உரிமை
மனம் விசித்திரமான
ஒரு புத்தகம்
மனதில் பட்டதை எல்லாம்
அதன் பக்கங்களில்
கிறுக்கி எழுதி விடும்
அதை எல்லோராலும்
படித்திட முடியாது
அனைவரும் படிக்க
அனுமதியும் கிடைக்காது
ஆனால் மனப்புத்தகத்தை
படிப்பவர்கள் உண்மையில்
மனதுக்கு மிகவும்
நெருக்கமானவராகவே
இருக்க முடியும்
அவர்களால் மட்டுமே
கிறுக்கிய எழுத்துக்களை கூட
புரிந்து கொள்ளவும் முடியும்
அவர்கள் வேறு யாரும் அல்ல
உன்னிடம் அதிக உரிமை
எடுத்த உனக்குரிய
உன்னதமான உறவுகள்!