கொரோனாவினால் உயிரிழப்போரை அடக்கம் செய்ய அமைச்சரவை அனுமதித்தது உண்மை – சமல்
கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலங்களை அடக்கம் செய்வதற்கு அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை அனுமதியளித்தது உண்மையென தெரிவிக்கிறார் அமைச்சர் சமல் ராஜபக்ச.
ஹம்பாந்தோட்டையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின், செய்தியாளர்களிடம் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், அடக்கம் செய்வதற்கு தகுந்த இடத்தைத் தெரிவு செய்து அதனை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, அவ்வாறு எதுவும் நடக்கவில்லையென விமல் வீரவன்ச தெரிவிக்கின்றமையும் அவரின் சகா முஸம்மில் அவ்வாறு அனுமதிக்கவே கூடாது எனவும் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. என்றாலும் இதுபற்றி அமைச்சரவை முடிவில் எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை
இது தொடர்பில் ஆளுங்கட்சி சார்பு ஊடகமான அததெரண வெளியிட்ட செய்தி காணொளியினைக் கீழ்க் காணலாம்:
கொரோனா மரணங்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்குவது யார்?
அமைச்சரவை முடிவுகள் – 2020.11.09
கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி
ஏற்கனவே, 2170/08 ஆம் இலக்க 2020/04/11 ஆம் திகதி அதி விசேட வர்த்தமானிக்கு அமைய (61அ) கொறோனாவைரஸ் நோய் 2019 (கொவிட்-19) இனால் இறந்துள்ள ஆளொருவரின் பூதவுடல் தகனம் செய்யப்படுதல் வேண்டும் என்ற வர்த்தமானி கடந்த ஏப்ரல் மாதம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டது. எனவே மேற்குறிப்பிட்ட வர்த்தமானியை இரத்துச் செய்யும் விதமாக புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வேண்டும்.
கொரோனாவால் உயிரிழப்போர் உடல் தகனம் செய்யப்படும் – அதி விசேட வர்த்தமானி வெளியீடு