சுகாதார அமைச்சரின் பார்வையில் சக்திக் காப்புத் தத்துவம் – விஞ்ஞான அமைச்சரவை

அமைச்சர் குடத்தை மெதுவாகத் தான் எறிகிறார். ஆனால், குடமானது கீழே செல்லும் போது வேகம் கூடி, பெரிய வேகத்துடனேயே நீரை அடிப்பதை அவதானிக்க முடியும்! “பசக்க்” என்று பெரும் சத்தம் அதனால் தான் கேட்டது)

Physics விளக்கம்

சக்திக் காப்புத் தத்துவம்: மொத்த சக்தி காக்கப்படும்.

இங்கு, பொறிமுறைச் சக்தியே (இயக்கம் (or வேகம் u) காரணமான இயக்க சக்தி, பொருளின் நிலை (உயரம் h) காரணமான அழுத்த சக்தி) காணப்படும்!

அத்துடன்,

இயக்க சக்தி + அழுத்த சக்தி = ஓர் மாறிலி

கூட்டுத் தொகை மாறாது. ஒன்று குறைந்தால் அடுத்தது அதிகரிக்கும்

ஆரம்பத்தில், உயரம் (h) அதிகம். எனவே அழுத்த சக்தி அதிகம். h குறையும் போது, அழுத்த சக்தி குறையும். எனவே, இயக்க சக்தி அதிகரிக்கும். ஆகவே, வேகம் u அதிகரிக்கும்.

Note: காதல் தோல்வி என்று, கூரை/மலை உச்சியில் இருந்து அவசரப்பட்டு பாயாதீங்க, வேகம் கூடி நிலத்தில் படும் போது, கால் உடைந்து விடும்.

Physics is Simple!
(Ifm)