பிள்ளைப் பாசத்தை விஞ்சிய தந்தையரின் உழைப்பு

  • 11

இன்றைய காலத்தை பொருத்தவரை எத்தனை பிள்ளைகள் தந்தை மீது பாசம் வைத்திருக்கிறார்கள் என்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே அதிலும் அன்பு, பாசத்தை தந்தைக்கு காட்டுவதற்கு, தந்தையோடு சிறிது நேரம் சேர்ந்து இருப்பதற்கும் முடியாமல் பல ஆசைகளை சுமந்து மறைத்துக்கொள்ள வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோல் தந்தை என்பவர் ஒரு கொடுங்கோலன், சர்வாதிகாரி, கோபக்காரன் என்ற பார்வையிலும் பார்க்கிறார்கள் ஆனால் அவ்வாறு பார்க்கப்படுவதற்கான காரணம் புரியாமல் இருக்கிறோம்.

தந்தைமார்களே! ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும். பணம், சொத்து, பட்டம், பதவி என்று அதிலே வாழ்க்கையை கழிக்காதீர்கள். அவ்வாறு பிள்ளைகளை விட்டு தூரமாகும் போதே இரக்கம் குறைந்து தந்தைமார்களை அரக்கனாகவும், அந்நியனாகவும் பார்க்கநேரிடுகிறார்கள். இன்று எத்தனையோ தந்தை மார்கள் தன் மகனோ, மகளோ சிறந்த படிப்பை கற்கவேண்டும் என்பதற்காக ஓயாது உழைக்கிறார்கள். ஆனால் அறிவில் பெறுபேற்றை பெற்றாலும் பிள்ளைகளின் நடத்தையில், உங்கள் மீதான அன்பில் குறைபாடேயே காணுவீர்கள், இதுவே காலகாலமாக குடும்ப வாழ்க்கையில் நிம்மதியை தொலைப்பதற்கான காரணமாகும்.

திருமணம் முடித்து குடும்பத்துடன் நெருக்கமாக இருக்க வேண்டியவர்கள் திருமணம் முடித்து சில நாட்களிலே குடும்பத்தை விட்டு பிரிந்து தொழிலுக்கு செல்கிறார்கள் இது தவிர்க்க முடியாதவை தான் என்றாலும் அதை முறையாக திட்டமிட்டு பிள்ளைகளின் நெருக்கத்தை முடிந்தளவு அமைத்துக் கொள்வது சிறந்தது.

இல்லையெனின் இதன் விளைவுகள் சொல்லித்தான் புரிய வேண்டும் என்பதில்லை பிள்ளைகளுக்கு அன்பு, பாசம் தேவைப்படும் வயதில் சரியாக கொடுத்தால் எதிர்க்காலத்தில் அந்த பிள்ளை சிறந்தவனாக, வழிதவறிச்செல்லாதவனாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இன்று பிள்ளைகள் தந்தைமார்கள் பற்றிய மனோநிலை வித்தியாசமானவையே அவ்வாறு ஒரு பிள்ளை தனது தந்தை பற்றிய மனோநிலையை உணர்த்தும் சம்பவம் ஒன்றை வாசித்தேன் அதை படிப்பினைக்காக பகிர்ந்து கொள்கிறேன்,

6 வயது சிறுமி சல்மா. தந்தை அஹமத்- பெரிய வணிகர். ஓயாத உழைப்பு; பிள்ளைகளுடன்
செலவு செய்ய நேரமில்லை. பிள்ளையை தந்தை சந்திக்கும் நேரம் எல்லாம் தூக்கத்தில் மட்டுமே.

அதிகாலையிலும், இரவிலும் மனைவியின் நச்சரிப்புத் தாங்காமல் ஒரு விடுமுறை நாளன்று மகளை வெளியே அழைத்துப் போகிறார் தந்தை வேண்டா வெறுப்பாக! தந்தையின் கையைப் பிடித்து குதூகலமாக பொழுதை போக்கி மகள் வீட்டுக்கு திரும்பும் வழியில் தந்தையிடம் கேட்டாள்: “அப்பா எந்தத் தெருவில் எங்கே தங்குகிறீர்கள்?” அஹமத் திகைக்கிறார். ஏனெனில் அவருக்கு வேறு மனைவி இல்லை. தன் மகள் அறியாமல் கேட்கிறாளா என்று எண்ணி, “என்ன கேட்டாய் மகளே?” என்று கேட்க “உங்கள் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டேன் அப்பா?” என்று தெளிவாகவே அந்த மகள் மீண்டும் கேட்டபோது அஹமத் திகைக்கிறார்.

மகளின் கேள்விக்கு பதில் இல்லை வீட்டுக்கு வந்த பின்பும் திகைப்பு மாறவில்லை. மறுநாள் அஹமத் தன் அறையில் எதையோ தேடிக்கொண்டிருக்க தூக்க கலக்கத்தில் வந்த மகள், என்ன தேடுகிறீர்கள் அப்பா? என்கிறாள்

“ஒரு பேப்பர். நான் சந்திக்க வேண்டிய ,உரையாட வேண்டிய முக்கியமான நபர்களின் பெயர்கள் அதில் உள்ளன’. என்கிறார் அப்பா. மகள் கேட்டாள் “அதில் என் பெயரும் உண்டா அப்பா?” தூக்கிவாரிப் போடுகிறது தந்தைக்கு தான் செய்த தவறை உணர்கிறார்.

நிறைய தந்தைமார்கள் இவ்வாறு தான் வீட்டில் மனைவி, பிள்ளைகள் கணக்கே இல்லை சம்பாதிப்பு தான் பெரிது என்று அதிலே காலம் செல்கிறது.

உணரவேண்டிய விடயம் எனவே தந்தைமார்களே! உங்கள் பிள்ளைகளுக்கான முதல் பாடசாலை நீங்கள் தான் அதை சரியாக முறையாக அமைத்துக்கொள்ளுங்கள் இல்லையெனின் சந்தோஷமாக வாழவேண்டிய குடும்ப வாழ்க்கை உங்கள் குழந்தைகளால் நிம்மதியை தொலைத்துவிடுவீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

Faslan Hashim
Islahiyya Arabic College
South Eastern University of Sri Lanka BA ®

இன்றைய காலத்தை பொருத்தவரை எத்தனை பிள்ளைகள் தந்தை மீது பாசம் வைத்திருக்கிறார்கள் என்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே அதிலும் அன்பு, பாசத்தை தந்தைக்கு காட்டுவதற்கு, தந்தையோடு சிறிது நேரம் சேர்ந்து இருப்பதற்கும்…

இன்றைய காலத்தை பொருத்தவரை எத்தனை பிள்ளைகள் தந்தை மீது பாசம் வைத்திருக்கிறார்கள் என்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே அதிலும் அன்பு, பாசத்தை தந்தைக்கு காட்டுவதற்கு, தந்தையோடு சிறிது நேரம் சேர்ந்து இருப்பதற்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *