எதிரும் புதிரும்

  • 8

அடிக்கடி வேண்டுமென்றே
அவளை சீண்டிப் பார்ப்பவன்

அவள் கோபம் கொண்டு முகத்தை
திருப்பி விட்டு சென்றாள்
இவனுக்கு தான்
சாதித்து விட்ட பெருமை!

அவள் அவனைப்
பொருட்படுத்தாது இருந்தால் தான்
அலட்சியம் செய்யப்பட்ட கவலை!

அவள் பதிலுக்கு தன்னை சீண்டினால்
தான் மட்டுமே வாய்ச்சொல் வீரன்
என்று கவிபாடும் கொடுமை!

ஆனால் அவள் கண்களில் இருந்து
நீர் சிந்தினால் அவனை விட்டு
நீங்கும் அவன் செழுமை!

அவள் தான் அவனது உலகம்!
அவள் தான் அவன் தேடும் இன்பம்!

அவனது அன்புக்கும்
அரவணைப்புக்கும் சொந்தக்காரி!
அவனது கண்டிப்புக்கும்
கர்ஜனைக்கும் எதிராளி!

அவளே தங்கை

தங்கையின் அன்பு அடிக்கடி
கண்சிமிட்டும் விண்மீனைப் போன்றது
ஆனால் அண்ணனின் அன்பு
மின்சாரம் தடைப்பட்ட இரவில்
ஏற்றப்படும் மெழுகைப் போன்றது

போட்டு கொடுப்பதற்காகவே வம்புக்கு
அழைத்து மிரட்டுபவள் தங்கை

அவள் போட்டு கொடுக்காமல் இருக்க
அவளது கட்டளைகளுக்கு
அடிபணிபவன் அண்ணன்

காரியமே கண்ணென
நினைப்பவள் தங்கை
காரணம் இன்றி எரிச்சலை காட்டினால்
பொல்லாத ரோசம் காட்டி வதைத்திடுவாள்

அவளை சமாதானப்படுத்தி
சிரிக்க வைப்பதற்குள்
காலியாகி விடுவது
அண்ணனின் பர்ஸ் தான்

குறும்புகள் செய்து திட்டு
வாங்குபவள் தங்கை
குதர்க்கமாய் பேசி வாங்கி
கட்டுபவன் அண்ணா

அழுது புலம்பி காரியம்
சாதிப்பவள் தங்கை
அதிகார தொனியில் அவளை
அடக்கி ஆள்பவன் அண்ணன்

அண்ணன் தங்கை உறவு
வெளியில் பார்ப்பதற்கு
இந்தியா பாகிஸ்தான் மோதலைப்
போன்று தான் தெரியும்

என்றாலும் உள்ளுக்குள்
நகமும் சதையும் போல
எவருக்கும் எதற்காகவும்
விட்டுக் கொடுக்க முடியாத பந்தத்தை
போன்று உறுதியாக பிணைந்திருக்கும்

இரத்த பந்தங்களை பிரிந்து வாழலாம்
ஆனால் அவர்களை மறந்து வாழ முடியாது!

Noor Shahidha
SEUSL
Badulla

அடிக்கடி வேண்டுமென்றே அவளை சீண்டிப் பார்ப்பவன் அவள் கோபம் கொண்டு முகத்தை திருப்பி விட்டு சென்றாள் இவனுக்கு தான் சாதித்து விட்ட பெருமை! அவள் அவனைப் பொருட்படுத்தாது இருந்தால் தான் அலட்சியம் செய்யப்பட்ட கவலை!…

அடிக்கடி வேண்டுமென்றே அவளை சீண்டிப் பார்ப்பவன் அவள் கோபம் கொண்டு முகத்தை திருப்பி விட்டு சென்றாள் இவனுக்கு தான் சாதித்து விட்ட பெருமை! அவள் அவனைப் பொருட்படுத்தாது இருந்தால் தான் அலட்சியம் செய்யப்பட்ட கவலை!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *