வெறுக்காதே வாழ்வை!

  • 14

நீங்கள் சிறைச்சாலையைப் பற்றி
கேள்விப் பட்டுள்ளீர்களா?
குற்றவாளிகளின் வாழ்க்கை
முறையை அறிந்துள்ளீர்களா?

அவர்களுக்கும் உலகுக்குமான
தொடர்பு ஏதும் உண்டா?
அந்த வாழ்க்கை
எவ்வளவு கரடுமுரடானது
என்பதை உணர்ந்ததுண்டா?

அவர்களது வாழ்க்கை
காட்டில் தனித்து விடப்பட்ட
மரத்தை போன்றது
அந்த மரத்துக்கு
உற்றார் உறவினர் என்று
எவரும் இல்லை

மழையோ வெயிலோ பாராது
அது நிமிர்ந்து நிற்கும்
வசந்தமோ வரட்சியோ
அதை ஏற்று வாழும்

எதிர்பாராத நேரத்தில்
மரம் வெட்டியின் கோடாரி
அம்மரத்தை பிளக்கும்
விறகு வெட்டியின் கரங்களுக்கு
அதன் கிளைகள் சொந்தமாகும்
என்றாலும் அது
மடிந்து போகவில்லை
திடமாகத் தான் இருக்கிறது

அந்த மரத்துக்கு தெரியும்
இந்த உலகம் மறுமைக்கான
ஒரு விளைநிலமே
என்று அதனால்
இறை நியதிக்கு ஏற்ப
தனது வாழ்வை
அமைதியாக கழிக்கிறது

வாழ்க்கை நீ நினைப்பதை
எல்லாம் உனக்கு தந்து விடாது
சிலபோது நீ எதிர்ப்பாராதது நடக்கலாம்
அதற்காக நீ கலங்கி விடாதே!
விதியை நொந்து கொள்ளாதே!
காரணம் இவ்வுலக வாழ்க்கை
முஃமீன்களுக்கு சிறைச்சாலை

Noor Shahidha
SEUSL
Badulla

நீங்கள் சிறைச்சாலையைப் பற்றி கேள்விப் பட்டுள்ளீர்களா? குற்றவாளிகளின் வாழ்க்கை முறையை அறிந்துள்ளீர்களா? அவர்களுக்கும் உலகுக்குமான தொடர்பு ஏதும் உண்டா? அந்த வாழ்க்கை எவ்வளவு கரடுமுரடானது என்பதை உணர்ந்ததுண்டா? அவர்களது வாழ்க்கை காட்டில் தனித்து விடப்பட்ட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *