அநாதை
-
by admin
- 1
புண்பட்ட இதயத்தில்
இன்னொரு பூ தான் மலருமா?
வாடிக்கிடக்கும் என் மனதினில்
இன்னொரு வாசனை தான் வீசுமா?
தேய்ந்து போன பாதையில்
இன்னொரு தேர் தான் ஓடுமா?
ஈரமற்ற என் மனதில் இன்னொரு
விதை தான் முளைக்குமா?
மீளமுடியாத சோகமும்
சொல்ல முடியாத தாகமும்
என்னுள் தவித்திருக்க
வெற்றுப் பிணமாக வீதியில்
உலா வந்து கொண்டிருக்கிறேன்
நான் அநாதையாக!
பெற்ற தாயையும் இழந்து
மாரடிக்கும் இந்நிலையிற்கு
நான் அநாதையாக
இருப்பது என் விதியா!
திசை மாறிய பயணங்களாய்
அல்லல்பட்டு அநாதையாய்
அரவணைப்பு யாருமின்றி
ஆராத் துயரில்
ஊமையாய் பாடாய்ப்படுவது
யாருக்கும் தெரியவில்லையோ!
இறந்தகால தொடர்கதையாய்,
எதிர்கால விடுகதையாய்
எல்லோருக்கும் ஓர் புதிராய்
நிகழ்கால உலகில்
நிழல்களுடன் உறவாடும்
சதிகளின் பின்னலினால் – உன்
மதி போன போக்கிற்கு
ஏன் இந்த பாழான மனம்
பழிவாங்குவதில்லை.
அன்பின் கணக்கில்
இதுவும் அநாதை தானோ!
Shahna Safwan
Dharga Town
புண்பட்ட இதயத்தில் இன்னொரு பூ தான் மலருமா? வாடிக்கிடக்கும் என் மனதினில் இன்னொரு வாசனை தான் வீசுமா? தேய்ந்து போன பாதையில் இன்னொரு தேர் தான் ஓடுமா? ஈரமற்ற என் மனதில் இன்னொரு விதை…
புண்பட்ட இதயத்தில் இன்னொரு பூ தான் மலருமா? வாடிக்கிடக்கும் என் மனதினில் இன்னொரு வாசனை தான் வீசுமா? தேய்ந்து போன பாதையில் இன்னொரு தேர் தான் ஓடுமா? ஈரமற்ற என் மனதில் இன்னொரு விதை…