திருமண நாள்

  • 16

கேலிகளும் கிண்டல்களும் செவிகளை துளைத்திட
வெட்கத்தில் கன்னங்கள் ரோஜாவாய் சிவந்திட
கூச்சத்தில் தலை குனிந்து அமர்ந்திருந்தாள் அவள்

அவள் எதிர்பார்த்த அந்நாள்
அவளது கண்ணனை கரம்பற்றும் நாள்

மயக்குகின்ற அழகுடன் வெட்கச் சிரிப்புடன்
இனி வரும் காலங்கள் தன்னவனுடன்
எனும் ஆவலுடன்
பெற்றோரை பிரியும் துயருடன்

இன்பமும் துன்பமுமான அந் நாள்
அவளுக்குரியவனுடன்
கரம் பற்றும் நாளாகும்

பெற்றோரின் விருப்பத்துடன்
உற்றாரின் ஆசியுடன்
மலர் மாலைகள் தூவிட
மேளச் சப்தம் காதை கிழித்திட
கண்களில் ஆனந்தத்துடன்
கரம் பிடித்தாள் அவள்

கன்னி வாழ்க்கை
இனிதாய் கரை சேர்ந்தது

Shima Harees
Puttalam

கேலிகளும் கிண்டல்களும் செவிகளை துளைத்திட வெட்கத்தில் கன்னங்கள் ரோஜாவாய் சிவந்திட கூச்சத்தில் தலை குனிந்து அமர்ந்திருந்தாள் அவள் அவள் எதிர்பார்த்த அந்நாள் அவளது கண்ணனை கரம்பற்றும் நாள் மயக்குகின்ற அழகுடன் வெட்கச் சிரிப்புடன் இனி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *