கொத்தமங்கலம் சுப்பு ஒரு பன்முக ஆளுமை

  • 18

கொத்தமங்கலம் சுப்பு மக்கள் புரியும் பாஷையில் எழுதியவர்

கொத்தமல்லி குழம்பில் மணக்கும், அண்ணன் சுப்பு கவிதையில் மணப்பார்

என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி கொத்தமங்கலம் சுப்புவை வாழ்த்திப் பாடியுள்ளார்.

கன்னாரியேந்தல் என்ற ஊரில் பிறந்தவர் கொத்தமங்கலம் சுப்பு. (1910 – 1974) கவிதைகளில் மணத்தவர். அவர் ஒரு எழுத்தாளர், இயக்குனர், நடிகர், வில்லுப்பாட்டிசைக் கலைஞர், பத்திரிகையாளர் என, பன்முகத் திறமை கொண்டவர்.

அந்தக் காலத்தில் வாசகர்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றவர். மக்களுக்குப் புரியும் வகையில், எளிய வார்த்தைகளால் கவிதை எழுதியவர். காந்தியைப் பற்றி இவர் எழுதிய ‘காந்தி மகான்’ வில்லுப்பாட்டை, அந்தக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வியந்து ரசித்தார்கள், பாராட்டினார்கள்.

அகராதியைப் பார்க்காமல் எட்டாம் வகுப்பு மாணவன்கூடப் புரிந்து கொள்ளத்தக்க வகையில் எளிமையாக கவிதைகளில் சொற்களைக் கையாண்டவர். அது தான் இவரின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

பாரத தேசம் விடுதலை பெற்ற அன்று, விடியற்காலை வானொலியில், இவர் எழுதிய பாடல்தான் ஒலிபரப்பானது.

கொத்தமங்கலம் சுப்புவின் கவிதைகள், இவரின் மறைவுக்குப் பின், குடும்ப வாரிசுகளால் தொகுக்கப்பட்டு ‘மருக்கொழுந்து’ என்ற பெயரில் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளன.

கொத்தமங்கலம் சுப்பு பத்மஸ்ரீ விருதை பெற்றவர். இவரின் கவிதைகளுக்கு ஒரு உதாரணமாக:

பெரியவங்க பொய் சொன்னால் பேப்பர்ல போட்ரான்
சிறியவங்க உண்மை சொன்னா சிறையில் போட்ரான்

இது கவிக்கோ சில மாற்றங்களுடன் கூறியது.

7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாச்சியார் இந்தக் காலத்தில் உண்மை சொல்ல முடியாது என அந்தக் காலத்திலேயே சொல்லி இருக்காங்க.

கொத்தமங்கலம் சுப்பு மக்கள் புரியும் பாஷையில் எழுதியவர் கொத்தமல்லி குழம்பில் மணக்கும், அண்ணன் சுப்பு கவிதையில் மணப்பார் என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி கொத்தமங்கலம் சுப்புவை வாழ்த்திப் பாடியுள்ளார். கன்னாரியேந்தல் என்ற…

கொத்தமங்கலம் சுப்பு மக்கள் புரியும் பாஷையில் எழுதியவர் கொத்தமல்லி குழம்பில் மணக்கும், அண்ணன் சுப்பு கவிதையில் மணப்பார் என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி கொத்தமங்கலம் சுப்புவை வாழ்த்திப் பாடியுள்ளார். கன்னாரியேந்தல் என்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *