என் அகிலமே என் அன்னை!
-
by admin
- 1
வாசமில்லா
வாழ்க்கையும்
வசந்த
காலமாகும்
தாயின்
அருகினிலே!
வசந்தகால
வாழ்க்கையும்
வாடியே
போகும்
தாயில்லாத்
தருணத்திலே!
தனிமையின்
தாக்கங்கள்
கொல்லாமல்
கொல்லும்
தாயில்லாப்
பொழுதினிலே!
ஆண்டவனின்
அருளும்
அற்புதப்
பரிசாகும்
அன்னையின்
அன்பாலே!
இன்பத்தில்
இசையும்
இதய
ஒலியாகும்
தாயின்
ஈர்ப்பாலே!
அழகிய
காதலும்
அளவில்லா
நிலையடையும்
தாயின்
உள்ளத்தாலே!
புன்னகை
தேகமும்
பூங்காற்றின்
வசமாகும்
அன்னையின்
அகத்தாலே!
மழலையின்
குரலும்
அழகாய்
கவிபாடும்
அம்மாவின்
பாசத்திலே!
அன்பென்ற
சொல்லும்
கவியாய்
பிறப்பெடுக்கும்
அன்னையின்
மடியிலே!
கருமை
நினைவுகளும்
நிலவின்
ஒளியாகும்
தாயின்
சொல்லாலே!
நீ இல்லா
என்
வாழ்வும்
அநாதையானதே!
உன்
இழப்பை
எண்ணி
ஒவ்வொரு
நிமிடமும்
என் மனங்களோ
ரணங்களானதே!
அன்பின் உருவான என் அன்னைக்கே இவ்வரிகள் சமர்ப்பணம்.
என்றும் உன் பிரிவால் வாடும்
உன் அன்பு மகள்
Little Writer
Shahna Safwan
Dharga Town
வாசமில்லா வாழ்க்கையும் வசந்த காலமாகும் தாயின் அருகினிலே! வசந்தகால வாழ்க்கையும் வாடியே போகும் தாயில்லாத் தருணத்திலே! தனிமையின் தாக்கங்கள் கொல்லாமல் கொல்லும் தாயில்லாப் பொழுதினிலே! ஆண்டவனின் அருளும் அற்புதப் பரிசாகும் அன்னையின் அன்பாலே! இன்பத்தில்…