தீர்க்கதரிசி

  • 15

பசுமை கண்டிரா பாலை மண்ணில்!
பல நூறு ஆண்டுகள் முன் பூத்தது ஒரு மல்லிகைப்பூ
அதன் வாசனையோ நகரம் நாடு கடல் காடு கடந்து
பாரின் பல பாகிலும் வீசுகிறது

பூ பூக்க முன் வெயிலின் வெட்கயால் மரம் இறக்க
பூத்த சில காலத்தில் பூவை தாங்கிய காம்பிறக்க
தன் இதழ்களின் துணையோடு தளராது துணிந்து
தன் மனம் மணக்க, பிறர் மனம் சிறக்க
பல பாடுகள் பட்டதுவே!

பூவுக்கு தாயிட்ட பெயர்
“முஹ‌ம்ம‌துவாம்”
தன்னைச் சூழ்ந்த மானிடர் இட்ட பெயர்
“நம்பிக்கையின் நட்சத்திரமாம்”

தன் மனம் தன்னோடிருக்க இடமளியாது
பலர் மனம் சிறக்க, நினைத்ததனால் என்னவோ!
நித்திய ஜீவன் “தீர்க்கதரிசி” எனப் பெயரிட்டு
தன் திருத்தூதருமாக்கினான்

தூதை சுமந்து துரதிஷ்டம் போக்க
துணிந்தார் தூதுவர் முஹ‌ம்ம‌த்(ஸல்)
“அல்லாஹ் ஒருவனை தவிர இறைவன் வேறில்லை
உனக்கு நானே அவனின் தூதர்” என்று
உரத்த குரலில் ஊரார்கிடையில் உரைத்திட
“இதற்கா எம்மை அழைத்தீர்” என வாரி இறைத்தான்
கைகள் நிறைய மண்ணை கயவன் அபூ லஹப்

“அவன் நாசமாக, அவனிருகைகள் நாசமாக” என்று
துவங்கும் அத்தியாயத்தை தாமதம் இன்றி
இறக்கிவைத்தான் இறைவன் தூதருக்கு

பதின் மூன்று வருடங்களில்
பல நூறு வதைகள் உண்மையை உரைத்தார் என
போதும் பட்ட கஷ்டம் போதும் புறப்படுவீர்!
மதீனத்து மண்ணுக்கு என்றோர் இறையறிவிப்பு

குரைஷிக் கொடியர்கள்
இரவோடிரவாய் இறைத் தூதருக்கு முடிவு கட்ட
முனைந்த செய்தியை இறைவன் தெரிவிக்க,
ஆருயிர் நண்பன் அபூ பக்ரை அழைத்துக் கொண்டு
அறக்கட்டளைக்கினங்க மதீனாவை நோக்கி நகர்ந்தார்
மாநபி முஹ‌ம்ம‌த் (ஸல்) அவர்கள்

சாதனைகள் பல படைத்து சரித்திரத்தில் இடம் பிடித்து,
சமுதாயத்தை நேர்வழிப் படுத்தி
வெற்றிகள் பல கண்டார் இப் பாரினிலே

தூதரே! உம் பிறப்பை கொண்டாடுவதா?
அல்லது உம் பிரிவை அனுஷ்டிப்பதா?
இரண்டையும் செய்யக்கூடாதென்ரென்னவோ?
இறைவன் இரு நிகழ்வையும் ஒரே தினத்தில் நிகழ்த்தினான்?

பிறப்பை கொண்டாடி, இறப்பை அனுஷ்டித்து, என்ன பயன்?
வாழ்க்கையில் மாநபி வாழ்க்கை வாடை கூட இல்லாது
மனிதா சிந்தி! கொண்டாடுவதிலில்லை அவர் புகழாரம்
செயற்படுத்துவதில் இருக்கிறதை சிந்தி.

மறுபுறம் மலம் உருட்டும் வண்டுக்கு
மல்லிகை வாசம் தெரியாதது போல்
சில மாந்தருக்கு மாநபியின்
சிறப்பும் தெரியாதோ! என்னவோ!

கேலிச்சித்திரம் வரைந்தும்,
காணொளிகள் பல திரித்தும்,
பரப்புகின்றனர் பார் எங்கும்,
எத்தினை சித்திரம் வரைந்தாலும்
ஒழியாது அவரின் சிறப்பு ஓங்காது உன் இகல்பு.

உன் இனத்தை சேர்ந்த உத்தமன் ஒருவனே
உலகின் சிறந்த மானிடர் பட்டியலில்
முதலிடம் கொடுத்தார் முஹ‌ம்ம‌து நபிக்கு

மறந்தாய் அதை மறந்தாய்! அனைத்தையும் மறந்தாயடா!
சிந்தி மனிதா! நீ சிந்தி! மாய முன் சிந்தி!
மாண்டாயெனில் உனக்கு அதற்கும் இடமில்லை என்பதையும் சிந்தி.

இறைவா!! ஆசிர்வதிப்பாய் எம்மை ஆசிர்வதிப்பாய்
அன்னாரின் அழகிய வாழ்க்கையை
அடியொட்டி வாழ்ந்து அவருடனே
சுவனத்தில் வீற்றிருக்க ஆசிர்வதிப்பாய்!

IZZATHMISMAIL
SOUTH EASTRN UNIVERSITY OF SRI LANKA

பசுமை கண்டிரா பாலை மண்ணில்! பல நூறு ஆண்டுகள் முன் பூத்தது ஒரு மல்லிகைப்பூ அதன் வாசனையோ நகரம் நாடு கடல் காடு கடந்து பாரின் பல பாகிலும் வீசுகிறது பூ பூக்க முன்…

பசுமை கண்டிரா பாலை மண்ணில்! பல நூறு ஆண்டுகள் முன் பூத்தது ஒரு மல்லிகைப்பூ அதன் வாசனையோ நகரம் நாடு கடல் காடு கடந்து பாரின் பல பாகிலும் வீசுகிறது பூ பூக்க முன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *