முத்தான முத்து நபி!
-
by admin
- 1
தூனில்லா வானினிலே
நள்ளிரவு வேளையிலே
கண் எட்டாத் தொலைவினிலே
விண்மீன்கள் மத்தியிலே
சுடர்விட்ட வெண்மதியாம்
எம் முத்தான முத்து நபி
முஹம்மத் நபி அவர்கள்!
பாலைவன தேசத்திலே
அறியாமைக் காலத்திலே
பொன் போன்ற தோற்றத்திலே
குறைஷிக் குலத்தினிலே
தோன்றிய குல விளக்காம்
எம் முத்தான முத்து நபி
முஹம்மத் நபி அவர்கள்!
நற்குணத்தின் தாயகமாம்
நல்வழியின் வழிகாட்டியாம்
நானிலத்தின் மரகதமாம்
நம்பிக்கையின் நாணயமாம்
அகிலத்தின் எடுத்துக்காட்டாம்
எம் முத்தான முத்து நபி
முஹம்மத் நபி அவர்கள்!
ஷஹ்னா ஸப்வான்
தர்ஹா நகர்
தூனில்லா வானினிலே நள்ளிரவு வேளையிலே கண் எட்டாத் தொலைவினிலே விண்மீன்கள் மத்தியிலே சுடர்விட்ட வெண்மதியாம் எம் முத்தான முத்து நபி முஹம்மத் நபி அவர்கள்! பாலைவன தேசத்திலே அறியாமைக் காலத்திலே பொன் போன்ற தோற்றத்திலே…