
தாய்!
-
by admin
- 1
பிள்ளை முகம் பார்த்து
தொல்லை பல சகித்தவளே!
என் எல்லை எதுவென்று
சிந்தை மேல் செதுக்கி – பெரும்
விந்தையாகி நிற்பவளே!
என் அனைத்துக் கேள்விகளுக்கும்
பதில் கூறும் – வித்திய புத்தகமே!.
கிடைக்காத சொல்லுக்கும்
பொருள் கூறும் அகராதியே!
வானுயர் வேதனையை
என்னுயிர் நிலையெண்ணி
தன் துயர் மறந்தவளே!
தடம் மாறும் பூவுலகில்
தடுமாறா தனித்துவமே!
என் நிலை மாறும் வேளையிலும்
தன்னிலை மறவா நன்னிலமே!
என் பாசத்தை பொழிய முன்
என்னை விட்டுப் பிரிந்த
என் உயிர் நாடியே!
அரண்மனையாய் உள்ள
என் வீட்டில்
நானோ அநாதையே!
சொல்ல முடியாத சில
சோகங்களும், வலிகளும்
என்னை ஆட்டிப் படைக்குதே
என் அருமைத் தாயே!
நான் யாரிடம் சொல்வேன்
நான் யாரிடம் சொல்வேன்
தாயே! – நீ என்னை
தனியாக தவிக்க
விட்டு சென்று விட்டாயே!
உன்னை மறுபடியும் காண
என் கண்கள்
துடியாய் துடிக்கின்றதே!
காணுகின்றேன்
நான் அனுதினம்
காணுகின்றேன் – உனை
கனவில் காணுகின்றேன்!
விடிந்ததும் என் கண்கள்
அலை பாய்கிறது
உனைக் காண.
நீ இல்லை என்பது
என் நினைவலையில் வர
என் மனங்களோ இங்கு
ரணங்களாகி விடுகின்றது
என் அருமைத் தாயே!
Shahna Safwan
Dharga Town
பிள்ளை முகம் பார்த்து தொல்லை பல சகித்தவளே! என் எல்லை எதுவென்று சிந்தை மேல் செதுக்கி – பெரும் விந்தையாகி நிற்பவளே! என் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கூறும் – வித்திய புத்தகமே!. கிடைக்காத…
பிள்ளை முகம் பார்த்து தொல்லை பல சகித்தவளே! என் எல்லை எதுவென்று சிந்தை மேல் செதுக்கி – பெரும் விந்தையாகி நிற்பவளே! என் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கூறும் – வித்திய புத்தகமே!. கிடைக்காத…