மென்டல்தானே கெம்பஸ் வரக்கும் படிக்க போ போகுது

திருப்பு முனை
பாகம் 30

காதியாருக்கோ பேரதிர்ச்சி.

“என்ன இது காக்காவும் தம்பியும் எதிர் எதிரா வந்து இரிக்கிறீங்க. இப்படி ஒரு வழக்கு நா இது தான் மொத மொதலா பாக்குறேன்.” என்றார். பின்னர்,

“என்னா பிரச்சின இவங்களுக்கு பிரியனும்டே சொல்றாங்க”

உடனே மாமா குறுக்கிட்டு,

“அது இவக்கு வாழ ஏலாதாமே ஹஸரத் டிவொர்ஸ்தான் வேணுமாம். அவங்க கேக்குறதயே குடுங்க.”

“அப்படி நீங்க சொல்ற மாதிரி அவசரத்துல குடுக்க ஏலாதே.”

ருஸ்னி மாமா,

“இல்ல ஹஸரத் ரெண்டு பேருக்கும் விருப்பம் தானே அதனால டிவோர்ஸ்அ குடுத்துடுங்க.” என்றார்.

பின்னர் காதியார் ஷரீப்பை பார்த்து,

“என்னா ஒங்களுக்கும் விருப்பமா இதுல”

எனக்கு விருப்பமில்ல ஹஸரத். இவ தான் புடிவாதமா இரிக்கிறா. குடுங்க அவக்கு.”

“என்னம்மா டிவோர்ஸ்தான் வேணுமா.”

“ம்ம் ஓ ஹஸரத்”

என்றாள் லீனா. பின்னர் ஷரீப்,

“அதும் இவக்கு சொகமில்லயே ஹஸரத். இவக்கு மென்டல்.”

என்ற மறுகணம் மாமா,

“ஓ ஹஸரத் இவக்கு மென்டல்தான். அவவே சொன்னாவே அவவ கவுன்ஸிலிங் கூட்டி போக சொல்லி.”

என்றார். இதை சற்றும் எதிர்பாராத லீனா உடைந்த கண்ணாடியை போல் சுக்கு நூறானாள். ஏற்கனவே தீக்காயங்களால் புண்பட்ட காயத்தை மீண்டும் வேல் கொண்டு குத்துவது போலிருந்தது அவளுக்கு, ஷரீப் சொன்ன வார்த்தையை விட தன்னை இத்தனை வருடம் வளர்த்து ஆளாக்கிய மாமா அப்படி சொன்னதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. இதை சற்றும் எதிர்பாராத ருஸ்னி மாமா,

“அவக்கு தேவல்லாத பட்டங்கள சாட்ட வர வானா. இவன் ஆம்புளயான்னு மொதல்ல செக் பண்ணுங்க. மொதல்ல இவன மெடிகல்கு போட்டு செக் பண்ணுங்க ஹஸரத்.”

“ஓ மென்டல்தானே கெம்பஸ் வரக்கும் படிக்க போ போகுது. மொத முடிச்சவக்கு சைகோ என்டான். இவக்கு இப்ப மென்டல் என்டுறான். இப்படி தான் ஹஸரத் இவன்வல் ஒவ்வொரு பொம்புள புள்ளட வாழ்க்கயில நல்லா கூத்து போட்டுட்டு. கடசில ஒவ்வொரு பட்டத்த குடுப்பானுவள். இவனுகளுக்கு வாழக் கேடு இவனுகளுக்கு எல்லாம் என்னத்துக்கு ஹஸரத் பொண்டாட்டி. இப்படி பட்டவன்களுக்கு பொண்ணே குடுக்க படாது. பொம்புள புள்ளட வாழ்க்கன்டா விளாட்டு இவனுக்கு, நல்லா விசாரிச்சி பாருங்க அப்ப வெளங்கும் யாருக்கு மென்டல் என்டு.”

என அவர் கோபமாக கூறினார். உடனே காதியார்.

“ஷ்ஷ். சத்தம் போட வானா இது கோர்ட்.” என்றார்.

சிறிய அமைதிக்கு பிறகு காதியார் வழக்கை அடுத்த மாதம் தள்ளுபடி செய்தார். வீட்டுக்கு வந்த லீனாவுக்கு மாமா கூறிய அந்த வார்த்தை தான் காதுக்குள் வீங் வீங் என்று ஒலித்தது.

‘எப்படி அவர்க்கு இப்படி ஒரு வார்த்தய சொல்ல மனசு வந்திச்சி. ஏன் இப்படி செய்றாரு. நா நல்லா இரிக்கிறது புடிக்குதில்லயா? எப்படி அத்தன பேர்ட முன்னுக்கு எனக்கு இப்பிடி ஒரு வார்த்தய சொன்னாரு. நா மென்டலா? அஸ்தஃபிருல்லாஹ். நா மென் ட ல். இல்ல. நா மென்ட ல். இல் லவே! இல் ல. நல்லா தானே இரிக்கிறேன் ரப்பே! யாருக்கிட்ட சொல்ல அல்லாஹ் நீயே ப்ருப் பண்ணு. நா மென்டல் இல்ல. எனக்கு ஒன்னும் இல்லன்னு ஒனக்கு தெரியும் தானே..அத எல்லார்க்கும் காட்டி வை ரப்பே ரொம்ப வலிக்குது.’ என்று பலவாறு தனக்குள் கதறிக் கொ‌ண்டிருந்தாள்.

அன்றைய நாள் முழுக்க அவள் பட்டினியோடு அழுது கொண்டே இருந்தாள். அவளால் அதை கொஞ்சம் கூட ஊகிக்க முடியவில்லை. அன்றைய நாள் அவள் யாருடனும் கதைக்கவில்லை. யாரும் வந்து அவளைப் பார்ப்பதையும் தவிர்த்தாள். காரணம் அந்த வார்த்தை தந்த அடங்காத வலிகளே அவளை பிறரிடம் இருந்தும் தனித்திருக்க செய்தது.

அப்போது ஹனா கோல் எடுத்திருந்தாள். அவளது அழைப்பை கண்டவள் தாயைக் கண்ட குழந்தையாய், ஓடிச் சென்று அவள் அழைப்புக்கு பதில் கொடுத்தாள்.

“வழக்குக்கு போனியா என்னாச்சி?”

“ஹனா! மா மா மாமா எனக் கு மென்ட ல் என்டாரு வா.” என்று அவளிடம் நடந்ததை கூறி கதறிக் கதறி அழுதாள். அவளது அழுகை ஹனாவை சங்கடப்படுத்தவே.

“அஸ்தஃபிருல்லாஹ். எப்படி மா இப்படி ஒரு வார்த்தய சொன்னாரு. ச்சீ.அவங்களுக்கு மனசாட்சியே இல்லயா பார்த்தியா லீனா சல்லி எப்படி எல்லாம் பேச வெக்குது. நீ இத நெனச்சி அழாத லீனா. இதுக்கெல்லாம் அவங்க பதில் சொல்ல வரும். அல்லாஹ் கிட்டயே எல்லாதயும் பாரம் குடுத்துடு ஓன்ட கண்ணீர்ட வலி படச்சவனுக்கு வெளங்காம இல்லடி அழாதம்மா தங்கம் டி நீ அழாத ஏன் இப்படி சொல்றாங்கன்டு தெரியுமா ஒனக்கு.”

“தெரியா ஹனா பாருங்களேன் இப்படி சொல்லிட்டாங்க.”

என்றாள் லீனா குழந்தையாக.

“கவல படாதடி நீ அவங்கட பேச்ச மீறி தானே வந்தாய். அவங்க அவ்வளவு சொல்லியும் நீ கேக்கல்லயே அதான் இப்படி செய்றாங்க. அதும் ஷரீப்ட கூத்துகள மறக்கிறதுக்கு தான் இப்படி பேசுதுகள். முழுப் பூசணிக்காய சோத்துல மறக்க பாக்குதுகள்.”

“இனி நீ இப்படி வாழா வெட்டியா இரிக்கனும்டு தான் ஒனக்கு இப்படி ஒரு கதய சொன்னாங்க. வெளங்குதா, பாரு இதுவல்ட மனசுல உள்ள வெஷத்த. இப்படி எல்லாம் ஒனக்கு சொல்றாங்க தானே அவங்கட முன்னுக்கு நீ நல்லா வாழ்ந்து காட்டு லீனா. ஒனக்கு யாரு என்னா கத கட்டினாலும் ஒனய பத்தி அல்லாஹ்க்கு தெரியும் நீ பயப்படாதமா. ஒனய தூக்கி வீசினவகட முன்னுக்கு அல்லாஹ்வே ஒனய தூக்கி காட்டுவான்மா நீ பொறுமயா இரி ஒனக்கு எந்த கெடுதலும் நடக்க அல்லாஹ் உட மாட்டான் லீனா. ஓன்ட கவல எல்லாதயும் அவன்டயே சொல்லி அழு லீனா. அவன் ஒனக்கு நல்ல வழிய காட்டுவான் தங்கம். அவங்களுக்கே தெரியும் ஒனக்கு பண்ணினது எவ்வளவு பெரிய பிழ என்டு. அத மூடி மறெக்க தான் ஒனக்கு இப்படி ஒவ்வொரு கத சொல்றாங்க. ஓன்ட கண்ணு முன்னுக்கே அல்லாஹ் எல்லாதயும் காட்டி தருவான். கலங்காத லீனா. இதுகள மறந்துட்டு புதுசா எழும்பி வா. எப்பவும் ஒனக்கு அல்லாஹ் தொனயா இரிக்கிறான். இதுவே அவஙட மகளுக்கு நடந்து இருந்தா அப்ப சல்லிய விட மகள்ட கண்ணீர் தான் பெருசா இருந்திருக்கும். நீ பொறத்தியே அதான் ஒன்டும் வெளங்குதில்ல.”

“ம்ம். உண்ம தான் ஹனா.”

சிறிது நேரம் பேசி விட்டு அழைப்பை துண்டித்தாள் லீனா. ஹனாவுடன் பேசியது அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

ஆனால் சட்டென்று சொல்லப்பட்ட அந்த ஒற்றை வார்த்தை ஆரம்பத்தில் லீனாவுக்கு மரண வலியை தந்தாலும் அதுவே அவளுக்கான பழி தீர்க்கப் போகும் ஆயுதமாக மாறும் என்பதை முன்பே அறிந்திருந்தால் இப்படி ஒரு வார்த்தையை அவர்கள் கூறவே நா எழாமல் தயங்கி நின்றிருப்பார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

இன்று லீனாவை முடக்கி விட அவர்கள் செய்த இந்த சதி நாளை அவர்களுக்கே விழப்போகும் இடி என்பதை யார் அறிவார்?

உங்களிடம் சொல்ல மறந்துட்டேன். முக்கியமான விஷயம் ஒன்னு. என்ன தெரியுமா? ரொம்ப யோசிக்காதீங்க. நானே சொல்லிட்றேன் லீனா யுனிவர்ஸிடிக்கி ஸெலெக்டெட் ஆகிட்டா. அதனால தான் ருஸ்னி மாமா கோர்ட்ல அப்படி சொன்னாரு. அவர் அப்படி சொல்லும் போது நீங்க எப்படின்னு கேட்டது எனக்கும் கேட்டிச்சி. எப்படின்னு கேக்குறீங்களா? அதானே ஆரம்பத்துலயே அவக்கும் சேர்த்து தான் ஸ்கூல் ஆள அட்மிஸன் அப்ளை பண்ணிணாங்க. அவட டொகியுமென்ட் எல்லாம் பிரென்ட் கிட்ட இருந்துச்சி தானே. இந்த வழங்கு போட முன்னமே அவக்கு யுனிவர்ஸிட்டி ல இருந்து லெட்டெர் வந்துட்டு. நீங்க இப்போ சந்தோசப்படுறது எனக்கும் தெரியுது. Surprise காக உங்கள்ட சொல்லாம மறச்சிட்டேன். பார்த்தீங்களா? அல்லாஹ் அவக்கு ஒரு வழிய காட்டிட்டான் இல்லயா. இது போதாதா அவ மென்டல் இல்லன்னு உலகறிய செய்றதுக்கு

தொடரும்
Noor Shahidha
Badulla
SEUSL

Author: admin