சமகாலத்தில் உலக மக்களின் மனநிலை என்ன?

  • 34

இன்றைய மனிதன் தன்னுடைய சுய அடையாளம், சுயதன்மையை தொலைத்ததை கூட தெரியாமல் ஒவ்வொரு நாளும் பற்பல முகமூடிகளை அணிந்து சமூக வலைத்தளங்களில் அரிதாரம் பூசிய முகங்களோடு வலம் வருகிறான்.

சென்ற தலைமுறையோடு ஒப்பிடும் போது இன்றைய தலைமுறையினர் கண்முன் ஒரு உயிர் ஊசலாடும் போது அதற்கு கைகொடுத்து காப்பாற்றிய காலம் போய் இன்றைக்கு அதையே கானொளி எடுத்து WhatsApp, Facebook, YouTube போன்ற வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து அதிகப்படியான Likes பெறுபவர்களின் எண்ணிக்கையை இன்றைய சமூகத்தில் கண்கூடாக பார்க்கக்கூடியதாய் உள்ளது. இன்றைய சமகாலத்தில் அவர்களின் மனிதாபிமானம் கேள்விக்குறியாய் நிற்கிறது.

போலி பகட்டு

உள்ளுக்குள் ஆயிரம் கவலை, கஷ்டங்கள் இருந்தாலும் “நானும் வசதியாய் இருக்கிறன்,” (I Enjoy my life), “என் வாழ்க்கைத் துணையோட நானும் சந்தோஷமாய் இருக்கிறன்” (I m lucky to have U in my life partner), “நானும் விலையுயர்ந்த ஆடம்பர சாப்பாடுகள சாப்புடுறன்” (I went to KFC) என்பதை மக்களுக்கு காட்டுவதற்காக போலி பகட்டுக்காய் புகைப்படம் எடுத்து WhatsApp, Facebook, Instagram போன்ற வலைத்தளங்களில் Status போட்டு நம்மை நாமே ஏமாற்றுகின்ற மனநிலைமையையும் இன்றைய சமூகத்தில் பார்க்கக் கூடியதாகத்தான் உள்ளது.

அடுத்து தனிமையின் தாக்கம்

இன்றைய மனிதர்களின் காலடியில் அழகழகாய் அன்புப் பூக்கள் பூத்துக்கிடக்க அதை எட்டி உதைத்து விட்டு காகிதப் பூக்களுக்காக ஏங்கி சமூக வலைத்தளங்களில் தமது பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள்.

குடும்பத்தில் இருப்போரும் கோடிக்கொரு மூலையாய் ஒதுக்கி தொலைப்பேசியும், கையுமாய் இருப்பதனால் அங்கு சந்தோஷமான ஒரு தொடர்பாடல் துண்டிக்கப்படுகிறது. உறவுகளுக்கிடையில் தங்களது சுக, துக்கங்களை, உணர்வுகளை பகிர்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காததால் இன்றைய மனிதன் விரக்தி நிலைக்கு தள்ளப்படுகிறான்.

அதனால் இன்று Whatsapp Statusகளில் ” நான் தனிமையில் தவிக்கிறேன்” (I m feeling alone), “எனக்கு ஆறுதலாய் யாருமில்ல”, “எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சு” (I hate my life, I waiting for my death) என்று புலம்பி ஒரு போலியான உலகில் தங்களது விரக்தியை வெளிப்படுத்துகின்றனர்.

அவர்களுக்குத் தெரிவதில்லை. சந்தோஷம், மனநிம்மதி எல்லாம் நமக்குள்ளையே, நம்மை சுற்றியே தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமல் ஒரு மாயையான உலகில் பயணித்து அவைகளை வெளியே தேடி அலைந்து திரிகின்றனர்.

விடியாத இருளுக்குள் விடியலைத் தேடித் தேடி அலைந்து திரிந்து விளக்கில் வீழ்ந்த விட்டில் பூச்சிகளாய் அவர்கள் விதியோடு விளையாடுகின்றனர்.

அவர்கள் இந்த மாயையை உணர்ந்து அந்த வட்டத்தை விட்டு வெளியே வர வேண்டும்; இந்த மனநிலை அடுத்த தலைமுறையில் மாற வேண்டும் என்பதே எனது எதிர்ப்பார்ப்பாய் அமைகிறது. இன்றைய சமூகத்தில் நாம் ஒவ்வொருவரும் பொறுப்புணர்ச்சியோடு வாழ்ந்து நாளைய சந்ததியினருக்கு நல்வழி காட்டி சென்றிடுவோம்.

Nifra Nijam
Kochchikade,
Negombo.

இன்றைய மனிதன் தன்னுடைய சுய அடையாளம், சுயதன்மையை தொலைத்ததை கூட தெரியாமல் ஒவ்வொரு நாளும் பற்பல முகமூடிகளை அணிந்து சமூக வலைத்தளங்களில் அரிதாரம் பூசிய முகங்களோடு வலம் வருகிறான். சென்ற தலைமுறையோடு ஒப்பிடும் போது…

இன்றைய மனிதன் தன்னுடைய சுய அடையாளம், சுயதன்மையை தொலைத்ததை கூட தெரியாமல் ஒவ்வொரு நாளும் பற்பல முகமூடிகளை அணிந்து சமூக வலைத்தளங்களில் அரிதாரம் பூசிய முகங்களோடு வலம் வருகிறான். சென்ற தலைமுறையோடு ஒப்பிடும் போது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *