தியாகத் தாயே
உன் உதிரத்தை பாலாக்கி
உன் உயிருக்கு உயிர் கொடுத்தாய்
உன் இரவுகளை எல்லாம் பகலாக்கி
என் உறக்கத்திற்கு வழி அமைத்தாய்
உன் உணர்வுகளில் எல்லாம் என்னை வைத்து
உன் உயிரை மொத்தமாக என் மீது
உன் உத்தமாக்கினாய்
என் மீதான கனவுகளை நீ தாங்கி
உன் இரக்க விழிகளை
என் மீதான காவலனாக்கினாய்
உன் வயிற்றுக்குள் எனை சுமந்த தாயே
என் பசிதாலாமல் நான்
உன் வயிற்றை உதைக்கும் போது
உன் உணவில் எனக்கும் பங்கு கொடுத்து
என் பசிதீர்க்கும் பணிக்காக
உன் உடலுக்கு நான் கொடுத்த வருத்தங்கள்
என் உயிருக்கு நீ தந்த தடயங்கள்
உன் கருணையில் நான் சிரித்த நிமிடங்கள்
என் கருவிழியில் நீ புதைந்து கிடக்க வேண்டும்