வீண் விரயம்

  • 17

வெயில் காலத்தில் சுதந்திரமாக
உணவை தேடிக் கொள்ளும்
எறும்பு மழைக் காலத்துக்காக
சேமித்து வைக்கும்

ஆனால் மனிதன் வெளியில் சென்று
சம்பாதித்து வருவதை
இருளாக முன்பே செலவழித்து விடுகிறான்

மனிதா! உனக்கு இறைவன்
தாராளமாக தந்திருக்கும்
அருள்களில் மோசடி செய்யாதே!

இறை திருப்தியை நாடி
ஹலாலான முறையில்
அதை செலவழி!
எதிர்க்காலத்துக்காக
அதில் சிலதை சேமித்து வை!
இன்னும் சிலதில் தர்மம் செய்திடு!

ஊர் பெருமைக்காக
நீ செய்யும் எந்த காரியமும்
உனக்கு நலவை நாடாது

இன்று உன்னை புகழும் நாக்கள்
நாளை உன்னை தூற்றி புறக்கணிக்கும்
காரணம் உன்னை வாழ வைப்பது பணம்
ஆனால் அந்த பணத்துக்காக
நீ உன் வாழ்வை இழக்காதே

இறைவன் கொடுத்தும் பார்ப்பான்
அதை திருப்பி எடுத்தும் பார்ப்பான்
கொடுக்கும் போது இறைவனை
நினைக்க மறந்த நீ
எடுக்கும் போது நிச்சயம்
அவனை நினைப்பாய்
இருக்கும் போது ஆணவத்தால் ஆடாதே!

இழக்கும் போது உலகம்
உன்னை வைத்து ஆடிவிடும்
கொடுக்க தெரிந்தவனுக்கு
எடுக்க ஒரு நொடி போதும்
கொடுக்க தெரியாத உனக்கு
பிறர் உதவ
பல நிமிட ஆலோசனை வேண்டும்

வெறும் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும்
நீ செய்த காரியங்கள்
உன்னை சிம்மாசனத்தில்
அமர வைத்து விட்டதென்றா நினைக்கிறாய்?

உனது எண்ணம் பிழைத்து விட்டதை
நீயும் விரைவில் உணரத் தான் போகிறாய்
அருள்கள் நிரந்தரமாவதும் தற்காலிகமாவதும்
உனது நடவடிக்கையைப் பொறுத்தது
எனவே எறும்பிடம் பாடம் கற்றுக் கொள்
உண்ணுங்கள் பருகுங்கள்
வீண் விரயம் செய்யாதீர்கள்!

Noor Shahidha
SEUSL
Badulla

வெயில் காலத்தில் சுதந்திரமாக உணவை தேடிக் கொள்ளும் எறும்பு மழைக் காலத்துக்காக சேமித்து வைக்கும் ஆனால் மனிதன் வெளியில் சென்று சம்பாதித்து வருவதை இருளாக முன்பே செலவழித்து விடுகிறான் மனிதா! உனக்கு இறைவன் தாராளமாக…

வெயில் காலத்தில் சுதந்திரமாக உணவை தேடிக் கொள்ளும் எறும்பு மழைக் காலத்துக்காக சேமித்து வைக்கும் ஆனால் மனிதன் வெளியில் சென்று சம்பாதித்து வருவதை இருளாக முன்பே செலவழித்து விடுகிறான் மனிதா! உனக்கு இறைவன் தாராளமாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *