றேல் சிறந்தவர்களுடன் இரு
நீ வெற்றியை தேடி ஓடும் வரை
உனை தோல்விகள் துரத்தும்
தோல்விகளை அஞ்சாது துரத்தியடி
வெற்றிக் கொடிகள் உன் கையிலே

Shima Harees
Puttalam

உன் வளர்ச்சியை தடுக்கும் கிளைகளை வெட்டி வீழ்த்திடு அவை உன்னிலிருந்து பசும் தளிர்களை முளைத்திடச் செய்யும் உன்னை வழிகேட்டில் ஈர்க்கும் கிளைகளை இசையாதிரு இல்லையேல் அவ் ஈர்ப்பு உனை பாதள உலகம் வரை ஈர்த்திடும்…

உன் வளர்ச்சியை தடுக்கும் கிளைகளை வெட்டி வீழ்த்திடு அவை உன்னிலிருந்து பசும் தளிர்களை முளைத்திடச் செய்யும் உன்னை வழிகேட்டில் ஈர்க்கும் கிளைகளை இசையாதிரு இல்லையேல் அவ் ஈர்ப்பு உனை பாதள உலகம் வரை ஈர்த்திடும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *