ஒரே ஒஙட கொறய தான் மாமி கதக்கிற.

  • 2

திருப்பு முனை
பாகம் 23

அவள் வீட்டு வேலைகளில் மூழ்கிப் போனாள்.

“தங்கச்சி” என்ற குரல் கேட்டு வாசலுக்கு வந்தாள். வாசலில் சலீமா தாத்தா நின்றிருந்தாள்.

“ஆ! தாத்தா நீங்களா? வாங்க உள்ளுக்கு” சலீமாவிடம் நடந்ததை கூறினாள் லீனா.

“இது ஒஙட வாழ்க்க தங்கச்சி. நீங்க யோசிச்சி ஒரு முடிவெடுங்க. ஷரீப்ப திருத்தவே ஏலாதா”

“எனக்கு என்டா அப்படி ஒரு நம்பிக்கயே இல்ல தாத்தா. இனி பேசி வேலல்ல.”

“ம்ம். கவல பட வானா தங்கச்சி. எல்லாம் நலவுக்கு தான். இதுக்கு பொறகு சரி ஒஙலுக்கு நல்ல வாழ்க்க ஒன்டு கெடக்கும்.”

“வானா தாத்தா. இதோட எனக்கு எல்லாமே போதும். நா தனியா இருந்தாலும் பரவல்ல. இனி ஒரு வாழ்க்கயே வானா. இப்ப யாரயுமே நம்ப பயம்.”

“ம்ம் அதும் உண்ம தான் தங்கச்சி.படிங்க படிப்பு கை கொடுக்கும்.”

“ம். அது தான் தாத்தா. ஆ! நா ஒஙல்ட ஒன்டு கேக்கவே இருந்தேன். ரோஸிய பத்தி நா ஒரு நாள் ஒஙல்ட கேக்க கொல ரோஸி ஆன்டி தான் அவ என்டு நீங்க ஏன் எனக்கிட்ட சொல்லல்ல?”

“எப்படி தங்கச்சி நா சொல்ல. அப்ப ஒங்களுக்கு ஒன்டுமே தெரியா. அந்த time ல நா இதுவல சொல்லி ஒஙல கொலப்ப படாதேன்னு தான் தேடி பார்க்க சொன்னேன். அதும் நா சொல்லி நீங்க தெரிஞ்சி கொள்றத விட நீங்க தேடி பார்த்து உண்மய தெரிஞ்சி கொண்டா ஒங்களுக்கு எத்துனயோ விஷயம் கண்ணுல காட்டிபடுமே அதான் நா இத பத்தி பெருசா சொல்லல்ல.”

“ஆ! அப்படியா தாத்தா. நீங்க சொல்றதும் சரி தான். பல நாள் கள்வன் ஒரு நாள் அகப்படுவான்டு சொல்வாங்களே. அதுபோல தான் இவர்ட கதயும். நா இதுவல தேடி பார்க்க கொல தான் ஏன்ட மடத்தனமும் வெளங்குது. எனக்கே ஏன்ட மேல வெறுப்பா இரிக்கி. ச்சே”

“அப்படி சொல்ல வானா தங்கச்சி. இது எல்லாம் ஒஙலுக்கு பாடம் தான். இப்ப வெளங்குது தானே ஒவ்வொத்தர்ட மாதிரி. அத நெனச்சி சந்தோசப்படுங்க.”

“ம்ம். இப்படி குடும்பமே குழி தோண்டும்டு நெனக்கவே இல்ல. பிரிச்சி பார்த்துட்டாங்களே அதான் கவல.”

“நீங்க இதுவல யோசிச்சி கவல படாதீங்க. அல்லாஹ் ஒஙல கையுட மாட்டான். ஒஙல மாதிரி ஒருத்தர மிஸ் பண்ணினதுக்கு ஷரீப் ஒரு நாளக்கி யோசிப்பான்.”

“எனய மிஸ் பண்றதுக்காக இவர் கனவுலயும் feel பண்ண மாட்டாரு. அப்படியே feel பண்றதா இருந்தா அது ரோஸிக்காக தான் இரிக்கும்.”

“ம்ம். அது நெசம் தங்கச்சி.”

சிறிது நேரத்தில் சலீமாவும் சென்று விட்டாள். ஷரீப் வீட்டுக்கு வந்திருந்தான்.

“லீனா ஊட்ல கோல்.” என்று 4nஐ நீட்டினான்.

“என்னா லீனா ஓன்ட மனசுல நெனச்சிட்டு இரிக்கிறாய். எதுக்கு divorce கேக்குறாய். மூள சரில்லயாடி ஒனக்கு. எப்படி வாய் கூசாம இப்படி ஒரு வார்த்தய சொல்றாய் ஆ”

“மாமி நா divorce அ தான் கேட்டேன். இதுக்கே இப்படி கோவத்துல கத்துறீங்களே. அப்ப இவர் இங்க போடுற கூத்துகளுக்கு எனக்கு எவ்வளவு கோவம் வரும். எத்துன நாளக்கி தான் நானும் பொறுக்க?”

“லீனா சரி நீங்க அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வானா. நாளக்கி உம்மாவ அங்க அனுப்புறேன். உம்மாவ பார்க்க தான் நீங்க ஆசப்பட்டீங்க. நீங்க ஆசபட்ட மாதிரி தான் நாங்களும் இரிப்போம். நீங்க சந்தோசமா இருந்தா போதும். சும்மா divorce அதுகள மண்டயில போட்டு கொலப்பிக் கொள்ள வானா சரியா. ஷரீப் பிரச்சின படுத்தினா எனக்கு சொல்லுங்க. நா அவன பார்த்து கோறேன். சரியா.”

‘எப்படி எல்லாம் நடிக்கிறாங்க’ என்று லீனா மனதில் நினைத்து கொண்டாள்.

“ம்ம். சரி மாமா ஊட்லயா. நா மிச்ச நாளா பேசவே இல்ல அவரோட.”

“ஓ இரிங்க குடுக்குறேன்.”

மாமாவுடன் மனம் விட்டு பேசினாள். அவரும் அவளுக்கு நிறைய ஆறுதல் கூறினார். பின்னர் வீட்டில் உள்ள மற்ற எல்லோரிடமும் பேசி விட்டு அழைப்பை துண்டித்தாள்

*******************

மறுநாள் தாய் மர்யம் வந்திறங்கினார். லீனாவுக்கோ பேரானந்தம். தாயை அன்போடு வரவேற்று பணிவிடைகள் செய்தாள். மதிய உணவுக்கு பின்னர் வாசலில் அமர்ந்து தாயுடன் கதைத்து கொண்டிருந்தாள். அப்போது ஷரீப் வெளியே சென்றிருந்தான்.

“என்னம்மா இது. நீங்க இரிக்கிற கோலத்த பாருங்க. மொகத்துல ஒரு சொட்டு சந்தோசத்தயே காணம். ஊட்ல இரிக்க கொல எப்படி எல்லாம் ஒவ்வொத்தர சிரிப்பு காட்டிட்டு இரிந்தீங்க. ஒஙல இப்படி ஒரு கோலத்துல பார்க்கவா லீனா முடிச்சி குடுத்த. ஏன் அல்லாஹ் ஏன்ட புள்ளய இப்படி எல்லாம் சோதிக்கிறாய்.”

என்று தாய் மர்யம் சிறு குழந்தை போல கதறி அழுதாள். அதை பார்த்த லீனாவும் தாயை கட்டியணைத்து அழுதாள்.

“அழாதீங்க உம்மா! அல்லாஹ் ஏழைகள கையுட மாட்டான். அழாதீங்க.”

சிறிது நேரம் ஓர் அமைதி.

“லீனா நா ஒன்னு கேக்கனும்டு தான் இருந்தன். நீங்க pregnant ஆ இருக்கிறன்டு சொல்லி தான் எனய இங்க அனுப்பினாங்க. உண்மயா அது? எனக்கு ஒரு வார்த்த சரி சொல்லவும் இல்ல.”

தாயின் இந்த கேள்வி லீனாவை நிலைகுலையச் செய்தது. கூடவே அவளுக்குள் வெறுப்போடு கோபமும் வந்தது.

“யாரும்மா அப்படி சொன்ன ஒங்களுக்கு? அப்படி இருந்தா ஒங்களுக்கு சொல்லாம இருப்பேனா? புள்ள என்ன வானத்துல இருந்தா வருது?”

என்றாள் அடக்கப்பட்ட கோபத்துடன். மர்யமுக்கு எல்லாம் புதிராக தெரிந்தது. என்றாலும் அவளால் விடிவை காணத்தான் முடியவில்லை. அவளால் அழ மட்டுமே முடிந்தது. பிறகு மர்யம்,

“அதும் இன்னொரு கதயும் சொன்னாங்க. ஒங்களுக்கு புள்ளக்கி நின்டு இருந்தாம் இதுக்கு மொத. நீங்க ஊஞ்சல் ஆடி கீழ விழுந்து அது இல்லாம போச்சாம் என்டு.”

“அஸ்தஃபிருல்லாஹ்.”

“அப்படி ஒன்னு நின்னு இருந்தா தானே இல்லாம போறதுக்கு? இப்படி ஒரு பொய்ய வாய் கூசாம சொல்லி இருக்குதுகல் ச்சீ”

“உண்மையில் இப்படி ஒரு கதை வர என்ன தான் காரணம்? பொறுத்திருந்து பார்ப்போம்.”

பிறகு மர்யம்.

“லீனா எனக்கு சொகமில்லாத time நா ஒஙல பாக்க எவ்வளவு ஆசபட்டேன். ஒஙல கூட்டி வர சொல்லி எவ்வளவு கெஞ்சினேன். நீங்க திடீர்ன்னு வந்துட்டு போனீங்க. அப்பவே எனக்கு பட்டிச்சி நீங்க பிரச்சினயில தான் இரிக்கிறன்டு. லீனா என்னா தான் நடக்குது. எனக்கு ஒன்டுமே சொல்றல்ல நீங்க ஆக்குற அரிக்கிர இல்லயாம். மாப்புளய கவனிக்கிற இல்லன்டு மட்டும் தான் எனக்கிட்ட சொல்ற. எனக்கு ஊட்ல நிம்மதியாவே இரிக்க உடுறல்ல. ஒரே ஒஙட கொறய தான் மாமி கதக்கிற. நானும் என்ன தான் செய்ய எல்லாத்தயும் கேட்டுட்டு இரிப்பேன்.”

“உம்மா நீங்க இதுவல நம்புறீங்களா? அப்படி என்டா நா ஆக்குரத்த ஷரீப் தின்னாம வேற ஒத்தனா வந்து தின்னுட்டு போறான். எல்லாம் நடிப்பு உம்மா.”

“லீனா ஒஙல பத்தி எனக்கு நல்லா தெரியும். அதான் நா ஊட்ல ஒஙல பத்தியே யோசிச்சிட்டு தான் இரிப்பேன். ஒரு பொம்புள புள்ளய குடுத்தா அந்த தாய் வயித்துல நெருப்ப கட்டிட்டு தான் இரிப்பா. நா இல்லாட்டி ஒஙட நெலம என்னாகுமோ. மீண்டும் மர்யம் அழுது விட்டு.”

“நீங்க சொல்லுங்க லீனா என்னா நடந்திச்சி.” லீனா முழு கதையையும் தாயிடம் சொல்லி கதறி அழுதாள்.

தொடரும்
Noor Shahidha
SEUSL
Badulla

திருப்பு முனை பாகம் 23 அவள் வீட்டு வேலைகளில் மூழ்கிப் போனாள். “தங்கச்சி” என்ற குரல் கேட்டு வாசலுக்கு வந்தாள். வாசலில் சலீமா தாத்தா நின்றிருந்தாள். “ஆ! தாத்தா நீங்களா? வாங்க உள்ளுக்கு” சலீமாவிடம்…

திருப்பு முனை பாகம் 23 அவள் வீட்டு வேலைகளில் மூழ்கிப் போனாள். “தங்கச்சி” என்ற குரல் கேட்டு வாசலுக்கு வந்தாள். வாசலில் சலீமா தாத்தா நின்றிருந்தாள். “ஆ! தாத்தா நீங்களா? வாங்க உள்ளுக்கு” சலீமாவிடம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: