ஒரு வரித் தகவல்கள்

  • 19
  • “ரோஜாவின் நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் எது? சண்டிகர்

“ரோஜாவின் நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் “சண்டிகர்” ஆகும். சண்டிகர் இந்தியாவில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் பஞ்சாப், அரியானா ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்குகிறது. இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளதால் இந்நகரம் எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல. இரு மாநிலத்தவரும் கோரியதால், இந்நகரம் தனி ஒன்றியப் பகுதியாக்கப்பட்டது.

  • “தங்கவாசல் நகரம்” என்று அழைக்கப்படும் நகரம் எது? சான்பிரான்சிஸ்கோ

அமெரிக்காவில் இருக்கும் “சான்பிரான்சிஸ்கோ” நகரம் தான் “தங்க வாசல் நகரம்” என்ற சிறப்புப் பெயரைக் கொண்டு உள்ளது.

  • இந்தியாவின் தலை நகரம் எது?  புது டில்லி

புது டில்லி இந்தியாவின் தலைநகரமாகும். இது தேசிய தலைநகர் வலயத்தில்-NCT உள்ள ஒரு மாவட்டமும், பெருநகரமும் ஆகும். புது டில்லி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநகரமாகும். தேசிய தலைநகர மண்டலம் என்றழைக்கப்படும் டில்லியின் மாநகரப்பகுதியானது அரியானாவிலுள்ள ஃபரிதாபாத், குர்கான் மற்றும் உத்தரப்பிரதேசத்திலுள்ள நோய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியது.

இம்மாநகருக்கான அடிக்கல் நாட்டு விழா, 1911 டிசம்பர் 15 இல் நடைபெற்றது. புதிதாய் உருவாக்கப்பட்ட மாநகருக்கு புது டில்லி என 1927 ல் பெயர் சூட்டப்பட்டு 1931 பெப்ரவரி 13 அன்று பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

புது டில்லி இந்தியாவின் நுண்ணுயிராகவும், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியிலும் உலகநாடுகளுக்கு நிகராக முன்னேறி உள்ளது.

  • “நூறு வாசல் நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம்? தேப்ஸ்

“நூறு வாசல் நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் “தேப்ஸ்” நகரம் ஆகும்.  இது எகிப்தில் உள்ளது.

  • “தீப நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் எது? திருவண்ணாமலை

தீப நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் “திருவண்ணாமலை” ஆகும். திருவண்ணாமலை (Tiruvannamalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.

  • ஏழு தீவுகள் நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம்? மும்பாய்

“ஏழு தீவுகள் நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் “மும்பாய்” ஆகும். முன்னர் பம்பாயாக இருந்த மும்பை இந்திய மாநிலமான மகாராட்டிராவின் தலைநகரமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நகரமான இந்த நகரம், ஏறத்தாழ 14 மில்லியன் மக்களுடன் உலகின் மிக அதிக மக்கள்தொகை நிறைந்த நகரங்களில் இரண்டாவதாக விளங்குகிறது.

மும்பை ஐக்கிய நாடுகள் அவையின் உலக நகரமயமாக்கல் திட்ட அறிக்கையின்படி உலகின் மிகப்பெரிய நகர்ப்புற திரட்சிகளில் உலகின் நான்காவது மிகப்பெரிய நகர திரட்சியாக உள்ளது.

  • “உலகின் மோட்டார் கார்களின் நகரம்” என்று அழைக்கப்படும் நகரம்? டெட்ராய்ட்

“உலகின் மோட்டார் கார்களின் நகரம்” என்று அழைக்கப்படும் நகரம் “டெட்ராய்ட்” நகரம் ஆகும். இது அமெரிக்காவில் உள்ளது.

  • “காற்று நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் எது? சிகாகோ

“காற்று நகரம்” என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றது அமெரிக்காவில் இருக்கும் “சிகாகோ நகரம்” ஆகும்.

  • “எலக்ட்ரானிக் நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம்? பெங்களூரூ

“எலக்ட்ரானிக் நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் “பெங்களூரூ” ஆகும். இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும் நகர்ப்புற மக்கள்தொகை அடர்த்தியில் ஐந்தாவது பெரியதாகவும் திகழ்கிறது.

தகவல் தொழில்நுட்பத்துறை வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் நாட்டின் முன்னணியில் திகழும் தனது பெருமைமிகு நிலையின் காரணமாக, பெங்களூரு இந்தியாவின் ‘சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.

  • “உப்பு நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம்? வெரிஸ்கோ

“உப்பு நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் “வெரிஸ்கோ” நகரம் ஆகும்.  இது போலந்தில் உள்ள சிறப்பு நகரங்களில் ஒன்றாகும்.

  • “இந்தியாவின் பூங்கா நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம்? பெங்களூரூ

“இந்தியாவின் பூங்கா நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் “பெங்களூரூ” ஆகும்.

  • “மிதக்கும் நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம்? வெனிஸ்

“மிதக்கும் நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் “வெனிஸ்” ஆகும். வெனிஸ் / வெனிசு இத்தாலி நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியும் ஆகும். வெனிசு நகரே வெனிட்டோ பகுதியின் தலைநகராகும்.

வெனிசு மொத்தம் 117 தீவுகளைக் கொண்டது. இது கொண்டோலா எனப்படும் படகுகளும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.

  • “அரபிக் கடலின் ராணி” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் இந்திய நகரம்? கொச்சி

“அரபிக் கடலின் ராணி” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் இந்திய நகரம் “கொச்சி” ஆகும். கொச்சி இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரமாகும். இந்த நகரம் எர்ணாகுளம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நகரம் அரபிக்கடலின் அரசி என்று அழைக்கப்படுகிறது. இது மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் வடக்குத் திசையில் அமைந்துள்ளது.

  • “ஆப்ரிக்காவின் சுவிட்சர்லாந்து” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம்? ருவாண்டா

“ஆப்ரிக்காவின் சுவிட்சர்லாந்து” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் “ருவாண்டா” ஆகும். ருவாண்டா குடியரசு ஆப்பிரிக்காவின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் தான்சானியா, உகாண்டா, புருண்டி, மற்றும் காங்கோ மக்களாட்சிக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன.

1994 ல் இந்நாட்டில் நடந்த படுகொலைகளில் 5 லட்சத்துக்கு மேல் ருவாண்டா மக்கள் கொல்லப்பட்டனர். இது ருவாண்டாப் படுகொலை என அறியப்படுகிறது.

  • “பசிபிக் பெருங்கடலின் சாவி” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம்? சிங்கப்பூர்

“பசிபிக் பெருங்கடலின் சாவி” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் “சிங்கப்பூர்” ஆகும். இது தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு ஆகும். மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது,

ஜொகூர் நீர்ச்சந்தி இதனை மலேசியாவிடமிருந்து பிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீர்ச்சந்தி இந்தோனேசியாவின் ரியாவு தீவுகளைப் பிரிக்கின்றது. சிங்கப்பூர் பெரிதும் நகரமயம் ஆன நாடாகும் . மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்காசியாவில் மிகச்சிறிய நாடாகும்.

  • “அமைதி நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம்? ஜெருசலேம்

“அமைதி நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் “ஜெருசலேம்” ஆகும்.

Shima Harees
Puttalam

“ரோஜாவின் நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் எது? சண்டிகர் “ரோஜாவின் நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் “சண்டிகர்” ஆகும். சண்டிகர் இந்தியாவில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் பஞ்சாப்,…

“ரோஜாவின் நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் எது? சண்டிகர் “ரோஜாவின் நகரம்” என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் “சண்டிகர்” ஆகும். சண்டிகர் இந்தியாவில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் பஞ்சாப்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *