என்ன தவம் நான் செய்தேன்?
மசக்கை கொண்டு மயங்கிய
நொடி முதல் உன்னை
நான் ஒரு இரத்தத்துளி
என வயிற்றில் சுமந்தேன்.
பத்துத் திங்கள் கடந்து கைகள்
இரண்டிலும் ஒரு சிசுவென
உன்னை தாங்கிய பொழுது
நான் ஒரு தாய் எனும்
நிலை தனை அடைந்தேன்.
பசிதீர வேண்டி நீயழுது
தாய்ப்பால் தரும் நொடி வரை
என் மார்பால் தாய்ப்பால்
அதை நான் சுமந்தேன்.
என்ன தவம் நான் செய்தேன்?
“அம்மா” என்று என் பிள்ளை
எனை பார்த்து இனிமையாய்
அழைக்கும் நொடி வரை
நான் உயிர் துரந்நு
உயிர் பெற்றேன்!