அண்ணல் மாநபி

  • 7

பாடிட வந்தேன்.
உன் அழகை பாடிட வந்தேன்.
அண்ணலே உன் அழகை
கவி பாடிட வந்தேன்.

பாடிட வந்தேன்.
மனிதகுல வழிகாட்டியான
உன் மாண்புகளை
கவி பாடிட வந்தேன்.

உங்களுக்கு முத்தான பல பெயர்கள் உண்டு.
அதிலே! முஹம்மதும், அஹமதும் நீங்கள்.
மனித குலத்திலேயே!
மிகவும் அழகானவர் நீங்கள்.

உங்களை காண உள்ளம் அனுதினமும்
ஏங்குதே! இறைவா!
ஒரு முறையேனும்
கனவிலாவது காணும்
பாக்கியத்தையாவது
தந்து அருள் புரிவாயாக!
அர்ரஹ்மானே!

பாடிட வந்தேன்.
கவி பாடிட வந்தேன்.
உங்கள் கண்களைக்
காண சக்தி வேண்டும்.
விழியோரம் நீண்டிருக்க
அதிலே ஓர்ராயாரம்
அர்த்தங்கள் அது

நீங்கள் பேசிடும் போது
பிரகாசம் வெளியாவது
முன் பற்களிலிருந்து
உங்களது நறுமணம்
கஸ்தூரியிலும் சிறந்ததே!
பாடிட வந்தேன்.
கவி பாடிட வந்தேன்.

இறுதித்தூதர் கண்மணியாம்
காத்தமூன் நபியே!
உமது தோள்களிலே!
நுபுவத்தின் அடையாளமே!
பாரினிலே இந்த
பாரினிலே
அஸ்ஸாதிக், அல்அமீன்
என அனையா ஒளி விளக்காய்
வாழ்ந்த மாநபியே!
அண்ணலே!
பாடிட வந்தேன்.
கவி பாடிட வந்தேன்.
உன் அழகை
பாடிட வந்தேன்.

புன்னகை இளவரசி
F.Shabra Nawfar
Hingula.

பாடிட வந்தேன். உன் அழகை பாடிட வந்தேன். அண்ணலே உன் அழகை கவி பாடிட வந்தேன். பாடிட வந்தேன். மனிதகுல வழிகாட்டியான உன் மாண்புகளை கவி பாடிட வந்தேன். உங்களுக்கு முத்தான பல பெயர்கள்…

பாடிட வந்தேன். உன் அழகை பாடிட வந்தேன். அண்ணலே உன் அழகை கவி பாடிட வந்தேன். பாடிட வந்தேன். மனிதகுல வழிகாட்டியான உன் மாண்புகளை கவி பாடிட வந்தேன். உங்களுக்கு முத்தான பல பெயர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *