ஏன் இந்த கல்யாணத்த பன்னிக்கிறதுல உனக்கு அப்புடி என்ன தான் பிரச்சின?

  • 11

அவளோடு சில நொடிகள்
தொடர் :- 03

பகலுணவு தயாராகிக் கொண்டிருந்த பொழுதது. ஏதோ சிந்தனை ஓட்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தவளை சுய நினைவிற்குள் இழுக்கும் படி ஓர் குரல் தலை காட்டியது.

“என்ன சிஸ்டர் காலைல இருந்து என்னத்தையோ பறி கொடுத்த மாதி முகத்த தொங்கப் போட்டுகிட்டு திரியிறா. எனி ப்ரொப்ளம்?”

திடிக்கிட்டுத் திரும்பினாள் பசியா. அவளுக்கு பின்புறத்தில் அவள் தோளில் கை பதித்த படி நின்றிருந்தாள் ஹஸீனா.

“ஒ ஒ ஒன்னுமில்ல”

அவள் தடுமாறினாள், அந்த சொற்ப நேரத்துக்குள் ஹஸீனாவை கடந்து செல்ல முற்பட்டாள்.

“என்ன ஒன்னுமில்லயா? எங்க என்ன பாத்து சொல்லு பாப்பம் ஒன்னுமில்லன்னு எனக்கிட்ட சொல்ல ஏழாத அளவுக்கு உனக்கு என்ன பிரச்சின?”

அவளை போக விடாது தடுத்து நிறுத்திய ஹஸீனாவின் கையைத் தட்டி விட்டு மறுபடியும் நகர முட்பட்டாள் பசியா.

“ஒன்னுமில்ல என்ன விடு”

“ஏன் ஏன் விட? இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லயா, இல்ல மாப்புளய பிடிக்கலயா, ஏன் இப்புடி இருக்க?”

“நான் விருப்பம் இல்லன்னு சொன்னா மட்டும் என்ட பேச்ச நீங்கெல்லாம் கேக்கயா போறிங்க.”

“இங்க பாரு பசி. நீ சொன்னா யாரும் கேக்க மாட்டாங்கங்குறது இல்ல. உன்ட காரணத்த யாராலயும் ஏத்துக்க முடியாது. ஏன்டா இது ஒன்ட நல்லதுக்காக எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு நல்லா யோசிச்சி பாரு. எல்லாம் சரியா வந்து சேரும்.”

“என்னத்த யோசிக்கிற,  எனக்கு பிடிக்கல்லிய உங்கள்ள யாராச்சும் எனக்கிட்ட ஒரு வார்த்த கேட்டிங்களா? உங்கட இஸ்டத்துக்கு பேசினிங்க உங்கட இஸ்டத்துக்கு கல்யாணம்னு சொல்லி பொட்டோ காட்டினிங்க, முதலெல்லாம் ஒரு சின்ன விஷயம்னாலும் ‘இது எப்புடி இருக்கு பசி. இது புடிச்சிருக்கா பசி. இதயே எடுக்கலாமா பசி. ன்டு’ எல்லாருமே எனக்கிட்ட கேப்பிங்க இப்ப உங்கட இஸ்டத்துக்கே எல்லாத்தையும் பேசி முடிவெடுத்துட்டிங்க. உன்னால கூட என்ன புரிஞ்சிக்க ஏழாம பெய்த்து என்ன? நியாயமா பாக்க போனா உனக்கு தான் இந்த கல்யாணமே பேசிருக்கனும்”

வேறு வழியின்றி அவள் தன்னுடைய ஆதங்கங்களை எல்லாம் ஹஸீனாவின் முகத்திற்கு நேராகவே கொட்டித் தீர்த்தாள்.

“என்ன பசி கதைக்கா. என்னையும் விட உன்ன புரிஞ்சிக்க யாரு இருக்கா? எப்புடியும் உனக்கிட்ட கேட்டிருந்தா இப்ப நீ கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டான்னு எல்லாருக்கும் நல்லா தெரியும். தெரிஞ்சிகிட்டும் யாருமே உனக்கிட்ட கேக்கலன்னா காரணம் இல்லாம இல்ல. கியாஸ் மிச்சம் நல்லமாம்டு வாப்பா விசாரிச்ச இடத்தயலாம் எல்லாரும் சொல்லிருக்காங்க, அந்த குடும்பமும் நல்ல ஒரு கூட்டுக் குடும்பமாம் உன்ட ஆசையும் கூட்டுக் குடும்பமா வாழனும்ங்குறது தான், இந்த குடும்பத்த விட்டா இன்னொரு குடும்பத்த தேடுறது கஷ்டம்ங்கறதாலதான் வாப்பாவாள இந்த கல்யாணத்த விட்டுக் கொடுக்க ஏழாம இருக்கு. ஏன் இந்த கல்யாணத்த பன்னிக்கிறதுல உனக்கு அப்புடி என்ன தான் பிரச்சின?”

ஹஸீனா சொன்ன அனைத்தையும் அவளுடைய புத்தி உள்வாங்கிக் கொண்டது என்றாலும் மனம் ஏற்றுக் கொள்ள வில்லை.

“என்ன பிரச்சினயா?.. தெரியாத மாதி கேக்காத. என்ன கொஞ்சம் தனிய விடுறியா”

எடுத்த எடுப்பில் அந்த இடத்தை விட்டு நகர்ந்து தன் அறைக்குள் நுழைந்தவளாய் மின்னல் வேகத்தில் கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டாள் பசியா.

பசியாவின் மனதை முழுமையாக படித்திருந்த ஹஸீனாவாள் தான் அவளை தேற்ற முடியும் என எதிர்பார்த்திருந்த நஸீம். சிறு வயதில் இருந்து ஹஸீனாவின் நிழலாக நின்று அவளை வழிப்படுத்தும் சிறந்ததொரு தோழியாக பசியாவை கண்டு கொண்டார்.

ஹஸீனாவை விட பசியா மனதளவில் உறுதியானவளாகவும் தளராத தைரியம் கொண்டவளாகவும் இருந்தாள். ஆனால் சிறு பராயத்தில் இருந்து யார் வேண்டுமானாலும் ஏமாற்றி விடும் அளவுக்கு ஆகப் பெரும் அப்பாவித் தனமும் அவளோடு ஒட்டிக் கொண்டிருந்தது .

ஏனையோர்க்கு புத்தி சொல்ல கூடிய அளவுக்கு பக்குவம் நிறைந்தவளாக இருந்த அதே வேளை ஒரு பொய்யைக் கூட இலகுவில் கேள்விகள் ஏதும் இன்றி நம்பி விடக்கூடியவளாய் யாவராலும் கணிக்கப்பட்டவள் தான் இந்த பசியா.

பசியாவின் தனித்த சிந்தனைகளோடு பகலுணவு நேரமும் வந்து சேர்ந்தது.

புன்னகை படிந்த முகத்துடன் சலாம் சொல்லிக் கொண்டு டயனிங் ஹால் நோக்கி வந்து சேர்ந்தார் நஸீம். பாத்திரத்தில் கை புதைத்திருந்த பிள்ளைகள் இருவரும் பதில் கூறிவிட்டு அவருடன் சேர்ந்து சாப்பிடத் தொடங்கினார்கள். ஹஸீனாவின் தாயாரும் மருமகளும் பரிமாறிய வண்ணம் நின்று கொண்டிருந்தார்கள்.

மஹா மாளிகையில் பெரும் பகுதி ஒன்று காணாமல் போனது போல, திடீரென நஸீமின் கண்கள் பசியாவை தேட ஆரம்பித்தது.

“எங்கமா பசியாவ காணல்ல. புள்ள இன்னும் சாப்புட வரலயா?” மருமகளை நோக்கி கேள்வி எழுப்பினார்.

“அவ பசிக்கலன்னு சொல்லிகிட்டு ரூம்ல இருக்கா மாமா”

“அவ காலைல இருந்து அப்ஸட்டாவே இருக்கா வாப்பா.” இந்த குரல் ஹஸீனாவின் பக்கம் இருந்து வந்தது.

“காலைல இருந்து மட்டும் இல்ல ரெண்டு மூனு நாளா அவ இப்புடி தான் இருக்கா. எனக்கு என்னமோ பசியாக்கிட்ட கேக்காம கல்யாணம் பேசினது அவள்ட மனச பாதிச்சி இருக்குமோன்னு தோனுது. ஒருவேள கல்யாணத்த வேணான்னு சொல்லிட்டான்னா என்ன செய்ற” என்றாள் ஹஸீனாவின் தாய் தாஹிறா.

“என்ட புள்ளைகள பத்தி எனக்கு நல்லா தெரியும், அவ எனக்கு முன்னுக்கு இந்த கல்யாணத்த வேணான்டு சொல்ல மாட்டா. நான் போய் பசிய கூட்டிட்டு வாரன்” என்றவாறு பசியாவின் அறை நோக்கி நடந்தார் நஸீம்.

“பசி  பசியா.” என்றவாரே பட்டும் படாமலும் சாத்தியிருந்த கதவைத் தட்டிக் கொண்டு உள் நுழைந்தார் நஸீம்.

நுழைந்தது தான் தாமதம் அப்படியே திக்கு முக்காடி விட்டார். இதயம் கனத்தது, பதறித் துடித்தது உள்ளம்.

“யா அல்லாஹ்.”

பெருமூச்சொன்றை இழுத்து விட்டார். சிரித்துக் கொண்டே வந்தவருடைய முகம் சுருங்கிப் போனது, கதவைப் பிடித்துக் கொண்டு தடுமாறலானார். அவருடைய சப்தத்தைக் கேட்டு மனைவியும் மகளும் அங்கே வந்து சேர்ந்தார்கள்.

“என்ன வாப்பா.” என்று கேட்டுக் கொண்டே அவரை நெருங்கி வந்த ஹஸீனா சிலை போல ஸ்தம்பித்து நின்றாள். அவளுடைய விழிகள் சிவக்க ஆரம்பித்தது அவளுடைய உள்ளம் ஓரிடத்தில் நிற்காது தடுமாறியது.

தாய் மட்டும் என்ன இதற்கு விதி விலக்கா அழுது கொண்டே அமர்ந்து விட்டாள்.ஃ அவளும். எந்த ஒரு தாய்மையாலும் ஜீரணிக்க முடியாத வேதனை அது மறக்கடிக்கப்படாத வலி அது.

இவர்களுடைய உள்ளங்களில் எகிறி குதித்த இந்த வேதனைக்கு காரணம் எதுவாக இருக்கும்?

காரணத்தோடு  தொடர்வாள்

தொடரும்
ஏரூர் நிலாத்தோழி

அவளோடு சில நொடிகள் தொடர் :- 03 பகலுணவு தயாராகிக் கொண்டிருந்த பொழுதது. ஏதோ சிந்தனை ஓட்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தவளை சுய நினைவிற்குள் இழுக்கும் படி ஓர் குரல் தலை காட்டியது. “என்ன சிஸ்டர்…

அவளோடு சில நொடிகள் தொடர் :- 03 பகலுணவு தயாராகிக் கொண்டிருந்த பொழுதது. ஏதோ சிந்தனை ஓட்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தவளை சுய நினைவிற்குள் இழுக்கும் படி ஓர் குரல் தலை காட்டியது. “என்ன சிஸ்டர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *