விவாகம்- விவாகரத்து- ஆரோக்கியமான சமூக நகர்வில் அதன் போக்குகள்

அறிமுகம்

இந்த உலகைப் பொறுத்தவரையில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் ஏதோ ஒரு வகையில் ஒன்றின்பால் தங்கியிருக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. அவ்வகையில் தான் மனிதனாக பிறந்த நாமும் ஏதோ ஒன்றில் தங்கி வாழக் கூடியவர்களாக இருக்கிறோம். ஓர் ஆண் இன்றி பெண்ணிணாலும் ஒரு பெண் இன்றி ஆணினாலும் தனித்து வாழ்வது என்பது ஓர் கடினமான விடயமாகும். பெண் என்பவள் தன் பெற்றோருக்கு அடுத்ததாக தனக்குரிய பாதுகாவலனை தேடிக் கொள்ளவும் ஓர் ஆண் தனக்குரிய தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்காக ஒரு துணையை தேடிக் கொள்வதும் இயல்பானதாகும்.

அவ் வகையில் தான் அந்த சமுதாயத்தில் ஓர் ஆணும் பெண்ணும் உள்ளத்தாலும், உடலாலும் இணையும் இடம் பெறும் நிகழ்வாக திருமணம் காணப்படுகிறது. இது சமூக சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உறவு முறையாகும். அவ்வகையில் ஓர் ஆணும் பெண்ணும் சமூகத்தின் முன்னிலையில் ஏற்கும் சடங்கு திருமணம் என்று அழைக்கப்படுகிறது. இது மதங்களை கடந்து அனைத்து மனித சமூகத்தினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் விடயமாக காணப்படுகிறது. இதன் நோக்கமானது வெறுமனே உடலியல் தேவைகள் மாத்திரமன்றி அதற்கும் அப்பாற்பட்டது. அவ்வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட இரு பாலாருக்கும் திருமணம் பற்றிய கனவுகள் தோன்றுவது இயல்பானது ஆனால் ஒரு சில ஆண்கள், பெண்கள் திருமணத்தில் நாட்டம் இல்லை என்பது ஏனையவர்களை ஆச்சரியத்திற்கு உற்படுத்தப்படுகிறது. இருந்த போதிலும் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களுடைய ஆசாபாசங்களையும் உள உணர்வுகளையும் உரிமையோடு வெளிப்படத்துவதற்கும் பகிரவும் துணை என்பது இன்றியமையாதது.

இத்தகைய பல கனவுகளோடு கால் பதிக்கும திருமண வாழ்வானது பலரது வாழ்வில் முரண்பாடுகள் காரணமாக பாதியிலே கலைந்து போகிறது. உள்ளங்கள் முரண்படும்போது சந்தோசமாக இணைந்து வாழ்வது என்பது சாத்தியமற்றது. அவ்வாறு தான் திருமண வாழ்விலும் கணவன் மனைவி இருவரிடத்திலும் உள முரண்பாடு தோன்றும் சமயத்தில் குடும்ப வாழ்வில் சந்தோசம் இழக்கப்பட்டு திருமண வாழ்வானது விவாகரத்திற்கு இட்டுச் செல்கிறது. பொதுவாக இவர்கள் உளரீதியாக விவாகரத்து பெற்றதன் பின்னரே நீதிமன்றங்களை நாடி முறையாக விவாகரத்தை பெற்றுக் கொள்கின்றனர். இவ் விவாகரத்துக்கள் பல்வேறு காரணங்களினால் இடம் பெறுகிறது.

அதுமாத்திரமன்றி விவாகரத்து என்பது தற்கால சமூகத்தில் ஓர் சாதாரண விடயமாக காணப்படுவது வருந்தத்தக்க ஒன்றாகும்.

சுருக்கம்

இன்று உலகில் மனிதனது வாழ்விலும் அவனது நடத்தையிலும் குடும்பம், சமூகம் என பல வகையிலும் விவாகம், விவாகரத்து பாரியதொரு செல்வாக்கு செலுத்தக் கூடியதாக உள்ளது. இவ்வாறு காணப்படுகின்ற விவாகம், விவாகரத்து விடயங்களில் நேர்மறை, எதிர்மறை விளைவுகள் அன்று தொடக்கம் இன்று வரையிலும் படிப்படியாக அதிகரித்து வருவதனை காணலாம். அதே போன்று பண்டைய காலத்தில் விவாகம் விடயங்களில் மிக அதிகமாக கவனம் செலுத்தப்பட்டு மிக நுணுக்கமாக விவாக விடயங்களை சரிவர நிறைவேற்றினார்கள். அதனால் அன்றைய காலத்தில் விவாக, விவாகரத்து விடயங்களில் நேர்மையான விளைவுகளே அதிகமாக கிடைக்கப் பெற்றது. எதிர் மறை சிந்தனைகள் மிக மிகக் குறைவாகவே அன்றைய காலத்தில் காணப்பட்டது.

இன்றைய காலத்தை பொறுத்த வரையில் விவாக, விவாகரத்து விடயங்களில் எதிர் மறை சிந்தனைகளே மிக அதிகமாக மேலோங்கி காணப்படுகிறது. இலங்கையிலும் கூட சராசரி ஒரு நாளைக்கு 300 விவாகரத்து நடந்தேறுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகிறது. இவ்வாறு பார்க்கையில் விவாகம், விவாகரத்து இன்றைய கால கட்டத்தில் சர்வ சாதாரண விடயமாக மக்கள் மனதில் வேறூண்டப்பட்டு அதன் புனிதத் தன்மை, அதன் தேவை, நோக்கம் அனைத்தும் சிதறடிக்கப்பட்டு அதன் செல்வாக்கை இழந்து விட்டன. இதனால் இன்றைய குடும்பம், சமூகம் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது. இக் கட்டுரையினூடாக விவாகம், விவாகரத்து சம்பந்தமான ஒரு தெளிவை இச் சமூகம் எட்டுவதே எமது நோக்காகும்.

திருமணம்

ஒரு ஆணும் பெண்ணும் சமூகத்தின் முன்னிலையில் கணவன் மனைவியாக ஏற்கும் சடங்கு திருமணம், விவாகம், கல்யாணம் என அழைக்கப்படுகிறது.

திருமணம் என்பது ஒரு சமூக, சட்ட, உறவு முறை அமைப்பாகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இரு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்களிடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஓர் ஆணும் ஓர் பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தப் பெறும் ஓர் ஒப்பந்தம்.

மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்த வரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும் நெறிமுறைகளும் காணப்படுகின்றன. திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண் பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி உருவாவதற்குரிய ஒரு விதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையை கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்து கொள்ளும் செயலே திருமணம் எனப்படும்.

திருமணம் – சொல்லும் பொருளும்

‘மணம்’ என்ற சொல்லுக்கு ‘கூடுதல்’ என்பது பொருள். இதன் வேர்ச் சொல் ‘மண்’ என்பதாகும். இன்று பொது நிலையில் ‘மணம்’ என்பது ‘நறுமணத்தைக்’ குறிப்பினும், பழங்கால வழக்கில் இச்சொல் பல பொருளை உடையதாக இருந்தது. ‘மண்ணுதல்’ என்ற சொல்லின் பொருள் ‘கழுவுதல், நெருங்குதல், கலத்தல், கூடுதல், அழகு பெறுதல்’ எனப் பல பொருள்படும்.

திருமணத்தைக் குறிக்கும் ‘மணம்’ என்றசொல் எவ்வாறு அமைந்தது என்பது தெரியவில்லை. மண் இயற்கையிலே மணம் உடையது. அதனை மண் மணம் என்பர். இது தமிழர் வழக்கு. இல்லறத்துக்கு நுளைவாயிலாக அமைவதனை மணம் என்ற சொல்லால் குறிப்பிட்டதன் நோக்கம் மண்ணைப் போல பொறுமை, அமைதி, எதையும் தாங்கும் வன்மை இவற்றை மணமக்கள் பெறுதல் வேண்டும் என்பதே அடிப்படை.

மனமொத்து வாழ்வு முழுவதும் மணம் பெற்று நிகழ்வதற்கு ஏதுவான இந்நிகழ்ச்சியை மணம் என்றனர். மேன்மைக்கு ‘திரு’ என்ற அடை கொடுத்து இல்லற வாழ்வின் அடிப்படையாக ‘திருமணம்’ என்று அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கால மாற்றத்தில் ஏற்படும் மன மாற்றமும், சமுகச்சூழலின் மேல் இருக்கும் அவரது பார்வையும் மாறுபடும். அதை காலம் வாரியாக பிரித்து கூற விழைகிறது இந்த கட்டுரை. ஓவ்வொரு தனிமனிதனின் வாழ்கை நிலை, வாழும் பகுதி, சார்ந்துள்ள சமுகம், வளர்ந்த விதம் என்று பல்வேறு கூறுகளைக் கொண்டு தான் இந்ந மனிதனின் மன மாற்றத்தை பற்றி புரிந்துகொள்ள முடியும்.

ஆனால் இதில் குறிப்பாக தனது எதிர்காலத்தைப் பற்றிய கற்பனைகளும் காலம் மாற மாற சூழலுக்கு ஏற்றாற்போல் தன்னை பொருந்திக்கொள்ளும் விதம் பற்றியும் பேசுகிறது இந்தக் கட்டுரை.

உலகெங்கிலும் இருக்கும் தனிமனிதர்களிடம் நிலவும் ஓர பரவலான கருத்து ‘உச்சபட்ச மகிழ்ச்சி என்பது உண்மையாகவே தனக்கு ஏற்ற மனைவியை கண்டுபிடிப்பது’ என்பது தான். தனிமையில் வாழ்பவர், தனிமையில் வாழும்போது தான், என் முழு சுதந்திரத்தை உணர்கிறேன் என்று கூறுவதுமுண்டு. 18வயதுக்கு மேற்பட்ட இரு பாலாருக்கும் திருமணம் பற்றிய கனவுகள் அவ்வப்போது வந்து போகும். அதிலும் ஓர சில ஆணும், பெண்ணும் தனக்கு திருமணத்தில் நாட்டம் இல்லாதது போன்றதொரு வெளிப்பாடு பலரை ஆச்சரியப்படுத்தும்.

இளைஞர்களின் உளவியல் மற்றும் இந்திய புள்ளிவிபரம் உளவியல் ரீதியாக நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறும் கூற்றுக்கள் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கும். திருமணமாகாத அமெரிக்க இளைஞர்கள் 814 நபர்களைக் கொண்டு, உளவியல் செய்த ஆய்வில், திருமணமாகாத பெண்கள் மிகவும் சுதந்திரமாக வாழ்வதாக உணர்வதாகவும். திருமணமாகாதவருக்கு தனது குடும்பத்தினர் மீது எப்போது அக்கறையும், பிணைப்பும் இருப்பதாகவும், திருமணமான ஆணும் பெண்ணும் தன் சுதந்திரத்தை இழந்து தவிப்பதாகவும் கூறுகின்றுது.

2017ஆம் ஆண்டு மே 24ஆம் திகதி, கேரள உயர் நீதிமன்றத்தால் ஒரு வழக்கில் விசித்திரமான தீர்ப்பு வழங்கப்பட்டது. ‘அகிலா’ என்கிற ‘ஹதியா’, இந்து மதத்திலிருந்து இஸ்லாமியத்திற்கு மாறி ஷஃபின் ஜஹன் என்பவரை திருமணம் செல்லாது என்பது தான் அந்த சர்ச்கை;குரிய தீர்ப்பு. இந்த கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ஹதியாவும், ஷஃபின் ஜஹனும் உச்ச நீதிமன்றத்தில் ஹதியா கூறியது, “தனி ஒரு பெண்ணால் தான் விரும்பிய மதத்திற்கு மாறத் தடை விதிப்பது, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. 18 வயது நிரம்பியவருக்கு நாட்டுப் பிரதமரை தேர்ந்தெடுக்கும் ஓட்டுரிமை உண்டு. திருமணம் செய்யலாம், குழந்தை பெற்றுக்கொள்ளலாம், சுயமாக வேலைக்குச் செல்லலாம், ஆனால் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறுதல் கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம்?” என்பது தான்.

இன்றைய தலைமுறையினரில் அநேகர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒன்றாகத்தான் ஹதியாவின் பார்வை இருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவு காதல் திருமணங்கள் நிகழ்கின்றது என்பதற்கு தேசிய குற்றப்பிரிவின் அறிக்கையில் 2014-2015 ல் கௌரவக் கொலைகள் 796 சதவிகிதமாக அதிகரித்திருப்பதாக தகவல் உள்ளது.

மேலே குறிப்பிட்ட புள்ளிவிபரங்கள் அனைத்தும் நமக்கு உணர்த்துவது, 18 வயது பூர்த்தியான அனைவரும் தன்னுடைய திருமணம், துணையை தேர்ந்தெடுப்பது போன்ற விடயங்களில் தானே முடிவெடுக்க விரும்புகிறார்கள் என்பதைத் தான். விரும்பியதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமே, எதிர்காலத்தின் மீது கொண்ட ஒரு கற்பனையும் ஒரு முக்கிய காரணம்.

ஸ்காட் ஹால்ட்ஸ்மேனின் கூற்றுப்படி, அநேக திருமணமான ஆண்களின் உரிமை முற்றிலுமாகப் பறிக்கப்பட்ட ஒன்று. அவர் மேலும் விரிவாக கூறுகையில், புதிதாக திருமண உறவில் ஈடுபட்டுள்ள ஆண்களின் இயல்பு நிலை சற்று மாறி, புதிய மனிதராக சுற்றியுள்ளவருக்கு தெரியும் என்கிறார்.

பொதுவாக திருமணமான பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசுவதாகவும், சராசரியாக 5 விதமான தொனிகளில் பேசுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதே திருமணமான ஆண்கள் ஒரு நாளைக்கு வெறும் 2000 வார்த்தைகள் மட்டும் பேசுவதாகவும், சராசரியாக 03 விதமான தொனிகளில் போசுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

ஸ்காட்டின் அதே ஆய்வில் திருமணமான ஆண்கள், உணர்வுகளைப் புரிந்து கொள்வதிலும், புதிய சந்தர்ப்பங்களைக் கையாள்வதிலும் தடுமாறுகிறார்கள் என்று கண்டறிந்துள்ளார். பிற்காலத்தில் வரயிருக்கும் மன உளைச்சலை கணிக்கத் தவறுகிறார்கள் ஆண்கள் என்கிறது அந்த ஆய்வு. திருமணமான ஆண்கள், திருமணமான புதிதில் தன் துணைவியாரோடு இருக்கும் பொழுதெல்லாம், தன் துணைவியருக்குப் பிடிக்கும்படியாக நடந்துகொள்வதில் முனைப்பு காட்டுவார்.

மணம் முடிக்க இருக்கும்; தருவாயில் தன் துணையிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணம் கொண்டுள்ளவர்களாக மாறுவார்கள் ஆண்கள். இதை பெண்ணோடு ஒப்பிடுகையில் ஆணுக்கு அதிகம் தான் என்கிறது ஸ்காட்டின் ஆய்வு. பெண்ணோடு திருமண உறவு ஏற்படும் தருவாயில், ஆண் பெண் உறவை புதிதாக ஒன்றன் போல் பாவித்துக்கொள்வார்கள் ஆண்கள். பெண்ணைக்காட்டிலும் ஆணுக்கு தன் துணைவியை மகிழ்விப்பது ஒரு பேரார்வமாகத் தான் இருக்கும்.

இஸ்லாத்தின் பார்வையில் திருமணம்

திருமணம் என்பது இறைவன் இவ்வுலகில் பிறந்துள்ள ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டாயமாக்கியுள்ள ஓர் உன்னத விடயமாகும். இது சிறந்த சந்ததிகளை உருவாக்கி பாவங்களை விட்டும், கொடிய நோய்களை விட்டும் ஒவ்வொரு ஆண் பெண்ணையும் பாதுகாக்கின்ற ஓர் கேடயமாகும். இஸ்லாத்தின் பார்வையில் அதுவொரு வணக்க வழிபாடாகவும் காணப்படுகிறது.

“நீங்கள் அமைதிபெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காக படைத்து உங்களிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.” (30:21)

“எவருக்கு திருமணம் முடிக்க சக்தி இருக்கிறதோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது அவர்களுடைய கண்களை தீய பார்வையிலிருந்தும் தடுகக்கககூடியதாகவும் கற்பை பாவங்களிலிருந்து பாதுகாக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. அதற்கு சக்தி பெறாதவர்கள் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். அதுவே அவருக்குரிய பரிகாரமாகும்.” (புஹாரி – 5066)

முனிதன் தனது வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகளையும் துன்பங்களையும் சந்திக்கிறான். அதிலிருந்து அவன் மனநிம்மதி பெறுவதற்கு அவனுடைய மனைவி அவனுக்கு உதவியாக இருப்பாள் எனக்கூறி அல்குர்ஆன் திருமணத்தின் அவசியத்தை உணர்த்துகின்றது. இதே போன்று இன்னோர் இடத்திலும் மனஅமைதி குறித்து தெளிவுபடுத்துகிறது.

“நீங்கள் அமைதி பெறுவதற்காக இரவையும், பார்க்கக் கூடிய நிலையில் பகலையும் அல்லாஹ் ஏற்படுத்தினான். அல்லாஹ் மனிதர்கள் மீது அருளுடையவன். எனினும் மனிதர்களில் அதிகமானோர் நன்றி செலுத்தவில்லை.” (40:61)

பகலில் கஷ்டப்பட்டு உளைக்கும் மனிதனுக்கு இரவு என்பது அமைதி பெற ஓர் அருளாக உள்ளது. பகலில் உழைப்பவன் இரவில் உறங்கி எழும்போது அவன் அமைதி பெறுகிறான். இது போலவே மனிதனுக்கு வாழ்க்கைத் துணையையும் அமைத்துள்ளான். இவ்வுலக வாழ்வில் திருமணம் அத்தியவசியம் என்பதால் இவ்வுலகில் வழிகாட்ட வந்த எம் உயிரிலும் மேலான முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் திருமணம் முடித்துள்ளார்கள் என்பதைக் காணலாம்.

“உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவி மக்களையும் ஏற்படுத்தினோம்.” (13:38)

நபிமார்களுக்கு திருமணம் கட்டாயமாக்கப்பட்டு இருந்ததால் எங்கள் மீதும் திருமணம் செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமணம் மிகவும் புனிதமான ஒப்பந்தம் என இஸ்லாம் கருதுகின்றது. உடல் சம்பந்தமான அல்லது பொருளாதார தகுதி இன்மையால் தடை வந்தாலே அன்றி ‘இல்லறமே நல்லறம்’ என்பது இஸ்லாத்தின் கோட்பாடாகும்.

மணமக்களைத் தேர்ந்தெடுத்தல்

இன்று இச்சமுதாயத்தில் ஒரு மணமகனையோ, மணமகளையோ தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் குடும்பப் பின்னணியையும், அந்தஸ்தையும், பணத்தையும், செல்வாக்கையும் பார்த்தே தேர்ந்தெடுக்கிறார்கள்.

“ஒரு பெண் 04 காரணங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். அவளது செல்வத்திற்காக, குடும்ப அந்தஸ்திற்காக, அழகுக்காக, அவளது மார்க்கத்திற்காக. ஆகவே மார்க்கமுடையவளையே திருமணம் செய்து வெற்றியடைந்து கொள். இல்லையெனில் உன் இரண்டு கரங்களும் நாசமடையட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி- 5090)

இங்கு பெண்ணை மட்டும் குறித்துச் சொல்லக் காரணம் பொதுவாக சமூக வழக்கு பெண் பார்க்கச் செல்வதுதான். ஆனால், இந் நிபந்தனைகள் கட்டாயம் ஆணிடத்திலும் இருந்தால்தான் இருமணம் இணைந்து திருமணத்தில் சௌகரியமாக இருக்க முடியும்.

மணமக்களை நேரில் பார்த்து திருமணம் செய்தல்

ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஓர் அன்ஸாரிப் பெண்ணை மணம் முடிக்க இருக்கிறேன் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீர் அப்பெண்ணை நேரில் பார்த்தீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த நபித்தோழர் “இல்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ நீ சென்று அவளைப் பார்த்துக்கொள். பின் விவாகரத்துக் கூடாது.” எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்வில் மணமுடித்த அனைத்துப் பெண்களையும் நேரில் பார்த்துத்தான் திருமணம் முடித்தார்கள் என்பதை நாம் வரலாற்றில் காணலாம். எனவே இந்த அடிப்படையில் நாங்கள் திருமணம் செய்வது அவசியமாகும்.

திருமணத்திற்கான அடிப்படை அம்சங்கள்

 1. மணமகளுக்கான ஒரு பொறுப்பாளர் (வலி) இருக்க வேண்டும்.
 2. இரு சாட்சிகள்
 3. மணமக்ளின் சம்மதம்
 4. மஹர்

“எந்தவொரு பெண் தன் பொறுப்பாளர் இன்றி திருமணம் செய்கின்றாளோ அத்திருமணம் அங்கீகரிக்கப்படமாட்டாது. அப் பெண்ணுடன் உடலுறவு கொள்வதை மஹர் தொகை அனுமதிக்கின்றது. எவரொருவருக்கு வலி இல்லையோ அவருக்கு அரசர் வலியாவார்.” (திர்மிதி)

எனவே இதனடிப்படையில் நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் பார்வையில் பலதார மணத்திற்கு அனுமதியுண்டு. ஒரு ஆண் 04 பெண்களை ஒரே தடவையில் திருமணம் செய்து கொள்ள முடியும் என இஸ்லாம் அங்கீகரிக்கின்றது.

அல்லாஹ் குறிப்பிடும் போது, “ உங்களுக்குப் பிடித்த பெண்களில் இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள். மனைவியரிடையே நீதமாக நடக்க அஞ்சினால் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். இதுவே நீங்கள் வரம்பு மீறாதிருக்க நெருக்கான வழியாகும்.” (04:03)

இஸ்லாத்தில் பலதார மணம் அனுமதிக்கப்பட்டிருப்பதன் நோக்கம் சமூகச் சீர்கேடுகள், விபச்சாரம் போன்ற பெரும்பாவங்களிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கவே. ஒரு ஆண் ஒரு பெண்ணை மாத்திரம் திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தால் இன்று சமூகத்தில் அனாச்சாரங்களும், பாலியல் பிரச்சினைகளும் பல்கிப் பெருகியிருக்கும். இதன் மூலம் பலதார மணத்தை அங்கீகரிப்பதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

பிந்திய வயதுத் திருமணம்

பிந்திய வயதுத் திருமணத்தால் ஏற்படும் பிரச்சினைகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. பொதுவாக வாலிபப் பருவமானது பாலியல் ஆசைகள், உடல் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத ஒரு பருவமாகும். இவ்வயதுதான் தவறான நடவடிக்கைகள் அனைத்திற்கும் அழைத்துச் செல்கிறது. எனவே தான் இஸ்லாம் ஹலாலான முறையில் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள திருமணத்தை அங்கீகரித்துள்ளது.

இன்று எம சமுதாயத்தில் உள்ள வழமையைப் பார்ப்போமானால், ஆணுக்கும் பெண்ணுக்கும் 28, 29, 30 ஆகிய வயதுகளை எட்டியிருந்தும் திருமணம் முடித்துக் கொடுக்காமல் எம் பெற்றோர்கள் தாமதப்படுத்துகின்றார்கள். இதனால் ஏற்படும் பிரச்சினைகள் அளவிட முடியாதது. மேற்குறிப்பிட்ட படி ஆண், பெண் தகாத உறவு ஏற்படுவதற்கு பிந்திய வயதுத் திருமணம் ஓர் முக்கிய காரணமாக இருக்கிறது. அத்துடன் வாலிபபருவத்தில் உள்ள திருமணம் சம்பந்தமான ஆசைகள், உணர்ச்சிகள் அனைத்தும் மக்கிப் போய்விடுகின்றன. அத்துடன் இதனால் பரம்பரை விருத்தியும் குறைவுறுகின்றது. உரிய வயதில் திருமணம் நடாத்தி வைக்கப்படும் போது இவ்வாறான தீமைகளிலிருந்து சமூகத்தின் இளைஞர், யுவதிகளை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இஸ்லாத்தில் துறவறம் (இருக்க யாருக்கும்) அனுமதியில்லை

உஸ்மான் பின் மஸ்ஊத் (ரழி) அவர்கள் துறவறம் மேற்கொள்ள நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்கவில்லை. (புஹாரி – 5074, முஸ்லிம் -2715)

மேலும் திருமணத்தை செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுத்தான் இறையருளைப் பெற முடியும் என்பதையும் நபி(ஸல்) அவர்கள் எமக்குத் தெளிவு படுத்தியுள்ளார்கள். மேலும் இஸ்லாம் ஆண்மை நீக்கத்திற்கு அனுமதி வழங்கவில்லை. திருமண உறவை வெறுத்தோ அல்லது திருமணம் செய்வதற்குரிய வசதி வாய்ப்புகள் இல்லாததை எண்ணி ஆண்மை நீக்கம் செய்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. “ நாங்கள் ஆண்மை நீக்கம் செய்து கொள்ள நபி(ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதறகவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் என தடை விதித்தார்கள்”. (புஹாரி – 5075, முஸ்லிம் – 2720)

இஸ்லாத்தில் துறவறத்திற்கும் ஆண்மை நீக்கத்திற்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனுமதி இல்லை என்பதற்கு மேற்கூறப்பட்ட ஹதீஸ் ஆதாரங்கள் போதுமானதாகும். இவ்வாறான வழிமுறைகள் எமது முஸ்லிம் சமுதாயத்தில் அனுமதிக்கப்படாதிருந்தும் கூட இன்னும் எமது முஸ்லிம் சமுதாயத்தில் இவ்வாறான பாலியல் ரீதியான குற்றங்கள் காணப்படுகிறது என்பதும் நிதர்சனமாகும்.

விவாகரத்து

திருமணத்தை வரவேற்கின்ற இஸ்லாம் விவாகரத்து எனும் மனமுறிவை அறவே வெறுக்கின்றது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் இஸ்லாம் எத்தகைய பிரச்சினை கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட போதும் முடியுமான வரை அக்குடும்பத்தை பிளவு படுத்தாமல் இருக்கும் அம்சங்களையே வலியுருத்துகின்றது.

“இன்னும் கணவன் மனைவி இருவருக்குமிடையே பிளவு ஏற்பட்டு விடுமோ என நீங்கள் அஞ்சினால் அவரின் உறவினரிலிருந்து ஒரு நடுவரையும் அவளின் உறவினரிலிருந்து ஒரு நடுவரையும் நீங்கள் அவ்விருவரிடமும் அனுப்புங்கள். நடுவர்களாகியவர்கள் கணவன் மனைவிக்கிடையே இணக்கத்தை உண்டாக்க நாடினால் இருவருடைய இணக்கத்துக்கு அல்லாஹ் உதவி செய்வான் “(4.35)

இம்முயற்சிகள் வெற்றி காணாத போது கையாளப்படும் கடைசி பரிகாரமாகவே விவாகரத்து அமைந்து விடுகின்றது. ஆனால் இது இறைவனுக்கு ஒப்பான விடயம் அல்ல என்ற விடயத்தை நபி முஹம்மது (ஸல்)அவர்கள் இப்படிச் சொல்லிக்காட்டினார்கள்.

“இறைவன் ஆகுமாக்கியவற்றில் அவனுக்கு மிக வெறுப்பானது தலாக் எனும் விவாகரத்தாகும்.” (ஹதீஸ்)

எனினும் வாழ்க்கையில் மோசமான கட்டங்களை சந்தித்து வாழ்நாள் முழுவதும் அவஸ்தை படாதிருக்க ஆணுக்கும் பெண்ணுக்குமாக விவாகரத்து கோரக்கூடிய 03 வழிமுறைகளை இஸ்லாமிய ஷரீஆ சட்டம் குறிப்பிட்டுள்ளது.

 1. தலாக்- ஆண் கோருவது
 2. குல்உ- பெண் கோருவது
 3. பஸ்ஹ{ – இருவருக்கும் பொதுவானது.

இந்த விடுதலை பெறப்பட்டாலும் இதில் அனேகமாக பாதிக்கப்பட்டவர்களாக பெண்களே காணப்படுகின்றார்கள். குருவி கூட தனக்கான ஒரு கூட்டை ஒரே நாளில் கட்டிக் கொள்வதில்லை.பல நாட்கள் போராடி தான் தனக்கான பாதுகாப்பான கூட்டை அமைத்துக் கொள்கின்றது.சில சமயம் குருவியே தான் கட்டிய கூட்டை அழித்து விட்டு பின்னர் அவதிப்படும். அதுபோலத்தான் திருமண பந்தமும். சமீப காலமாக திருமணத்திற்கு பின்னர் மன முறிவு ஏற்பட்டு கணவன் மனைவி பந்தத்தை சிதைத்துக் கொள்ள நீதிமன்ற வாசலில் ஆண்டுக்கணக்கில் தவம் கிடக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

உலக மக்களிடையே விவாகரத்து

சேர்ந்து வாழும் குடும்ப விவாகரத்தை விட திருமணம் செய்த குடும்ப விவாகரத்து அதிகமாகும். பாலியல் திருப்தி இன்மையால் விவாகரத்து செயவோரின் நிலை,

[table id=1 /]

பிரான்சில் நடக்கும் விவாகரத்துக்கள்

[table id=2 /]

இலங்கை மக்களிடையே விவாகரத்து

“பொதுவாக குடும்ப கட்டமைப்பு சிதைந்து, கணவன் மனைவி ஆகிய இருவரும் உள ரீதியில் விவாகரத்து பெற்றதன் (psychological devorce) பின்னரே நீதி மன்றங்களை நாடி வெளிப்படையான விவாகரத்துக்களுக்கு வருகின்றனர்.” என 2013ம் ஆண்டில் கனடாவை தளமாக கொண்டு இயங்கும் focus எனும் நிறுவனத்தின் இலங்கை கிளை செய்த ஆய்வில் குறிப்பிட்ப்பட்டுள்ளது.

தற்காலத்தில்,இலங்கையில் விவாகரத்து இடம்பெறும் அளவு அதிகம் எனவும், திருமணமான மொத்த பெண்களின் தொகையில் 25% ஆனோர் விவாகரத்து பெற்றவர்கள் எனவும் கொழும்பு பல்கலைக்கழக வெகுஜன ஊடக கற்கை பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருமணம் குறித்து மக்கள் தொடர்பாடல் சார் அவதானமொன்றை பெற திருமணமான பெண்களை மாத்திரம் கவனத்தில் எடுத்து இவ்வாய்வானது; பல்கலைக்கழக இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்களின் உதவியுடன் பல்கலைக்கழக வெகுஜன ஊடக கற்கைப்பிரிவு பேராசிரியை அஜந்தா ஹபு ஆரச்சி மற்றும் ஆய்வு உதவியாளர் கிரிசான சிரிவர்தன ஆகியோர் இணைந்து வடக்கு,கிழக்கு தவிர்ந்த ஏனைய 14 நகரங்களை உள்ளடக்கி இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டள்ளது.

இவ்வாய்வின் மூலம் அதிகபடியான விவாகரத்து இடம் பெறும் நகரமாக கெழும்பு 57% ஆக அடையாளம் காணப்பட்டுள்ளது. கம்பஹா, இரத்தினப்புரி, காலி ஆகிய நகரங்களில் அதிக வீதமும் ஹம்பாந்தோட்டை, மெணராகலை ஆகிய நகரங்களில் அதி குறைந்த வீதமும் விவாகரத்து நிகழும் நகரங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் 58% காதல் திருமணம் முடித்தவர்கள், 42 %ஆனோர் பேச்சுவார்த்தையின் பின் நிச்சயித்து திருமணம் முடித்தவர்களாகும். திருமணம் செய்து கௌ;பவர்களிடையில் காணப்படும் புரிந்துணர்வின்மை காரணமாக இலங்கையில் தினமும் 300 பேர் விவாகரத்து செய்து கொள்கின்றனர். 3892 பேர் 18 வயதுக்கும் குறைந்த வயதில் தாய்மை அடைகின்றனர்.

இலங்கையில் நாளாந்தம் அதிகரித்து வரும் விவாகரத்துக்கான காரணங்கள்

[one_half]

 • மூன்றாம் நபர் தலையீடு
 • சம வயது திருமணங்கள்
 • சீதனம்
 • வயது வேறுபாடு
 • இள வயது திருமணம்
 • அந்தஸ்து வேறுபாடு
 • வாழத்தெரியாமை
 • கல்வித்தகுதி வேறுபாடு
 • சொத்துப்பிரச்சினை
 • வெளிநாட்டு வேலை வாய்ப்பு
 • கள்ளத்தொடர்பு
 • வசதியின்மை
 • ஏற்றத்தாழ்வு
 • உளவியல் தாக்கங்கள
 • சந்தேகம்
 • உழைப்பின்மை
 • கணவனின் தொல்லைகள்
 • கடன் சுமை [/one_half]
 • பொறுப்பற்ற கணவன்
 • ஏமாற்றுத்திருமணங்கள்
 • காதல் திருமணங்கள்
 • மதமாற்றுத் திருமணங்கள்
 • குடும்பப்புறக்கணிப்பு
 • விட்டுக்கொடுக்காமை
 • பாலியல் குறைபாடுகள்
 • குறைபாடுள்ள பிள்ளைகள்
 • குழந்தை பேரின்மை
 • நவீன தொலை தொடர்பு சாதனங்கள்
 • திடீரென செல்வம் கூடல்
 • மார்க்க விளக்கமின்மை
 • முறையற்ற பிள்ளை வளர்ப்பு
 • போதைப்பொருள் பாவனை
 • மருமணங்கள்
 • சமூகத்தின் பங்களிப்பிகன்மை
 • ஆடம்பர மோகம்
 • சுத்தமின்மை
 • மாறிவரும் வாழ்க்கைச்சூழல்
 • மனம் விட்டு பேசாமை
 • தாம்பத்திய உறவில் குறை

விவாகரத்துக்களால் ஏற்படும் பாதிப்புக்கள்.

விவாகரத்துக்களால் பல பாதிப்புக்கள் இடம்பெறுகின்றன. அவற்றை பின்வரும் அடிப்படையில் வகைப்படுத்தி பார்க்கலாம்.

 1. தனிமனித பாதிப்புக்கள்
 2. குடும்ப பாதிப்புக்கள்
 3. சமூக பாதிப்புக்கள்

தனிமனித பாதிப்புக்கள்

உள ரீதியானது.
பாதகமானது

 • குற்ற உணர்வு
 • பதற்றமான நிலை
 • தனிமை உணர்வு
 • மகிழ்ச்சியற்ற தன்மை
 • மன வலி
 • மன உளைச்சல்களுக்கு உள்ளாதல்
 • நம்பிக்கை இழத்தல்

சாதகமானது

 • சுதந்திர உணர்ச்சி
 • தனது வாழ்க்கை தொடர்பான தீர்மானங்களையும் கட்டுப்பாடுகளையும் தானே செயற்படுத்தக்கூடிய தன்மை.
 • ஆளுமை விருத்தி

குடும்ப பாதிப்புக்கள்

 • சுயமரியாதை பாதிக்கப்படல்.
 • உறவுகள் துண்டிக்கப்படல்.
 • பிள்ளைகள் பிச்சைக்காரர்களாக மாற்றப்படல்.
 • சமூகத்தின் பலிச்சொல்லுக்கு ஆளாகுதல்.
 • பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படல்.
 • விபச்சாரம் அதிகரிப்பு
 • பாலியல் துஸ்பிரயோகம் அதிகரிப்பு
 • ஆரோக்கியமற்ற சமூகம் ஒன்றை உருவாக்குதல்
 • சமூக கௌரவம், அந்தஸ்து பாதிக்கப்படல்.

சமூக பாதிப்புக்கள்

 • தற்கொலை அதிகரிப்பு
 • மனிதர்களை கொலைக்காரர்களாக மாற்றுகிறது
 • கலாச்சார சீர்கேடுகள்
 • போதை வஸ்துக்களின் அதிகரிப்பு
 • நோய்களின் அதிகரிப்பு (எயிட்ஸ், கனேரியா, சிபிலிஸ், மாரடைப்பு)
 • விபச்சாரம் அதிகரிப்பு
 • பாலியல் துஸ்பிரயோகம் அதிகரிப்பு
 • ஆரோக்கியமற்ற சமூகம் ஒன்றை உருவாக்குதல்
 • சமூக கௌரவம், அந்தஸ்து பாதிக்கப்படல்.

முடிவு

எதிர்மறை எண்ணங்கள் கொண்ட குழந்தைகள்; உள்ள சமுதாயம் ஆரோக்கியமானதாக இருக்க வாய்ப்பில்லை. விவாகரத்து பெற்றால் உறவு மதிக்காதே என்ற பயம் முன்பு இருந்தது. அவசரப்பட்டு விவாகரத்து பெறுவோர், இன்னொரு வாழ்வை அமைத்து கொண்டாலும், வெற்றிகரமாக ஒரு சிலரால் மட்டுமே முடிகிறது. இயலாத சிலர், வாழ்வு அதன் போக்கில் போகிறது மனஉறுதியுடன் இருப்போர் மட்டுமே லட்சியத்துடன் முறைப்படி வாழ்வை கொண்டு செல்கின்றனர். குழந்தைகளின் நலன் கருதியாவது விவாகரத்தற்ற இனிய குடும்பங்கள் சேர்ந்த சமூகம் அமைப்போம் என ஒவ்வொரு பெற்றோரும் எண்ணினால் நிச்சயம் நடக்கும்.

இவ்வாய்வானது பல முடிவுகளை முன் வைத்திருக்கின்றது. உண்மையில் எமது முஸ்லிம் சமுதாயத்தில் விவாகச்சிறப்புக்கள் மறைக்கப்பட்டு விவாகரத்து செயற்பாடுகள் தான் குவிந்த வண்ணமுள்ளன. பல காதி நீதிமன்றங்கள் வாயிலாக எத்தனை பேரை வாழ வைத்திருக்கின்றன? வாழ வைக்கின்றன? என்பதை உணர முடியும். சிங்கள பெரும்பான்மை கொண்ட இந்த நாட்டில் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் பேண முஸ்லிம் தனியார் சட்டம் என்ற ஒன்றின் மூலம் சட்ட வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்தி இருப்பது ஒரு வரப்பிரசாதமாகும்.

இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தின் விவாகரத்து குறித்த விதிகளை பற்றிய முறையான தெளிவின்மை காரணமாக மக்கள் எடுத்த எடுப்பிலேயே காதி நீதிமன்றங்களில் மனுத்தாக்கள் செய்கின்றனர். வழக்குடன் தொடர்புபடும் நபர்கள் சட்டத்தினை மீறி நடக்கின்ற போது அதற்குரிய முறையான நடவடிக்கைகள் மேற்கொள்வதில் கால தாமதம் ஏற்படுகின்றன. இவ்வாறாக விவாகரத்து முறைகளுக்கான அதிக காரணமாக பெண்கள் விளங்கிய போதிலும் பெண்களும் பிள்ளைகளுமே அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

எனவே, இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்ட காரணங்கள் மீள் பரிசீலிக்கப்பட்டு, பாதிப்புக்கள் குறைக்கப்படல் வேண்டும். அதன்படி குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் காதி நீதவான், கல்விமான்கள் மற்றும் உலமாக்கள் போன்றோரை சந்தித்து நேர்கண்டு கலந்துரையாடியதன் மூலம் பெறப்பட்ட தகவலின் படி இத்தகைய விவாகரத்துக்கள் முஸ்லிம் சமூகத்தில் அதிகம் இடம்பெறுகின்றமை கவலை தருவதாகவும் விவாகரத்து செயது கொண்டோரின் குடும்பத்திலும் சமூகத்திலும் இப்பிரச்சினை பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் நேர்காணல் மூலம் அறியப்பட்ட தகவலாகும். எனவே பின்வரும் விதந்துரைப்புக்கள் விவாகரத்து செயற்பாடுகளை இப்பிரதேச முஸ்லிம்கள் மத்தியில் குறைப்பதற்கும் எனைய முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் துணையாக அமையும்.

அதன்படி இவ்வாய்வின் முடிவுகள் பின்வரும் விதந்துரைப்புக்களை முன்வைக்கின்றது.

 1. விவாகரத்து பற்றிய இஸ்லாமிய நோக்கினை குறிப்பிட்ட பிரதேசத்திற்கு ஆழமாக தெளிவு படுத்தல்.
 2. இஸ்லாம் பற்றிய போதிய அறிவினை பிரசே முஸ்லிம்களுக்கு வழங்கள்.
 3. விவாகரத்தால் ஏற்படும் இம்மை,மறுமை வாழ்வு பற்றி தெளிவு படுத்தல்.
 4. குடும்ப சமூக மட்டத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எல்லாம் விவாகரத்து ஒரு தீர்வாக அமையாது என்பதனையும் அதனால் விவாகரத்த பெரும்பாலும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும்கற்று சமூகத்துக்கு எடுத்துக்காட்டும் முயற்சிகளில் மார்க்கத் தலைவர்களும், சமூகத்தலைவர்களும் ஈடுபடுதல் வேண்டும்.
 5. இப்பிரச்சினைக்கு தூண்டக்கூடிய சீதனம் போன்ற காரணங்களை சமூகம் பொறுப்பேற்று அவற்றை களைய ஆவண செய்தல் வேண்டும்.

முஸ்லிம் மக்களிடையே விவாகரத்து சம்பவஙகள் சாதாரணமாக நடைபெற்று வருவதனையும், குடும்பம் மற்றும் சமூகம் இதில் அதிகம் செல்வாக்கு செலுத்தியிருப்பதனையும் அதற்கு மார்க்கம் பற்றிய போதிய அறிவின்மையும், விவாகரத்தினை மக்கள் பிரச்சினைகளுக்கான முதலும் இறுதியுமான தீர்வாக கருதுவதும, அது ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி சிந்திக்காமையும் இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளன.

என்பதனை இவ்வாய்வின் முடிவுகள் வெளிப்படுத்துகினறன. எதிர்காலத்திலும் இவ்வாறான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதனால் அதனை கருத்திற்கொண்டு இத்தகைய விவாகரத்து முயற்சிகளை தடுப்பதற்கான விதந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

Nafees Naleer
Irfani

Leave a Reply

Your email address will not be published.