செக்கச் செவந்தவளே கூத்துப் பார்க்க வாரியா?

  • 21

ஒரு கிராமத்தின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள், அழகுகள், சுவடுகள் சிலபோது நிலைக்கும். பலசமயங்களில் மங்கி மறைந்து அழிந்து விடும். ஆனால் அதன் நினைவுகள் நிழலாய் தொடரும். இன்பம் தரும். கிராமத்து வாழ்வின் சுவையே அதில் தான் இருக்கிறது.

அந்த வகையல் வெலிகாமத்தில் இருந்த கிளாஸ் லாம்பு பவணி என்னால் மறக்க முடியாது அனுபவம். அதிகாலைப் பொழுதில் ஊரார் வழித்துக் கொண்ட வேலையில் கடலோரமாய் சுற்றி வந்த அந்த நாள் ஞாபகம் இன்றும் இன்பமாய் இருக்கிறது.

இந்த அருமையான மகிழ்ச்சியின் வெளிப்பாடு, மங்களகரமான வரவேற்பு, மனதுக்கு புத்துணர்வையும் புதுத்தென்பையும் கொடுக்கும்.

இந்த வெளிச்ச ஊர்வலம் வெலிகாமத்துக்கு எப்படி வந்ததோ என்று எனக்குத் தெரியாது. பப்ழுக்காய் லாம்பு, கடதாசி லாம்பு, விதவிதமான கலர் கலர் ஒய்ல் பேபர் லாம்பு, வெஸக் கூடு போன்ற லாம்பு என பல வகை லாம்பகளோடு சிறார்கள் வெளியே வருவார்கள். ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள்.

சிலர் வீட்டிலிருந்து வெளியேற முன்பே அவர்களது லாம்பு பற்றி எரிந்து விடும். அது அப்படித்தான், இனி உம்மாவுக்கும் வாப்பாவுக்கும் திண்டாட்டம் தான். சிலரது லாம்பு முட்டி மோதி பற்றிக் கொள்ளும். அதற்ககா அழுது கதறும் காட்சிகள், அவர்களை ஆசுவாசப்படுத்தி ஆறுதல்படுத்தும் பெற்றோகளின் சங்கடமான நிலைமைகள் அழகின் அழகாக அந்த காட்சிக்கு மெருகூட்டும்.

எகிப்திய கலைக் குடும்பத்தின் இளைய சகோதரி கவிக்கோ அமீனா குத்பின் சிறுகதைகளில் கிளாஸ் லாம்பு பற்றி ஒரு காட்சியை வாசித்ததுண்டு. அது ரமழானை வரவேற்பதற்காக எகிப்து நாட்டு மக்கள் பாரம்பரியமாக கடைப்பிடித்து வந்த பழக்கம். ஒரு ஏழைக் குடும்பத்தில் உள்ள சிறுமிகள் ரமழானனை வரவேற்பதற்காக தயாராகுவதை அருமையாக, சுவையான கதையாக பதிவு செய்திருந்தார்கள். ஹி. 350 களில் இருந்தே எகிப்தில் ரமழானை வரவேற்கும் அழகிய பழக்கமாக இது இருந்து வந்துள்ளது. வெலிகாமத்துக்கு எப்படி தாவியதோ எனக்குத் தெரியாது.

ஒரு கிராமத்தின் மக்கள் தமது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் பாரம்பரிய வழிமுறையை இஸ்லாமிய அடிப்படைகளுடன் முரண்படாவிட்டால் அதை பாராட்ட வேண்டும். வரவேற்கவேண்டும். அதன் பால் ஆர்வமுள்ளவர்களை அங்கீகரிக்க வேண்டும். இதுதான் சுன்னா. அதனை தீனோடு போட்டு கலக்கக் கூடாது.

கருணை நபி முஹம்மத்( ஸல்) அவர்கள் தனது அன்பு மனைவியை செல்லமாக செக்கச் செவந்தவளே என அழைத்து, பெருநாள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஹபசிகளின் கூத்தை பார்த்து ரசிப்பதற்கு விருப்பமா? எனக் கேட்டார்கள். ஆம் என்று கூறியபோது இறை தூதர் (ஸல்) அவர்கள் தனது தோலை பணித்துக் கொடுக்க அதில் ஆயிஷா (ரழி) தனது நாடியை வைத்துக் கொண்டு ஆசை தீரும்வரை பார்த்து ரசித்தார்கள். (புகாரி)

இது தான் கிராமத்து கலாச்சார கொண்டாட்டங்களின் போது நபி வழியகா இருந்தது. மறாக புனித மஸ்ஜித் நபவியில் கேளிக் கூத்தா? என்று கடிந்து கொள்ள வில்லை. இதென்ன அனாச்சாரம் என்று பொங்கி எழவில்லை. பள்ளிவாசல் முன்றலில் கூத்து போட வந்தீங்களா என்று விரட்டியடிக்கும் வரட்டுச் சிந்தனைக்கு வழிவகுக்கவில்லை.

செக்க செவந்தவளே கூத்து பாக்க வாரியா? என அழைத்து மன உளைச்சலுக்கு ஆறுதல் கொடுத்துள்ளார்கள்.

முஹம்மத் பகீஹுத்தீன்

ஒரு கிராமத்தின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள், அழகுகள், சுவடுகள் சிலபோது நிலைக்கும். பலசமயங்களில் மங்கி மறைந்து அழிந்து விடும். ஆனால் அதன் நினைவுகள் நிழலாய் தொடரும். இன்பம் தரும். கிராமத்து வாழ்வின் சுவையே அதில்…

ஒரு கிராமத்தின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள், அழகுகள், சுவடுகள் சிலபோது நிலைக்கும். பலசமயங்களில் மங்கி மறைந்து அழிந்து விடும். ஆனால் அதன் நினைவுகள் நிழலாய் தொடரும். இன்பம் தரும். கிராமத்து வாழ்வின் சுவையே அதில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *