என் முதல் பந்தம்
-
by admin
- 1
தோழமையோடு
தோள் கொடுத்தான்
நான் துவண்டெழும் பொழுது
வல்லமையோடு
வலிமை கொடுத்தான்
நான் வீழ்ந்தெழும் பொழுது
பரிவோடு
பாசம் கொடுத்தான்
தனிமையில்
நான் தவிக்கும் பொழுது
அன்போடு
அரவணைத்தான்
என் மனம்
உருகும் பொழுது
போர்வையாக எனை
அரவணைத்தான்
குளிரில் நான்
நடுங்கிய பொழுது
நண்பனாக
நன்னெறிகள் தந்தான்
நான் பாதை
தவறிய பொழுது
தந்தையாக
அறிவுரை தந்தான்
தவறுகள் நான்
செய்த பொழுது
அன்னையாக
ஆறுதல் தந்தான்
கண்ணீரில் நான்
கலங்கிய பொழுது
சண்டைகள் பல
வந்தாலும் அன்பின்
ஆழம் குறைவதில்லை
பந்தங்கள் பல
இருந்தாலும்
என் அண்ணன் தான்
என்றுமே எனக்கு
முதல் பந்தம்
Shahna Safwan
Dharga Town
தோழமையோடு தோள் கொடுத்தான் நான் துவண்டெழும் பொழுது வல்லமையோடு வலிமை கொடுத்தான் நான் வீழ்ந்தெழும் பொழுது பரிவோடு பாசம் கொடுத்தான் தனிமையில் நான் தவிக்கும் பொழுது அன்போடு அரவணைத்தான் என் மனம் உருகும் பொழுது போர்வையாக எனை…