அம்மா
உனக்காக ஒரு கடிதம்
அம்மா நீ பெற்ற பிள்ளை
கண்ணீருடன் எழுதும் ஒரு கடிதம்
ஏமாற்றும் உலகில் என்னை
நீ பெற்று விட்டாய்
நானோ யார் பேச்சை நம்புவதென்றே
தெரியாமல் ஏமாந்து போகின்றேன்
புன்னகைப்பாய் என்னை பார்க்கின்றனர்
ஆனால் மறுபுறம் பார்த்தாலோ
அவர்கள் அனைவரும்
விஷம் கொண்ட தேள்கள்
உடன் பிறவி கூட துரோகி யாக
இருக்கின்றான்
நம்பி காதலித்தவன் கூட
கைவிட்டுச் செல்கின்றான்
இறைவன் படைப்பில்
இந்த உலகம் மட்டும் தான்
இப்படி மோசமானதாக
இருக்க வேண்டும்
சுயநலவாதிகளும், நயவஞ்சகர்களும்
உலாவித் திரிகின்றனர்
அம்மா நீயோ என்னை பெற்றவுடன்
இறைவனடி சேர்ந்து விட்டாய்
நானோ இங்கே பச்சோந்தி யாக
மாற பயிலப்போகிறேன்
என்னை மன்னித்து விடு