பள்ளிப் பருவமும் பசுமையான நினைவுகளும்

  • 12

தொலைவினில் தொலைந்து போன
என் பள்ளிப் பருவ
பசுமையான நினைவுகளை எண்னி
என் பேனாவின் மைகள்
கவிதையை வடிக்கிறது.

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும்
மறக்க முடியாத பசுமையான நினைவுகள்
பள்ளிக் கால நினைவுகள் தான்
அதனை மறக்கவும் முடியாது
மறுக்கவும் இயலாது.

பள்ளிக் கால வாழ்க்கையில்
சின்னச் சின்ன சண்டைகள் சந்தோசங்கள்
இனம் புரியாத காதல்கள் ஏமாற்றங்கள்
நகைச்சுவையான தருணங்கள்
இவைகள் மீண்டும் மீண்டும்
நீங்காத வர்ணங்கள

ஆண் பெண் என்று பாராத நண்பர்கள்
இனமதம் அறியாத பிஞ்சு உள்ளங்கள்
கல்லம் கபடம் இல்லாத மனங்கள்
எதைப் பற்றியும் கவலை கொள்ளாத
விளையாட்டுப் பருவங்கள்
அந்த காலங்களை எண்ணிப் பார்க்கையில்
அது பொக்கிஷம் தான்

எல்லோரும் சேர்ந்து அடிக்கும் அரட்டை
அயர்ந்து தூங்கினால் விடும் குரட்டை
ஆசிரியருக்கு தெரியாமல்
தோழிக்கு விடை செல்லல்
தோழியிடம் விடை கேட்டல்
தோழியுடன் சண்டைகள்
பின் சமாதானங்கள்
இப்படி மறக்க முடியாத
சில நினைவுகளும்
அதை என்றும் துறக்க
விரும்பாத என் உள்ளமும்

கல்வெட்டாய் பதிக்க முடியாது
ஆனால் உள்ளங்களில் என்றுமே
உறங்கிக் கிடக்கும் உணர்வுகள்

Nushra Aadham
Akurana
South eastern university of Sri Lanka

தொலைவினில் தொலைந்து போன என் பள்ளிப் பருவ பசுமையான நினைவுகளை எண்னி என் பேனாவின் மைகள் கவிதையை வடிக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மறக்க முடியாத பசுமையான நினைவுகள் பள்ளிக் கால நினைவுகள் தான்…

தொலைவினில் தொலைந்து போன என் பள்ளிப் பருவ பசுமையான நினைவுகளை எண்னி என் பேனாவின் மைகள் கவிதையை வடிக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மறக்க முடியாத பசுமையான நினைவுகள் பள்ளிக் கால நினைவுகள் தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *