ஒரு வரித் தகவல்

  • 22
  1. நேபாளத்தின் தேசிய விலங்கு: பசு

    நேபாளம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடாகும். தெற்காசியாவில் உள்ள இந்நாட்டின் வடக்கில் மக்கள் சீன குடியரசும் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளன. நேபாளம் பொதுவாக இமாலய இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. கௌதம புத்தர் பிறந்த லும்பினி நகரம் நேபாள-இந்தியா எல்லையில் உள்ளது. இது இந்துக்கள் அதிகம் வசிக்கும் நாடு என்பதால் இங்கு பசுவே தேசிய விலங்காக உள்ளது.

  2. “இந்தியாவின் தேசத் தந்தை” என்று அழைக்கப்படுபவர்: மகாத்மா காந்தி

    “இந்தியாவின் தேசத் தந்தை” என்று அழைக்கப்படுபவர் “மகாத்மா காந்தி” ஆவார். மோகன்தாசு கரம்சந்த் காந்தி, மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் “விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். இவரது அறவழிப் போர் சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்டுகிறது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.

  3. மின்மாற்றியை (Transformer) கண்டு பிடித்தவர்: மைக்கேல் பரடே

    மைக்கேல் பரடே 1831 ஆம் ஆண்டு மின்மாற்றியை முதன் முதலில் கண்டு பிடித்தார். மைக்கல் பரடேயை “மின்னியலின் தந்தை” என்றுரைத்தால் மிகையாகாது. ஒரு மின்சுருளைச் சுற்றியுள்ள பகுதியில் காந்த அலைகள் வேறுபட்டால் அவ் மின்சுருளில் மின்சாரம் உண்டாகும் எனக் கண்டுபிடித்தார். இதுவே மின் உற்பத்தி இயந்திரம் இயங்குவதற்கான அடிப்படைக் கொள்கையாகும்..

  4. “ஆசியாவின் நோபல் பரிசு” என்று அழைக்கப்படும் விருது: ரமோன் மக்சேசே விருது

    “ஆசியாவின் நோபல் பரிசு” என்று அழைக்கப்படும் விருது ரமோன் மக்சேசே விருது (Ramon Magsaysay Award) ஆகும். இது ராக்பெல்லர் சகோதரர்கள் நிதியம் (RBF) பொறுப்பாளர்களால் ஏப்ரல் 1957 இல் நிறுவப்பட்டது. பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மக்சேசே நினைவாகவும், அவரது புகழ், அரசியல் நேர்மை, மக்கள் சேவை இவற்றை வளரும் நாடுகளில் பரப்பவும் இப்பரிசு ஏற்படுத்தப்பட்டது. இதுவே ஆசியாவின் நோபல் பரிசு என அறியப்படுகின்றது.

  5. நமது தலையிலுள்ள எலும்புகள்:

    எலும்புகள் செங்குருதி அணுக்கள், வெண்குருதி அணுக்கள் என்பவற்றை உருவாக்குவதும், கனிமங்களைச் சேமித்து வைப்பதும் எலும்புகளே ஆகும். நமது தலையில் 22 எலும்புகள் உள்ளன.

  6. யனை நேருக்கு நேர் பார்க்கும் பறவை: கழுகு

    சூரியனை நேருக்கு நேராக பார்க்கும் ஒரே பறவை கழுகு ஆகும். கழுகு (eagle) என்பது அக்சிபிட்ரிடே (accipitridae) என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த, வலுவான பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. அவற்றுள் 60 இனங்கள் உரேஷியா, ஆப்பிரிக்கப் பகுதிகளில் காணப்படுகின்றன. கழுகு வட அமெரிக்காவில் இரண்டே இரண்டு இனங்கள்தான் உண்டு. அவை வெண்டலைக் கழுகும், பொன்னாங் கழுகும் ஆகும். கழுகுகளில் பெண் கழுகு ஆண் கழுகை விட சற்றுப் பெரிதாக இருக்கும்.

  7. நமது மூளையின் செல்கள்

    நல்ல நிலையில் இயங்கும் தன்மை கொண்ட மூளை சராசரியாக 06மில்லியன் செல்களால் ஆனது.

  8. “இந்தியா – ரஷ்யா” ஆகிய இந்த இரு நாடுகளின் கூட்டுக் கடற்படை பயிற்சியின் பெயர்? INDRA

    “இந்தியா – ரஷ்யா” ஆகிய இந்த இரு நாடுகளின் கூட்டுக் கடற்படை பயிற்சியின் பெயர் “INDRA” எனப்படும்.

  9. ஒலிம்பிக் கமிட்டியின் தலைமையகம் அமைந்துள்ள இடம்? லாசானோ

    ஒலிம்பிக் கமிட்டியின் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள “லாசானோ” என்ற இடத்தில் அமைந்து உள்ளது.

  10. “இன்டர்போலின்” விரிவாக்கம்

    இன்டர் போல் என்பது சர்வேதச குற்றவாளிகளை கண்டு பிடிக்க உதவும் ஒரு அமைப்பாகும். இதன் விரிவாக்கம் International Police Organisation என்பதே ஆகும்.

  11. விக்டோரியா ஏரி

    விக்டோரியா ஏரி ஆபிரிக்காவின் மிகப் பெரிய ஏரிகளுள் ஒன்றாகும். இது விக்டோரியா நன்ஸா என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரி மற்றும் நைல் நதியின் தலைமை நீர்த்தேக்கமாக திகழ்கின்றது. முக்கியமாக தான்சானியா மற்றும் உகாண்டாவில் உள்ளது, ஆனால் அதன் எல்லை கென்யாவில் உள்ளது. இதன் பரப்பளவு 26,828 சதுர மைல்கள் (69,484 சதுர கி.மீ) ஆகும்.

  12. ‘ஸ்பைடர் மேன்’ கதாபாத்திரத்தை உருவாக்கியவர்

    ஸ்பைடர்-மேன் ஒரு அமெரிக்க காமிக்ஸ் ஹீரோ ஆவார். இன்னும் சொல்லப் போனால் இது ஒரு கற்பனை கதாபாத்திரம் ஆகும். இதனை முதன் முதலில் உருவாக்கியவர் *ஜேக் கிர்பி* ஆவார்.

  13. அமெரிக்காவின் முதல் அயல்நாட்டுத் தூதுவர் யார்? பெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin)

  14. நெல்சன் மண்டேலா எப்போது தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார்? 1994 மே 10

  15. முதன் முதலில் எந்த நாடு விமானங்களை போரில் பயன்படுத்தியது? இத்தாலி

  16. ஐக்கிய நாடுகள் அவையின் இரண்டாவது பொதுச் செயலராக இருந்தவர் யார்? டாக் ஜால்மர் அக்னி கார்ள் ஹமாஷெல்ட் (சுவீடன்)

  17. 1990-1991 வரை ஈராக் அமெரிக்கா தலைமையிலான 28 நாடுகள் அடங்கிய கூட்டுப் படையினருக்கும் இடையே நடந்த யுத்தம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? வளைகுடாப் போர்

  18. பைபிளை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர்? சீகன் பால்கு

  19. பஞ்சதந்திரக் கதைகள் எந்த மொழியில் எழுதப்பட்டது? சமஸ்கிருதம்

  20. இந்தியாவின் முதல் அரசு தரப்பு வக்கீல் பெயர் என்ன? எஸ். சுப்ரமணிய ஐயர்

  21. இங்கிலாந்தின் இரும்பு மனிதர் என வர்ணிக்கப்படுபவர் யார்? சேர். வின்ஸ்டன் சர்ச்சில்

  22. ‘மும்மருந்து’ என சிறப்புப் பெரும் நூல் எது? திரிகடுகம்

  23. இந்திய அரசு எந்த ஆண்டில் மயிலை தம் தேசியப் பறவையாக அறிவித்தது? 1964

  24. 1920 கி.மீ நீளத்திற்கு படகு போக்குவரத்து உள்ள இந்திய மாநிலம் எது? கேரளா

  25. எமது உடலில் கருவிழியில் மட்டும் இரத்தம் பாயாது.

  26. ஒரு நாளில் 16 லட்சத்து 80 ஆயிரம் மைல்கள் தூரம் இரத்தம் எமது உடலில் சுற்றுகிறது.

  27. 23 ஆயிரத்து 40 தடவைகள் நாம் ஒரு நாளில் சுவாசிக்கிறோம்.

  28. நாம் ஒரு நாளில் மூன்றேகால் பவுண்ட் எடையுள்ள உணவை சாப்பிடுகிறோம்.

  29. நாம் ஒரு நாளில் 750 தடவை எமது தசைகளை அசைக்கிறோம்.

  30. நாம் ஒரு நாளில் 7 கோடி மூளை செல்களுக்கு வேலை கொடுக்கிறோம்.

  31. எமது உடலில் 0.000046 அங்குலம் நகம் ஒரு நாளில் வளர்கிறது.

  32. எமது சிறுநீரகம் ஒரு நாளில் ஒன்றரை லிட்டர் நீரை வெளியேற்றுகிறது.

  33. பிறந்ததில் இருந்து உடலில் வளராத உறுப்பு கண்விழிகள் ஆகும்.

  34. பல்புகளில் ஒளிரும் இழையாக பயன்படுத்தப்படும் ‘டங்ஸ்டன்’ என்ற உலோகம் உருக 3 ஆயிரத்து 387 டிகிரி வெப்பம் தேவைப்படுகிறது.

  35. நமது உடலில் உதடுகளில் வியர்ப்பது இல்லை.

  36. எலும்புகளுக்கும், பற்களுக்கும் அவசியமான தாது கால்சியம்.

  37. நமது உடம்பில் உள்ள மிகச் சிறிய எலும்பு ஷ்டேபஸ் ஆகும்.

  38. சிவப்பு இரத்த அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்களாகும்.

  39. எமது இதயம் ஒரு நாளில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 689 தடவைகள் துடிக்கிறது.

Shîmâ Hârěěs
University Of Peradeniya
Puttalam Karambe

நேபாளத்தின் தேசிய விலங்கு: பசு நேபாளம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடாகும். தெற்காசியாவில் உள்ள இந்நாட்டின் வடக்கில் மக்கள் சீன குடியரசும் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளன.…

நேபாளத்தின் தேசிய விலங்கு: பசு நேபாளம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடாகும். தெற்காசியாவில் உள்ள இந்நாட்டின் வடக்கில் மக்கள் சீன குடியரசும் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளன.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *