ஆறுதல் அல்ல அருள்

  • 13

சில நேரங்களில்
நாம் அவசரப்பட்டு செய்த
ஒரு விஷயம்
பிறகு யோசிக்கும் போது
உணர்த்தும்.

அவசரப்பட்ட அந்த நிமிடத்தை
அதை உணரும் ஒவ்வொரு செக்கனும்
இதயம் படபடக்கும்

என்ன செய்து நடந்ததை
சரி செய்வது என்பதை புரியாமல்
இமைகள் தானாக மூடிக் கொள்ளும்

அந்த இக்கட்டான நிலையில்
எங்கிருந்தோ பறந்து வரும்
சிலரது ஆறுதல் வார்த்தைகள்
அந்த வார்த்தைகள்
தான் விட்ட தவறுக்கான
விடையை காட்டித் தரும்

கஷ்டப்படுபவனுக்கு கொடுக்கும்
நன்கொடை மட்டும் அல்ல – உதவி
கலங்கி நிற்பவனுக்கு கிடைக்கும்
தன்னம்பிக்கை ஊட்டும்
மொழிகளும் உதவி
அந்த மொழிகள் எல்லோரது
நாக்களில் இருந்தும் வராது
அன்புள்ள இதயங்களில்
இருந்து உன்னை அரவணைக்க
வரும் கரங்களே அவை

அவை வெறும் ஆறுதல்
வார்த்தைகள் மட்டும் அல்ல
இறைவனின் அருள்
மனிதன் தவறுக்கு மத்தியில்
தான் படைக்கப் பட்டுள்ளான்

Noor Shahidha.
SEUSL.
Badulla.

சில நேரங்களில் நாம் அவசரப்பட்டு செய்த ஒரு விஷயம் பிறகு யோசிக்கும் போது உணர்த்தும். அவசரப்பட்ட அந்த நிமிடத்தை அதை உணரும் ஒவ்வொரு செக்கனும் இதயம் படபடக்கும் என்ன செய்து நடந்ததை சரி செய்வது…

சில நேரங்களில் நாம் அவசரப்பட்டு செய்த ஒரு விஷயம் பிறகு யோசிக்கும் போது உணர்த்தும். அவசரப்பட்ட அந்த நிமிடத்தை அதை உணரும் ஒவ்வொரு செக்கனும் இதயம் படபடக்கும் என்ன செய்து நடந்ததை சரி செய்வது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *