காத்திருக்கும் காதல் பறவை

  • 9

அன்பை கேட்டேன்
ஆகாதென்றாய்!
அக்கறை கேட்டேன்
ஆபத்தென்றாய்!

புன்னகை கேட்டேன்
புதிராய் நின்றாய்!
உன் கரம் கேட்டேன்
உளறாதென்றாய்!

உன் மடி கேட்டேன்
உதறிச் சென்றாய்!
ஓர் பார்வை கேட்டேன்
ஓரம் சென்றாய்!

சிறு வார்த்தை கேட்டேன்.
சீற்றம் கொண்டாய்!
இருந்தும் முடியவில்லை
உன்னை மறக்க!

உன் நட்பை இழக்க!
இன்றில்லை என்றாலும்
ஓர் நாள் புரிவாய்
என் உயிர் நட்பை.

அன்றைய நாள் நான்
உன் கண்ணில்
உருளுவேன்கண்ணீராய்!
அந்நாளுக்காய் காத்திருக்கும்
காதல் பறவை நான்!

Shima Harees
Puttalam

அன்பை கேட்டேன் ஆகாதென்றாய்! அக்கறை கேட்டேன் ஆபத்தென்றாய்! புன்னகை கேட்டேன் புதிராய் நின்றாய்! உன் கரம் கேட்டேன் உளறாதென்றாய்! உன் மடி கேட்டேன் உதறிச் சென்றாய்! ஓர் பார்வை கேட்டேன் ஓரம் சென்றாய்! சிறு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *