எட்டா கனிக்கு கொட்டாவி விடுறேன்

  • 14

ஊமைக் காதல் நாடகம்
காட்சி :- 02

களம் :- மஸ்கெலியா கிராமம்
கதாபாத்திரங்கள் :- ராதன் (கதாநாயகன்)
இனியா (கதாநாயகி)
கெளதமி (இனியாவின் நண்பி)
பாரதி (எஸ்டேட் முதலாளி, இனியாவின் தந்தை)
கோபால் (ராதனின் நண்பன்)
சங்கர் (வைத்தியர், ராதனின் நண்பன்)
கிரிஷ் (இனியா கல்வி கற்கும் பாடசாலை ஆசிரியர்)
சுந்தரம் (தேநீர் கடைக் காரன்)
சேகர் (ஊர் வாசி ஒருவர்)
(இனியா, ராதன் இருவரும் இருவரையும் நினைத்து கனங்களை கழித்து வந்த காலப்பகுதியில் இனியா வைத்து விட்டு சென்ற தங்கச் சங்கிலியை அடகு வைத்து வெளிநாடு செல்லவும் ராதன் தயாராகி இருந்தான். இந் நிலையில் இனியா ராதனின் காதல் கதையில் ஒரு திருப்புமுனையான சம்பவம் இடம்பெற்றது. இனியாவின் ஊருக்கு ராதனுக்கு வரும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னரான நிகழ்வு தொடரவிருக்கின்றன.)

சங்கர் :- ராதன் நீங்க சமீபகாலமா நித்திரயில கூட ஊரும் ஒரு ஊர் இதோ.

ராதன் :- ஆகா! நண்பா யேன்டா என்கிட்ட முன்னாடியே சொல்லல? நாம இங்க தான் வரப்போரம்னு!

கோபால் :- சொன்னா மட்டும் விட்டுருவியா? ராத்திரியே போகனும்னு சொல்லியிருப்ப.

சங்கர் :- ராதா நாம இங்க ஒரு கேன்ஸர் பேஷன்ட்கு நிதி சேகரிக்குர வேலக்காக வந்திருக்கம். பாவம் அந்த பொண்ணு இப்ப தா 16 வயசு. ஆனா அவளோட உசுர காப்பாத்த 8 லட்சம் காசு வேனும்!

ராதன்:- கடவுளே நம்ம ஊர்ல இப்படி ஒரு பிரச்சனயா? அம்மா நேத்து இதத்தா சொல்லிகிட்டு இருந்தா போல, நீங்க எஸ்டேட் பக்கம் போனதாகவும், அந்த ராஜன் ஒங்களுக்கு நூறு ரூபா கொடுத்து அனுப்பி விட்டதாகவும் சொன்னாங்க. ஆனா காதுல முழுசா காதுல வாங்கல

கோபால் :- இப்ப நம்மலோட கைல 4 லட்சம் இருக்கு. இன்னும் 4 லட்சம் வேனும் அந்த பொண்ணுக்கு, பாவம்டா அந்த பொண்ணு.

ராதா :- இப்ப நாம எப்படி வீடுங்கள தெரிஞ்சிக்கிறது? இந்த ஊர்ல யாராச்சும் தெரிஞ்ச ஒருத்தர் இல்லயா சங்கர்?

கோபால் :- தெரிஞ்சவர் எதுக்குடா? அந்தப் பொண்ணு வீட்டுக்கு போகவாடா? ஆ! ஆ!

சங்கர் :- இங்க காதல் ஏதும் வேனாம் கண்மனியே! கருணை கதவை திறந்து கொள்ளுங்கள். ஆமா ராதா இங்க எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்காரு. அவரு என்னோட கெம்பஸ்ல ஒன்னாக படிச்சவரு. அவரு தா நம்மலுக்கு ஒதவி செய்றதா சொன்னாரு. சோ நாம சிரமப்பட வேண்டியதில்ல.

கோபால் :- அதோ ஒரு ஆளு கைகாட்டி கிட்டு நிக்கிறாரு அவரானு பாருங்க.

சங்கர் :- அடடா அவரே தா, ஹாய் நண்பா.

சேகர் :- ஹாய் என்னடா ஹாய்? வணக்கம் சொல்லுடா. இந்தாங்கடா பிரசாதம் இதுல விபுதியும் இருக்கு எடுத்துக்குங்க.

சங்கர் :- நன்றி நண்பா எதுக்குடா விபுதி எல்லாம்? கோயிலுக்கு போனியா?

சேகர்:- ஆமா நண்பா நாம செய்யப் போற காரியம் நல்லதா அமயனும்னு தான்.

ராதா :- ரொம்ப நல்லது. நண்பரே இப்படித்தா இருக்கனும்.

(இப்படியாக நிதி சேகரிக்கும் பணியில் சென்று கொண்டிருக்கும் போது மதிய நேரம் ஆகி விட்டது. தாகத்திற்காக தேநீர் அருந்த ஒரு கடையருகில் அனைவரும் அமர்ந்தனர்.)

சேகர்:- சுந்தரம் அண்ணே நாழு டீ அதோட நாழு கீரவட கொடுங்க.

சுந்தரம் :- ஆகா சேகர் தம்பி என்னப்பா எப்படி இருக்க? என்னப்பா இது புது மொகங்கல கூட்டிகிட்டு எங்க போற? ஏதாச்சும் வேலயா??

சேகர் :- அதான் நா சொன்னேனே சுந்தரம் அண்ணே. நுவரெலியால ஒரு கேன்ஸர் வந்த பொண்ணு, அந்த பொண்ணுக்கு ஆபரேஷன் பண்ண 8 லட்சம் பணம் வேனும்! அதுக்கு பணம் சேத்த தா இவங்க வந்திருக்காங்க.

சங்கர் :- அண்ணனுக்கு முடியும்னா ஒங்களயும் ஒதவி செய்யலாம். ஏதோ ஒங்களால முடிஞ்சது?

சுந்தரம் :- அட அதுக்கென்னப்பா அத சொல்லிகிட்டு. இந்தாங்கப்பா ஏதோ என்னால முடிஞ்சது. இம்புட்டு தா என் கிட்ட இருக்கு.

சங்கர் :- அடடா இது கூட எனக்கு பெரிய தொக தா, ரொம்ப நன்றிங்க.

ராதன் :- மஸ்கெலியா முதலாவது லயன் தோட்டம் எந்த பக்கம்? எப்புடி போறது? சொல்ல முடியுமா?

சுந்தரம் :- அதோ எடது பக்கத்தால திரும்புற வீதியிருக்கே அதால தான் போகனும். அந்த பக்கம் கொஞ்சம் சல்லிக்கார பயலுங்க இருக்கானுங்க போய்ப் பாருப்பா.

கோபால் :- அப்படியே வீட்டு முகவரியும் கேட்டுக்க ரொம்ப லேசா இருக்கும்.

ராதன் :- சும்மா இருடா கேட்டுப் போவுது.

சுந்தரம் :- யாரோட வீடுப்பா சொல்லுங்க?

ராதன் :- இல்ல என் நண்பன் ஒருத்தன் அவன் அங்க தா இருக்கான்.

(இப்படியாக தேநீர் அருந்தி விட்டு மீண்டும் தமது பணியை ஆரம்பித்து இனியா இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு பகுதியை அண்மித்து விட்டனர்.)

ராதன் :- ஐய்யா வீட்டுல யாராவது இருக்கீங்களா? அம்மா!

கெளதமி :- யாரது? வீட்ல யாரும் இல்ல நா மட்டும் தான் இருக்கேன் சொல்லுங்க.

ராதன் :- நாங்க ஒரு நிதி சேகரிக்கும் வேலயா வந்திருக்கம். கேன்ஸர் பேஷன்ட்கு ஒரு பொண்ணுக்கு காசு சேக்குறம்.

கெளதமி :- இந்தாங்க அண்ணா இதுல கொஞ்சம் பணம் இருக்கு எடுத்துக்குங்க. இல்லாத பொண்ணுனு வேற சொல்றிங்க.

ராதன் :- ஆகா 500 ரூபா ரொம்ப நன்றிம்மா, இவ்வளவு பெரிய காசு. ஆமா நீங்க ஸ்கூல் போரீங்களா? படிப்பெல்லாம் எப்படி போவுது?

கெளதமி :- ஆமா அண்ணா நா இப்ப தா ஏ. எல் செஞ்சிக்கிட்டு இருக்கேன்.

ராதன் :- எனக்கு ஒரு வீட்ட தெரிஞ்சிக்கனும். சொல்லி கொடுக்க முடியுமா?

கெளதமி :- யாரோட வீடோ? முகவரி சொல்லுங்க பாக்கலாம்.

ராதன் :- இனியா பாரதி, மஸ்கெலியா முதலாவது லயன் அப்பிடின்னு போட்டிருந்தாங்க.

கெளதமி :- ஓஹோ, அவரு நீங்க தானா? ராதன் தானே நீங்க கேள்விப் பட்டேன் கேள்விப் பட்டேன்.

ராதன் :- அடடா நீங்க யாரு இனியாவ தெரியுமா? சொல்லுங்க ப்லீஸ்.

கெளதமி :- இனியாவோட வீடு என்னோட வீட்டுல இருந்து இருபதாவது வீடு. நா தா சொன்னேன்னு சொல்லிடாதீங்க புரிஞ்சிதா!

ராதன் :- ரொம்ப நன்றிங்க. இந்த ஒதவிய நா மறக்கவே மாட்டேன்.

கெளதமி :- இருக்கட்டும் இருக்கட்டும். இதுக்கென்னே கெழம்பி வந்திருக்காங்க.

(இனியாவின் வீடு இருக்கும் இடம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடனே விரைந்து செல்கிறான் ராதன்.)

சங்கர் :- ராதன் என்ன முகத்துல மலர்ச்சி தெரிது என்ன விஷயம்?

ராதன் :- நா தேடுன எடம் கெடச்சிரிச்சி. இனி போய் பாத்துட வேண்டியதுதான்.

கோபால் :- அடடா மச்சான் நாம இங்க எதுக்கு வந்தோம் அத மறந்துடாத சரியா? கொஞ்சம் பொருத்துக்கடா.

ராதன் :- அவள ஒரு தடவ பாத்துட்டா போதும்டா. நா உசுரு பொளச்சிடுவன்.

சேகர் :- வாங்க நம்ம சேரோட வீட்டுக்கு போகலாம். அவரும் ஏதாச்சும் ஒதவி பண்ணுவாரு.

சங்கர் :- சார் வணக்கம். சார் யாராவது இருக்கீங்களா?

கிரிஷ் :- யாராது? யாரு வாங்க உள்ள வாங்க என்ன விஷயம் சொல்லுங்க?

சேகர் :- ஒரு பொண்ணுக்கு கேன்ஸர் அதுக்கு ஆபரேஷன் விஷயமா சல்லி சேத்திகிட்டு வாறோம். சாருக்கு இந்த புண்ணியத்துல பங்கு பெறன்ம்னு ஆச இருந்தா!

கிரிஷ் :- அதுக்கென்ன தாராளமா இதுக்கும் ஒரு மனுஷன் ஒதவி பண்ணாம இருக்க முடியுமா?

சேகர் :- எப்படி இருக்கு சார் நம்ம ஸ்கூல்ல நெலவரம்? பிள்ளைங்க எல்லாம் நல்லா படிக்கிறாங்களா?

கிரிஷ் :- பரவால்ல சேகர் இன்னம் கொஞ்சம் முன்னேத்தனும். இனியா, கெளதமி ரெண்டுமே கெட்டிக்காரிங்க. அவளுங்க பொளச்சிக்குவாங்க. சேகர் இந்தாங்க ஏதோ என்னால முடிஞ்சது.

சங்கர் :- அடடா ஐந்தாயிரம் ரூபா ரொம்ப பெரிய பணம். ரொம்ப நன்றி சார்.

கிரிஷ் :- இது என்ன பெரியதொக? நீங்க பாரதி தொர வீட்டுக்கு போங்க அவரு எம்புட்டு தர்ராருன்னு பாருங்க.

சேகர் :- அடடா நா மறந்தே போயிட்டேன். அவரு ஏதாச்சும் பெருசா பண்ணுவாரு. சரி சார் ஒதவிக்கு ரொம்ப நன்றி.

கிரிஷ் :- ரொம்ப நல்லது.

கோபால்:- அடடா இம்புட்டு பெரிய ஊரா காலெல்லாம் ரொம்ப வலிக்குது. இன்னும் இருக்குதா?

சங்கர் :- இன்னும் கொஞ்சம் தான் சீக்கிரமா போயிடலாம்.

(ஒரு வழியாக அனைவரும் இனியாவின் வீட்டை வந்தடைந்தனர். மாளிகை போன்ற வீட்டை கண்டதும் அனைவரும் உரைந்து போய் நின்றனர். இவர்கள் அங்கு சென்ற நேரம் வாயிற் காவலன் கூட இருக்கவில்லை. வீடு திறந்தே இருந்தது. வீட்டின் வாயிலைக் கண்டதுமே ராதனின் மனம் கலங்கிப் போனது. தான் ஆகாயத்தில் கோட்டை கட்ட ஆசைப் படுகிறேனோ? என்ற எண்ணம் ஊசலாடத் தொடங்கியது.)

சங்கர் :- பேசட்டுமா சேகர்?

சேகர் :- ஆமா பேசுங்க சங்கர் யாராவது வாராங்களானு பாப்பம்.

சங்கர் :- தொர! தொர! ஐய்யா ஐய்யா. வீட்டுல யாராவது இருக்கீங்களா?

இனியா :- அப்பா! அப்பா! வெளில யாரோ நம்மல பேசுற மாதிரியே இருக்கு போய்ப் பாருங்கப்பா.

பாரதி :- அம்மா அப்பா சீக்கிரமா வாரே அம்மாவும் வீட்டுல இல்ல. போய் அவங்கள உள்ள வர சொல்லு.

இனியா :- அடடா சேகர் அங்கிள். உள்ள வாங்க அப்பா உள்ள வேலயா இருக்காரு இப்ப வந்துடுவாரு.

(இனியாவின் குரல் கேட்டதும் வரைந்து உள்ளே வர முற்பட்ட போதும் சிறிது அச்சம் ராதனை பின்வாங்க செய்தது.)

சேகர் :- எப்புடிமா இருக்க? நல்லா படிக்கிறியா? அம்மா எங்க?

இனியா :- நல்லா தா இருக்கேன், அம்மாவும் தங்கச்சியும் கோயிலுக்கு போயிருக்காங்க ஏதோ படிக்கிறேன்.

இனியா :- அப்பா! அப்பா! சேகர் அங்கிள் யாரோ நாழஞ்சி பேற கூட்டிகிட்டு வந்திருக்கீருப்பா. நா போயி டீ போட்டுட்டு வர்ரேன்.

பாரதி:- வணக்கம் சேகர். எப்படி இருக்கீங்க நலமா? அடடா எல்லாரும் உக்காருங்க.

சேகர் :- வணக்கம் வணக்கம் தொர நான் நல்ல நலம். தொர எப்படி இருக்கீங்க நலமா பெக்டரி வேல எல்லாம் எப்படி போவுது?

பாரதி:- இந்த 80 ஏக்கர் நெலத்துலயும் கொழுந்து நாட்டி போட்டிருக்கேன். ஒரு பெக்டரி வெச்சிருக்கேன். வேல எல்லாம் ஏதோ போவுது. கொஞ்சம் சிக்கல் தான்.

சேகர் :- நா இவங்கள கூட்டி வந்த விஷயம் என்னான்னா. இவரு டாக்டர் சங்கர்.

சங்கர் :- வணக்கம் ஐய்யா நான் டாக்டர் சங்கர். இவரு என் நண்பன் ராதன், அவரு கோபால். நாம ஒரு கேன்ஸர் பேஷன்ட்கு நிதி சேகரிக்க வந்திருக்கம். 8 லட்சம் ஆபரேஷனுக்கு ஒங்களால முடிஞ்ச ஒதவிய நீங்க பண்ணலாம்.

பாரதி :- அம்மா இனியா அந்த அலுமாரில வெள்ள நிறப் பைல ஒரு சாமான் இருக்கு அத எடுத்துட்டு வாமா.

இனியா :- ‘அடடா என்னோட ராதன நா பாக்க போறேன். கடவுளே எப்படி இருக்கு தெரியுமா? அவரு கிட்ட போய் கட்டி புடிச்சிக்கனும் போல இருக்கு.’

(இனியா பாரதியிடம் தேநீரையும், பையையும் கொடுக்கும் தருவாயில். மனதால் நினைத்துக் கொண்டாள் )

ராதன் :- ஐய்யா! பாத்ரூம் எங்க இருக்கு கொஞ்சம் சொல்ல முடியுமா?

இனியா :- (இனியாவின் முகம் வாடிப் போனது.) நான் இவ்வளவு அழகா உடுப்ப எல்லாம் போட்டு வந்தா நீ இப்படி என்ன பாக்காம போறியே ராதா? (என மனதால் வேதனை அடைந்தால்)

பாரதி :- அதோ அப்படி எடது பக்கம் திரும்புப்பா. இந்தா டீ இருக்கு எல்லாரும் எடுத்துக்குங்க. இந்தாங்க டாக்டர் இதுல இருக்குற பணம் சரியா இருக்காண்ணு பாருங்க.

சங்கர் :- அடடா ஒரு லட்சம் ரூபாயா! உங்களுக்கு எல்லா விதமான புண்ணியமும் கெடக்கணும். ராதா இங்க பாருடா.

ராதன் :- நீங்க ரொம்ப பெரிய மனுஷன் ரொம்ப பெரிய ஒதவி பண்ணிருக்கீங்க. ரொம்ப நன்றி எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.

பாரதி :- இந்த 80 ஏக்கர் தோட்டத்துல கண்ணுக்கு எட்டு தூரம் வரக்கிம் தெரிற தோட்டம் முழிசா என்னது. இந்த ஒதவி கூட பண்ணாம இருப்பனா? எப்படியோ நோயாளி பொழச்சிட்டா சரி.

(பாரதியின் வீட்டில் தேநீரும் வழங்கப்பட்டது, அதிலும் ராதனின் தேநீர் மாத்திரம் அரைவாசி மீதமாக அப்படியே இருந்தது. பாரதி வெளிப்படையாக தனது பலத்தை காட்டா விட்டாலும் மறைமுகமாக சொன்ன வார்த்தைகள் ராதனை தாக்கியது.)

(வேலை முடிந்து மீண்டும் ஊருக்கு திரும்புகையில்)

கோபால் :- யே ராதா நீ அந்த பொண்ண பாக்கல? கண்ணு கலங்கின படியே போனிச்சிடா!

ராதன் :- அந்த வீட்ட கண்டதுமே புரிஞ்சது. நா எட்டா கனிக்கு கொட்டாவி விடுறேனு. ஆகாயத்துல கோட்ட கட்ட ஆசப்படுறேனு.

கோபால் :- இருந்தாலும் கொஞ்சம் பாத்திருக்கலாம்ல. பாவம் டா அவ.

ராதன் :- பாவம் தான் டா ஆனா, எனக்கு என்னமோ மாறி ஆகுதுடா.

சங்கர் :- பெருமத்தனம் அடிச்சவன் பூமில பொதஞ்சிடுவான். என்ன தா பாரதி 80 ஏக்கர் நெலம் உள்ள பணக்காரனாக இருந்தாலும் மனசளவுல அவரு ஒரு ஏழை.

ராதன் :- இருந்தாலும் சங்கர். அவளோட மொகத்த பாக்க கூட எனக்கு தகுதி கெடயாது. நான் ஒரு தெருக்கோடி அவளோட பாக்கும் போது, ஆனா நா அப்படி பண்ணிருக்க கூடாது.

சங்கர் :- காலம் இன்னும் இருக்கு ராதா. இப்ப நீ இருக்குற நெலமக்கி பின்னாடி அவரு மாறவும் கூடும்.

ராதன் :- அட போடா நண்பா.

(இங்கே ராதனின் மனக்குமுறல் இவ்வாறு இருக்க இனியா அழுது மடிந்தாள்.)

இனியா: – கடவுளே நா எவ்வளவு எதிர் பார்த்தேன். எதுக்கு இப்படி பண்ணுணாரு. என்ன தல நிமுந்து பாக்கல்லயே? நா மட்டும் பாத்துக்கிட்டேன். மனசு வலிக்குது. பழம் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டலயே. யேன் ராதா என்ன பாக்காம போனிங்க? இந்த பணம், பெறும எல்லாம் எனக்கு வேனாம். ஒங்களோட வியர்வ வாசணயே எனக்கு சொர்க்கம் தான்.

(இப்படியாக அருகில் இருந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள இயலாத நிலை உருவானது. இனியா வாழும் செல்வச் செழிப்பான வாழ்க்கை தன்னால் கெட்டுவிடுமோ எனும் ராதனின் பயமும், பணம், புகழ் வேண்டாம் நீ மட்டும் போதும் என்ற இனியாவின் மனப் போராட்டத்துக்கும் இடையில், “ஊமைக் காதல்” இன்றைக்கு முடிகிறது.)

இனியா- ராதன்
ஊமைக் காதல் தொடரும்
Fathima Badhusha Hussain Deen
Faculty of Islamic Studies and Arabic Language
South Eastern University of Sri Lanka

ஊமைக் காதல் நாடகம் காட்சி :- 02 களம் :- மஸ்கெலியா கிராமம் கதாபாத்திரங்கள் :- ராதன் (கதாநாயகன்) இனியா (கதாநாயகி) கெளதமி (இனியாவின் நண்பி) பாரதி (எஸ்டேட் முதலாளி, இனியாவின் தந்தை) கோபால்…

ஊமைக் காதல் நாடகம் காட்சி :- 02 களம் :- மஸ்கெலியா கிராமம் கதாபாத்திரங்கள் :- ராதன் (கதாநாயகன்) இனியா (கதாநாயகி) கெளதமி (இனியாவின் நண்பி) பாரதி (எஸ்டேட் முதலாளி, இனியாவின் தந்தை) கோபால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *