ஒவ்வொருவரும் பொறுப்பாளியே!

  • 33

அல்லாஹ் இப்பூமியில் உயர்ந்த படைப்பாக தன் பிரதிநிதியாக படைத்த படைப்பு மனிதனே. அத்தோடு அவனது முக்கிய மூன்று பொறுப்புக்களாக இறைவனை வணங்குதல், பூமியை வளப்படுத்துதல், அவனது பிரதிநிதியாக செயற்படல் என்பனவாகும். அந்த வகையில் “மனிதர்களையும் ஜின்களையும் என்னை வாங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை”

என்ற திருமறை வசனத்திற்கேற்ப அல்லாஹ்வின் ஏவல்களை ஏற்று விளக்கங்களை தவிர்த்து வாழ்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்

அவ்வாறு எனின் நாம் எவ்வாறு நம் வாழ்வை திட்டமிட்டு அமைத்துக் கொள்ளலாம்??

தற்போது அனைவரும் கொரோனா விடுமுறையில் வீட்டோடு இருக்கின்றோம். இத்தருணத்தில் ஒவ்வொரு பெற்றோரும் கதரி துடிக்கின்றனர்.

“பிள்ளைகளுக்கு ஸ்கூல் இல்ல, கிளாஸ் இல்ல, எதிர்காலம் என்னவாகும்?”

என்று, உண்மையில் நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்வின் எதிர்காலத்தை எண்ணி கண்ணீர் சிந்தும் நாம் நிரந்தரமான மறுமை விழ்விற்காக என்ன தாயார் செய்து வைத்துள்ளோம்?

கல்வி நிலைக்காக கவலைக்கொள்வதனை தவறு எனக்கூறவில்லை. ஏனெனில் இரு உலகிலும் பயன்பெறுமளவுக்கு நம் வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்றே நம்தூதர் வழிகாட்டியுள்ளார்.

எனினும் பெரும்பான்மையான பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கல்வி விடயத்தில் இராப்பகலாய் உழைப்பார்கள். ஆனால் தன் குழந்தை சாலிஹானவர்களா செயற்படுகின்றதா? உரிய நேரத்தில் தொழுகின்றதா? மார்க்கப்போதனைகளை செவிமடுக்கின்றதா? காலை மாலை நாவுகள் இறைவனை துதி செய்கிறதா?

இஸ்லாம் கூறும் கட்டுக்கோப்புடன் உண்ணல், பருகல், ஆடை அணிதல், அந்நிய ஆண் பெண் தொடர்பு, கையடக்க தொலைபேசி பாவனை, சினிமாவை விட்டும் துரமாகுதல் என அனைத்திலும் இஸ்லாமிய வரையறைப் பேணப்படுகிறதா? என்ற வினாக்களுக்கு என்ன பதிலை தயார் செய்துள்ளோம்?

மிக மிக சொற்மானவர்களைத் தவிர பெரும்பான்மையானோர் இவ்விடுமுறையை வீண்விளையாட்டுக்களிலே கழிக்கின்றனர்.

இக்கொடூரமான நோய் பரவியும் கூட நம்மில் எத்தனைப்பேர் இறை தொடர்பை அதிகரித்துள்ளோம்? எத்தனை விடுகளில் சுபஹ் தொழுகை நிறை வேற்றப்படுகிறது?

எத்தனை பெற்றோர்,

“போன்ல பாடங்கள் ஆரம்பிக்கப் போகுது, எழும்புங்க புளேல்”

என்று சத்தப்மிடும் பெற்றோர், சுபஹ், மற்றும் ஏனைய தொழுகைகளுக்கு எழுப்புகின்றன, ஊக்கப்படுத்துகின்றோர் நம்மில் எத்தனைப்பேர்?

அல்லாஹ் அருளை எப்படி பெறுவோம்? காபிர்களின் சதியில் இருந்து எப்படி தப்புவோம்? அல்லாஹ்வின் உதவியை எப்படி அடைவோம்? ஒவ்வொரு வீட்டிலிருது நாம் மார்க்கச் சூழலுடன் நம் குழந்தைகளை வளர்த்தால், அல்லாஹ்வின் விருப்பத்திற்குரிய அடியார்களாக!

சாலிஹான பிள்ளைகளை உருவாக்கி மறுமையில் நமக்காக இரு கரம் ஏந்தி துஆ கேட்கும் கண்குளிர்ச்சியான, இறையச்சமுடைய குழந்தைகளை உருவாக்கும் பாக்கியவான்களாக! நம்முழு குடும்பமும் மேலான சுவன வாழ்வை அடைந்து, கொடிய நரகவாழ்வை விட்டும் தூரமாகும் குடும்பமாக மாறும் பாக்கியவான்களாக! நாம் மாறவேண்டுமானால், ஒவ்வொரு பெற்றோரும் உரிய நேரம் தொழுபவர்களாக, குர்ஆன் ஓதுபவராக, திக்ருகளில் ஈடுபாடுடையவராக, அதிகம் துஆக்களையும், சூறாக்களையும் மனனமிட்டோராக, இறை ஏவல்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு, விலக்கல்களை முழுமையாக தவிர்த்து வாழ்ந்தால் கண்குளிர்ச்சியான, சாலிஹான, ஈருலகிற்கும் பயனுள்ள பிள்ளைகளை உருவாக்க இக்கொரோனா விடுமுறை முழுமையாக பயன்படுத்த இன்றே திட்டமிடுவோம்!வெற்றியடைவோம்!

Ummu Atheeba
SEUSL
BA (Hons)
Councellor (R)

அல்லாஹ் இப்பூமியில் உயர்ந்த படைப்பாக தன் பிரதிநிதியாக படைத்த படைப்பு மனிதனே. அத்தோடு அவனது முக்கிய மூன்று பொறுப்புக்களாக இறைவனை வணங்குதல், பூமியை வளப்படுத்துதல், அவனது பிரதிநிதியாக செயற்படல் என்பனவாகும். அந்த வகையில் “மனிதர்களையும்…

அல்லாஹ் இப்பூமியில் உயர்ந்த படைப்பாக தன் பிரதிநிதியாக படைத்த படைப்பு மனிதனே. அத்தோடு அவனது முக்கிய மூன்று பொறுப்புக்களாக இறைவனை வணங்குதல், பூமியை வளப்படுத்துதல், அவனது பிரதிநிதியாக செயற்படல் என்பனவாகும். அந்த வகையில் “மனிதர்களையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *