அவலம்

  • 13

இனிமையான இருட்டறையில்
தன்னந்தனியாய் கருவறையில்
தரித்திருந்த வேளையிலே
தந்தையிழந்தவள் எனப் பெயரெடுத்து
கண்ணீரை கருவறைக்கு பரிசளித்தவள்.

பூமிக்கு விளை நிலமாய்
புழுதியிலே தவழ்ந்திடவே
தனக்கென்று இருந்தவளை
தவறியே பழி கொடுத்து
அநாதை எனப் பெயர் பெற்றவள்.

யாருமின்றி ஓலையிலே
பயத்தோடு வாழ்கையிலே
கரம் பிடிப்பேன் கலங்காதே
என கபடம் கொண்ட கயவனுக்கு
இறையாகி கதறியழுதவள்.

கரம் பிடித்தவன் கைவிட்டான்
கருவில் தோன்றுபவன்
கரை சேர்ப்பான் என
கற்பனையில் வாழ்ந்திடவே
கருவாய் இருந்தவன்
காளையாகி கடிந்த போது
கதறியழுது நிர்கதியாகியவள்.

யாருமற்று கண்ணீரில்
கடைசி நிமிடம் இழுபடவே
தண்ணீர் கூட கானலாகி
கடைசி நொடியில் உயிர் பிரிய
கலங்கியே கண் மூடியவள்.

வாழ்க்கையிலே கண்ணீரோடு
கல்லறையில் துயில் கொள்ள
பிரார்திக்க யாருமின்றி கதருகின்ற
ஆத்மாவின் அவலத்தை
சொல்லியழ முடியாது மௌனமாகியவள்!

LîTTL£ WRîT£R
Shima Harees
Puttalam

இனிமையான இருட்டறையில் தன்னந்தனியாய் கருவறையில் தரித்திருந்த வேளையிலே தந்தையிழந்தவள் எனப் பெயரெடுத்து கண்ணீரை கருவறைக்கு பரிசளித்தவள். பூமிக்கு விளை நிலமாய் புழுதியிலே தவழ்ந்திடவே தனக்கென்று இருந்தவளை தவறியே பழி கொடுத்து அநாதை எனப் பெயர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *